வைரலாகும் Nano Banana Saree ட்ரெண்டிங்: இதை உருவாக்குவது இவ்வளவு ஈஸியா?

Nano Banana saree AI image
Nano Banana AI image
Published on

சமூக வலைத்தளங்களை இன்று ஆக்கிரமித்துள்ள ஒரு ட்ரெண்ட் என்றால் அது 'நானோ பனானா' (Nano Banana)' என்ற AI- ஆல் உருவாக்கப்பட்ட ரெட்ரோ ஸ்டைல் saree படங்கள். இந்த AI-உருவாக்கிய படங்கள், இந்தியப் பெண்களின் அழகிய முகங்களையும், மென்மையான சிவப்பு நிறப் புடவைகளையும், மல்லிகைப்பூக்களையும் இணைத்து பாரம்பரியத்துடன் கூடிய ஒரு புதிய டிஜிட்டல் கலையை உருவாகுக்கின்றன. இது வெறும் டிஜிட்டல் ஆர்ட் மட்டுமல்ல, ஒரு விதமான கடந்த காலத்தின் நினைவுகளை மீண்டும் தூண்டும் வகையிலும் உள்ளது. இந்தப் புதிய டிஜிட்டல் கலை, கூகுளின் 'Google Gemini' AI கருவி மூலம் சாத்தியமாகியுள்ளது.

மெல்லிய வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரெட்டிரோ சேலைகள் முதல், கணினி மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் மினியேச்சர் 3D உருவங்கள் வரை, இந்த AI தொழில்நுட்பம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

ஜெமினி கருவியைப் பயன்படுத்தி, நாம் ஒரு சாதாரண புகைப்படத்தை ஒரு கனவுலகப் படமாக மாற்றிவிடலாம். குறிப்பாக, இந்த 'நானோ பனானா சேலை' ட்ரெண்ட்டில் சிவப்பு நிறப் புடவையணிந்த இந்தியப் பெண்களின் படங்கள் வெகுவாக உருவாக்கப்படுகின்றன. அதில் அலை அலையாகப் பறக்கும் கூந்தலும், காதருகே செருகிய மல்லிகைப்பூக்களும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்த படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்பது புரிந்தாலும், அவற்றின் நுட்பமான விவரங்கள் நம் கண்களை ஒரு நொடிக்கு ஏமாற்றப் போதுமானதாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
🔥டிரெண்ட் ஆகனும்னா இது போதும்! போட்டோவை AI-கிட்ட கொடுத்தா உங்க உருவமே இப்படி மாறிடும்!
Nano Banana saree AI image

இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு, 'ஸ்டுடியோ கிப்லி' (Studio Ghibli) பாணி குடும்பப் படங்கள் மற்றும் அனிமேஷன் பாணி செல்லப்பிராணி படங்களும் வைரலாகியுள்ளன.

கூகுளின் ஜெமினி AI கருவி இலவசமாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. ஒரு சாதாரணப் புகைப்படத்தை சூப்பரான போர்ட்ரெய்டாக மாற்ற, நீங்கள் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, சில குறிப்புகளை உள்ளிட வேண்டும்.

இந்தக் குறிப்புகள், முகத்தின் அசல் தன்மையை மாற்றாமல், ஒரு குறிப்பிட்ட பின்னணியுடன் கூடிய ஒரு படத்தை உருவாக்க ஜெமினிக்கு உதவுகின்றன. மேலும், இந்தக் கருவி 3D மாடலிங் செய்வதற்கும் உதவுகிறது. 2D புகைப்படங்களை ஒரு 3D பொம்மையைப் போல மாற்றி, அதை ஒரு சேகரிப்புப் பொருளாகவும் மாற்ற முடியும்.

இதையும் படியுங்கள்:
கோலத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? கணித மேதை யூலர் போட்ட முதல் புள்ளி!
Nano Banana saree AI image

'நானோ பனானா' ரெட்ரோ சேலை படத்தை உருவாக்குவது எப்படி?

  • முதலில், கூகுள் ஜெமினி (Google Gemini) அல்லது கூகுள் AI ஸ்டுடியோக்குள் (Google AI Studio) நுழையவும்.

  • நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படத்தை பதிவேற்றவும். பதிவேற்றும் படத்தில் உங்கள் முகம் தெளிவாக zoom-ல் இருக்கும்படி இருப்பது சிறந்தது.

  • குறிப்புகளை (prompt) டெக்ஸ்ட் பாக்ஸில் காப்பி-பேஸ்ட் செய்யவும்.

    'Convert, 4k HD realistic, A stunning portrait of (உங்களுக்கு எந்த ஸ்டைலில் வேண்டுமோ அதற்கேற்ற குறிப்புகளை பதிவிடவும்.) பிறகு, I want the same face as I uploaded, no alteration, 100 percent same. The overall mood is retro and artistic.'

  • Generate பட்டனை கிளிக் செய்து, உங்கள் படம் தயாராகும் வரை காத்திருக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com