கவனமா இருந்தா காது கேட்கும்! உங்க மூளை எப்படி 'மியூசிக் டைரக்டர்' மாதிரி வேலை செய்யுதுன்னு பாருங்க!

Focus
Focus
Published on

நாம எல்லாரும் இதை அனுபவிச்சிருப்போம். ஒரு முக்கியமான பரீட்சைக்குப் படிக்கும்போது, அல்லது ஆபீஸ்ல ஒரு அவசர வேலையில மூழ்கி இருக்கும்போது, பக்கத்துல நடக்குற சத்தம், வண்டி சத்தம்னு எதுவுமே நம்ம காதுல விழாது. ஆனா, நமக்குத் தேவையான சின்ன சத்தம் மட்டும் துல்லியமாக் கேட்கும். இது எப்படி நடக்குது? 

"இதுதான் கவனம்!" அப்படின்னு சிம்பிளா சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா, இதுக்குப் பின்னாடி நம்ம மூளைக்குள்ள ஒரு பெரிய 'சூப்பர் ஸ்மார்ட்' டெக்னிக்கே நடக்குதுன்னு ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. 

பழைய நம்பிக்கை!

இதுவரைக்கும் விஞ்ஞானிகள் என்ன நினைச்சுக்கிட்டு இருந்தாங்கன்னா, நாம ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்போது, நம்ம மூளை ஒரு ரேடியோ மாதிரி செயல்படுதுன்னு நினைச்சாங்க. அதாவது, தேவையில்லாத சத்தத்தோட 'வால்யூம்' பட்டனைக் குறைச்சிட்டு, நமக்குத் தேவையான சத்தத்தோட 'வால்யூம்' பட்டனை மட்டும் அதிகமாக்குதுன்னு நம்பினாங்க. ஆனா, பேராசிரியர் இஸ்ரேல் நெல்கன் தலைமையிலான ஆய்வுல, விஷயம் அது இல்லைன்னு தெரிய வந்திருக்கு. 

புதிய கண்டுபிடிப்பு!

உண்மை என்னன்னா, நாம ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, நம்ம மூளையோட ஒலி மையம் சும்மா வர்ற சத்தத்துக்கெல்லாம் எதிர்வினையாற்றுவதை நிறுத்திடுதாம். அதுக்குப் பதிலா, நாம செய்ற வேலையோட வேகம், அதோட 'தாளம்' என்னன்னு புரிஞ்சுக்குது. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பெரிய சிவப்பி
Focus

உதாரணத்துக்கு, நீங்க ஒரு வீடியோ கேம் விளையாடும்போது, அடுத்த எதிரி எப்போ வருவான், அந்த சத்தம் எப்போ கேட்கும்னு மூளை முன்கூட்டியே கணிக்க ஆரம்பிக்குது. ஒரு மியூசிக் பேண்ட்ல, எல்லாரும் கரெக்டா அந்த தாளத்துக்கு ஏத்த மாதிரி வாசிக்கிற மாதிரி, நம்ம மூளையும் அந்த வேலைக்குத் தேவையான சத்தத்துக்கு மட்டும் 'ட்யூன்' ஆகிடுதாம்.

எப்படி இது வேலை செய்யுது?

இந்த நேரத்துல மூளை, தேவையில்லாத சத்தங்களைக் கொண்டு வர்ற நரம்பியல் இணைப்புகளைத் தற்காலிகமா 'பலவீனப்படுத்தி' விடுது. அதாவது, பக்கத்து வீட்டு டிவி சத்தத்தை அது கண்டுக்கவே கண்டுக்காது. அதனால, நம்ம மூளை ஒரு 'வால்யூம் நாப்' மாதிரி இல்லாம, ஒரு அதி புத்திசாலியான 'ஃபில்டர்' மாதிரி செயல்படுது. எது தேவையோ அதை மட்டும் வடிகட்டி, எது தேவையில்லையோ அதை கச்சிதமா தடுத்து நிறுத்திடுது. இதனாலதான், நூறு பேர் பேசற சத்தத்திலேயும், நம்ம பேர் சொன்னா மட்டும் காதுல டக்குனு விழுது.

இதையும் படியுங்கள்:
Alert! 20 வயதிலேயே மூட்டு வலியா? காத்திருக்கும் பெரிய ஆபத்து!
Focus

இது ஒரு பெரிய விஷயம். இந்தக் கண்டுபிடிப்பை வச்சு, எவ்வளவு பெரிய இரைச்சலான இடத்திலேயும், பேச்சுகளைத் தெளிவாகப் பிரிச்சுக் காட்டற சூப்பரான கருவிகளை உருவாக்க முடியும். காது கேட்கும் கருவிகள் இன்னும் மேம்படும். கவனச் சிதறல் (ADHD) போன்ற பிரச்சனைகளுக்கு, மூளையின் இந்த 'தாளம்' போடும் உத்தியைப் பயன்படுத்தியே புதிய பயிற்சிகளைக் கூட வடிவமைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com