2030-ல் கடலில் விழும் சர்வதேச விண்வெளி நிலையம்: பூமிக்கு ஆபத்தா? மனிதகுலத்தின் அடுத்த பிளான் என்ன?

25 ஆண்டுகள் விண்வெளியை ஆண்ட ISS ஓய்வு பெறுகிறது; பசிபிக் பெருங்கடலில் இறக்க நாசா திட்டம்!
விண்வெளி நிலையம் - ISS Retirement 2030
விண்வெளி நிலையம் - ISS Retirement 2030
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on: 

உஷார்! ஜாக்கிரதை! இரண்டாயிரத்து முப்பதாம் வருடம் ஆரம்பித்தவுடன் என்று வேண்டுமானாலும் பசிபிக் பிராந்தியத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையம் எங்கோ ஒரு இடத்தில் தலை மீது விழும் அபாயம் இருக்கிறது!

அது உழைத்துக்களைத்துத் தாயகமான பூமிக்கு திரும்பி வருகிறது.

பல வருடங்களாக பூமியைச் சுற்றி சுற்றி வந்த, விண்ணில் சுற்றிய, மனிதனால் சுற்றவிடப்பட்ட மிகப்பெரிய பொருள் இது. கட்டுப்பாடுடனான ஆணைகளின் மூலம் பூமியில் இறங்கும் போது இது எரிந்து விடும். இதன் சில பாகங்கள் பூமியின் மீது வந்து மோதி விழக்கூடும்.

இதன் இறுதிச்சடங்கு நமக்கு வருத்தத்தை அளிக்கும் ஒன்றுதான்!

பல உருளைகள், ரேடியேட்டர்கள், சோலார் அர்ரேக்கள், கேபிள்கள், சேமிப்புப் பைகள், லாப்டாப்கள், பல நவீன இயந்திர சாதனங்கள் ஆகியவை அசெம்பிள் செய்யப்பட்டு இதில் வைக்கப்பட்டிருந்தன. 25 வருடங்களுக்கும் மேலாக மனித குலத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் வசிக்கும் அபூர்வ இடமாக இருந்தது இது.

இப்போதுள்ள கேள்வி, இதற்கு பதிலாக இதன் இடத்தை நிரப்பப்போவது எது? அதில் எப்படி எத்தனை மனிதர்கள் வசிக்கப்போகின்றனர்?

2000ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வில்லியம் ஷெப்பர்ட், யூரி ஜிட்ஜெங்கோ, செர்ஜி கிரிகாலெவ் ஆகிய மூன்று விண்வெளிவீரர்கள் இதனுள் புகுந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை விண்வெளியில் மனிதர்களுக்கான தங்குமிடமாக இது அமைந்திருந்தது. நவம்பர் 2025-உடன் 25 ஆண்டுகள் தங்கு தடையின்றி மனிதர்களின் தங்குமிடமாக இது இருந்து வந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கூகுள் அதிகாரியே அலறி அடித்து ஓட்டம்... அப்படி என்ன ஏஐ செஞ்சது?
விண்வெளி நிலையம் - ISS Retirement 2030

மனிதகுலத்தைச் சேர்ந்த யாரோ சிலர் பூமியில் இல்லாமல் விண்வெளியில் இருக்கிறார்கள் என்பது சாதாரண செய்தியா என்ன? ஒரு குழு செல்கிறது. ஒரு குழு திரும்பி வருகிறது. அவர்களுக்குத் தேவையான பொருள்கள் அங்கு வந்துகொண்டே இருக்கின்றன.

விண்வெளிவீரர்கள் போட்டோக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். புதுப்புது உண்மைகள் தெரியவருகின்றன. மனிதகுலம் மகிழ்கிறது. மலைக்கிறது!

இது சாதாரண விஷயமல்ல; கற்பனைக்கும் எட்டாத பொருள் செலவு ஒரு பக்கம்; மலைக்க வைக்கும் துல்லியமான தொழில்நுட்பம் ஒரு பக்கம். தவறுக்கு இங்கு இடமே இல்லை.

இந்த நிலையம் ஒரு லாபரட்டரிதான். நமது எலும்புகள் இங்கு புவி ஈர்ப்புவிசை பற்றிச் சொல்கிறது. நமது தசைகள் அதை எதிர்த்து வேலை செய்யவேண்டும், நமது இதயம் இயங்குவதில் புதிய விதிகள் உள்ளன. நிறைய நாட்கள் இங்கு இருந்தால் நமது தசைகள், எலும்புகள் ஆகியவை தேயும்; அங்கங்கள் மாறுபடும்.

விண்வெளி நிலையம் - ISS Retirement 2030
விண்வெளி நிலையம் - ISS Retirement 2030

டாக்டர்கள் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்துகொண்டே இருக்கின்றனர். பொறியியல் வல்லுநர்கள் நவீன சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆய்வாளர்கள் வினாடி கூட விடாமல் தொடர்ந்து கண்காணித்து ஆய்வைத் தொடர்கின்றனர்.

2025ல் மட்டும் இந்த நிலையம் 76 ஆய்வறிக்கைகளைத் தந்துள்ளது. இதுவரை இது தந்த மொத்த ஆய்வறிக்கைகள் 630. இந்த ஆராய்ச்சி மூலம் 400 ஆய்வுப் பேப்பர்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 41 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன.

இதில் சேரும் விண்கலம் - டாக் செய்வது – சரியாகச் சேரவேண்டும். இது விண்வெளிக் குப்பை எதனுடனும் மோதாமல் இருக்கவேண்டும். விண்வெளி வீரர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டால் பத்திரமாக பூமிக்குத் திரும்பி வரவேண்டும்.

இனி என்ன நடக்கப்போகிறது?

இனி பல நாடுகளும் பல ஸ்டேஷன்களை உருவாக்கப் போகின்றன. அண்டை வீட்டார் போல பல நிலையங்கள் இருக்கக் கூடும். இனி நிலையங்கள் வர்த்தக மயமாக்கப்படலாம்.

தற்போதைய இந்த நிலையம் பூமி மீது விழுந்து நொறுங்கிவிட்டால்? கவலைப்பட வேண்டாம். அதற்குள் புதிய விண்வெளி நிலையம் விண்வெளியில் செயல்படத் தொடங்கும்.

பூமியை விட்டு மனிதர்கள் வெளியில் வாழமுடியும் என்று நிரூபித்த சர்வதேச விண்வெளி நிலயத்திற்கு ஒரு பெரிய சல்யூட் செய்வோமா?

அடுத்த விண்வெளி நிலையத்தை வருக வருக என வரவேற்போமா?

கோடானுகோடி நட்சத்திரங்களும், கிரகங்களும் சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் மனிதனின் சர்வதேச நிலையம் சின்னக் குழந்தை தத்தித் தத்தி எடுத்து வைக்கும் ஒரு சிறிய காலடிதான்.

ஆனால் குழந்தையின் அந்த முதல் காலடியைப் பார்க்கும்போது மனம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைகிறது. வளர்ச்சியைக் காண்போம்; விண்ணை வசமாக்குவோம்!

இதையும் படியுங்கள்:
கூட்டுக் குடும்பம் போச்சு... சொந்த பந்தமும் தொலைஞ்சு போச்சா? இன்றைய உறவுகளின் உண்மை நிலை!
விண்வெளி நிலையம் - ISS Retirement 2030
logo
Kalki Online
kalkionline.com