ஐபோனில் ஸ்டோரேஜ் நிரம்பினால் இனி கவலை வேண்டாம்.. இருக்கிறது Apple iCloud!

Apple iCloud.
Apple iCloud.

ஸ்மார்ட்போன் பயனர்களின் கனவு சாதனமாக இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோங்கள். வாழ்க்கையில் ஒருமுறையாவது ஐபோன் வாங்கி பயன்படுத்தி விட வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. அதற்காக பல வழிகளில் பணத்தை சேமித்து அதை வாங்குவதை லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் அவ்வாறு விரும்பி வாங்கும் ஐபோனில் பலருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அதன் ஸ்டோரேஜ். குறிப்பாக குறைந்த ஸ்டோரேஜ் கொண்டு ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் அது விரைவில் ஃபுல்லாகிவிடும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதனால் மேற்கொண்டு போட்டோ அல்லது வீடியோக்களை சேமிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. நீங்களும் இத்தகைய பிரச்சினையை சந்திப்பவராக இருந்தால், உங்கள் ஐபோனில் எளிதாக ஸ்டோரேஜ் ஸ்பேசை உருவாக்க முடியும். 

ஐபோனில் ஸ்டோரேஜை ஃப்ரீ செய்வது எப்படி?

அதற்கு முதலில் நீங்கள் Apple iCloud-ஐ சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். பின்னர் ஐகிளவுட் செட்டிங் பகுதிக்கு சென்று, ஐ கிளவுட் போட்டோஸ் ஆப்ஷனை தேர்வு செய்து ஆப்டிமைஸ் போன் ஸ்டோரேஜ் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் சாதனத்தில் இருக்கும் போட்டோஸ் iCloud-ல் சேமிக்கப்படும். 

நீங்கள் ஐபோனில் இருக்கும் எதாவது ஒரு செயலியை என்றாவது தான் பயன்படுத்துவீர்கள் என்றால், உங்கள் ஸ்டோரேஜை ப்ரீ செய்ய அவற்றை அஃப்லோட் செய்து விடுவது நல்லது. இதை செய்வதற்கு ஐபோன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, பின் ஜெனரலில் ஐபோன் ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் நீங்கள் பயன்படுத்தாத செயலியை தேர்வு செய்து Offload App என்பதை தேர்வு செய்தால், அதன் ஸ்டோரேஜ் உங்கள் சாதனத்தில் குறைக்கப்படும். 

இதையும் படியுங்கள்:
டீப் பேக் வீடியோ: சமூக வலைதளங்களுக்கு அரசு செல்வது என்ன?
Apple iCloud.

மேலும் உங்கள் ஐபோனில் தேவையில்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கி விடுங்கள். ஐபோனில் பொதுவாகவே எடுக்கும் காணொளிகள் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளும் என்பதால், உங்கள் போனில் இருக்கும் தேவையில்லாத காணொளிகளை நீக்கிவிடுவது நல்லது. எனவே உங்கள் ஸ்டோரேஜ் ஃப்ரீ செய்ய, தேவையில்லாத விஷயங்களை டெலிட் செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com