ஒரே ஒரு பிளேட்... உலக வர்த்தக வரலாற்றையே மாற்றி எழுதிய 'ஜிலெட்' சாதனையின் கதை!

ஆபத்தான நேர் கத்திகளில் இருந்து நவீன பாதுகாப்பு பிளேட் வரை கிங் ஜிலெட்டின் புரட்சிகர பயணம்.
ஜிலெட் பிளேட் - Gillette Razor
ஜிலெட் பிளேட் - Gillette Razor
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

நவீன மனிதனின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ள சவரம் செய்யும் பிளேடை (Razor Blade) கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிங் காம்ப் ஜிலெட் பிளேட் (King Camp Gillette) ஆவார். இந்த எளிய கண்டுபிடிப்பு, உலகளாவிய தனிநபர் பராமரிப்பு முறையையே தலைகீழாக மாற்றிய வரலாற்றுப் பின்னணியை இங்கு விரிவாகக் காண்போம்.

கண்டுபிடிப்பிற்கான பின்னணி: 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆண்கள் சவரம் செய்வதற்கு நீண்ட, கூர்மையான “நேர் சவரக் கத்திகளை” (Straight Razors) பயன்படுத்தினர்.

இந்த நேர் கத்திகள் மிகவும் ஆபத்தானவை. சிறிதாகக் கவனக்குறைவு ஏற்பட்டாலும் முகத்தில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்படும். கத்தியின் கூர்மை மழுங்கும் போதெல்லாம், அதைத் தோல் பட்டையில் தேய்த்துக் கூர்மைப்படுத்த (Strop/Hone) வேண்டியிருந்தது அல்லது முடிதிருத்துநரிடம் செல்லவேண்டியிருந்தது.

அக்காலத்தில் ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றிய கிங் ஜிலெட், ஒருமுறை சவரம் செய்யும் போது மழுங்கிய கத்தியால் ஏற்பட்ட சிரமத்தைக் கண்டு யோசித்தார்: “ஏன் பயன்படுத்திய பின் தூக்கி எறியக் கூடிய (Disposable) மெல்லிய எஃகு பிளேடைப் பயன்படுத்தக் கூடாது?” என்ற எண்ணம் அவருக்கு உதித்தது.

சவால்களும் தயாரிப்பும்: அவரது யோசனை எளிதாக இருந்தாலும், அதை நிஜமாக்குவது பெரும் சவாலாக இருந்தது.

பொறியியல் சிக்கல்: அக்காலத்தில் மிகவும் மெல்லிய, கூர்மையான மற்றும் மலிவான எஃகு தகடுகளை (Thin Steel Sheet) பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இருக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
புது பைக் வாங்க போறீங்களா? நீங்க ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
ஜிலெட் பிளேட் - Gillette Razor

வில்லியம் நிட்செர்சனின் கூட்டணி: ஜிலெட் தனது யோசனையை மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் (MIT) சேர்ந்த பொறியாளரான வில்லியம் நிட்செர்சன் (William Nickerson) என்பவரிடம் பகிர்ந்துகொண்டார். நிட்செர்சன், மெல்லிய எஃகு தகடுகளைக் கூர்மைப்படுத்தி, பிளேடாக மாற்றும் இயந்திரத்தை வடிவமைத்தார்.

வணிக வளர்ச்சியும் ஜிலெட் நிறுவனத்தின் பிறப்பும்

1895 ல் கிங் ஜிலெட் தூக்கி எறியக்கூடிய பாதுகாப்பு பிளேடுக்கான யோசனையை உருவாக்கினார். 1901 ல் ‘அமெரிக்கன் சேஃப்டி ரேசர் கம்பெனி’ தொடங்கப்பட்டு, வடிவமைப்புக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1903 ல் வணிகரீதியான உற்பத்தி தொடங்கி முதல் ஆண்டில் 51 சவரக் கத்திகளும் 168 பிளேடுகளும் விற்பனையாகின.

1904 ல் அடுத்த ஆண்டே விற்பனை 90,000 சவரக் கத்திகளாகவும் 1.2 கோடி பிளேடுகளாகவும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது.

ஜிலெட் பிளேட் - Gillette Razor
ஜிலெட் பிளேட் - Gillette Razor

முதலாம் உலகப்போர் திருப்பம்

1917 ல் அமெரிக்க இராணுவம் தனது வீரர்கள் அனைவருக்கும் ஜிலெட் சேஃப்டி ரேசர் செட்களைக் கட்டாயப் பொருளாக வழங்கியது. இதனால் மில்லியன் கணக்கான ராணுவ வீரர்கள் இதன் பயனாளர்களாக மாறினர்.

கிங் ஜிலெட் உலகப் புகழ்பெற்ற “Razor and Blades Model” என்ற வணிக மாதிரியை அறிமுகப்படுத்தினார்:

சவரக் கைப்பிடியைக் (Holder/Razor body) குறைந்த விலைக்கு அல்லது அடக்க விலைக்கு விற்பனை செய்வது. அடிக்கடி மாற்றவேண்டிய பிளேடுகளை (Blades) தொடர்ந்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவது.

இந்த வணிக உத்திதான் பின்னாளில் பிரிண்டர் மற்றும் கார்ட்ரிட்ஜ் (Printers & Cartridges), கேமிங் கன்சோல்கள் போன்ற பல நவீன தொழில்துறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தது.

கிங் காம்ப் ஜிலெட்டின் இந்த எளிய கண்டுபிடிப்பு, ஆண்களின் அன்றாடச் சவர முறையைப் பாதுகாப் பானதாகவும், விரைவானதாகவும் மாற்றியது. இன்று பல நவீன பல பிளேடு (Multi-blade) முறைகள் வந்தபோதிலும், கிங் ஜிலெட் விதைத்த “பாதுகாப்பான மற்றும் மாற்றக் கூடிய பிளேடு” என்ற அடிப்படைத் தொழில்நுட்பமே இன்றும் உலகளவில் பின்பற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கனமான பிளாங்கெட்டை வாஷிங் மெஷினில் துவைப்பது எப்படி?
ஜிலெட் பிளேட் - Gillette Razor
logo
Kalki Online
kalkionline.com