மிஸ் பண்ணிடாதீங்க! 2026 பிப்ரவரி மாதத்தின் வானியல் காலண்டர் இதோ - எந்த நாளில் என்ன அதிசயம் நடக்கும்!

February 2026 wonders happen in space
Space wonders
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

1. முழு பனி நிலவு (பிப்ரவரி 1):

பிப்ரவரி மாத முழு நிலவு 'பனி நிலவு' என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முழு பனி நிலவு தோன்றும். அதாவது நிலவு அதிகபட்ச பிரகாசத்துடன் பனி நிலவாக காட்சியளிக்கும். கிழக்கு நேர மண்டலத்தில் சூரிய அஸ்தமனத்தில் இக்காட்சி தெரியும். வட அரைக்கோளத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் காலத்தில் இது தோன்றுவதால் இப்பெயர் பெற்றது.

2. ஆல்பா சென்டாரிட் விண்கல் மழை (பிப்ரவரி 8):

பிப்ரவரி 8ஆம் தேதி ஆல்பா சென்டாரிட் விண்கல் மழை உச்சத்தை அடையும். இது முக்கியமாக தெற்கு அரைக்கோளத்தில் தெரியும். இந்த விண்கல் மழை உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 6 விண்கற்களைக் காண முடியும்.

3. வளைய சூரிய கிரகணம் (பிப்ரவரி 17):

நிலவு சூரியனை முழுமையாக மறைக்காத, நெருப்பு வளைய சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் தேதி நிகழ்கிறது. அன்று வளைய சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது அண்டார்டிகாவிலிருந்து மட்டுமே முழுமையாக தெரியும். இது மக்களை விட வனவிலங்குகளால் அதிகம் பார்க்கப்படும் ஒரு அரிய காட்சியாக அமைகிறது.

4. நிலவு - மெர்குரி சந்திப்பு (பிப்ரவரி 18):

புதன்(மெர்குரி) மற்றும் நிலவு ஆகிய இரண்டும் வானில் நெருக்கமாகத் தோன்றும்.

5. சனி - நிலவு சந்திப்பு (பிப்ரவரி 19):

புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அதைக் கண்டறிவது பொதுவாக கடினம். பிப்ரவரி 19 அன்று, அது எளிதாக பார்க்கும் அளவிற்கு அதிக தூரம் நகர்கிறது. புதன் கோள் சூரியனிடமிருந்து அதிகபட்ச தொலைவில் தோன்றுவதால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு திசையில் புதனைக் காண்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மெல்லிய பிறை நிலவு சனிக்கோளுக்கு அருகில் காட்சியளிக்கும்.

6. 7 கோள்களின் அரிய அணி வகுப்பு (பிப்ரவரி 28):

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கோள்களும் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து, சூரிய குடும்பத்தின் அபூர்வ காட்சியை(Space wonders) உருவாக்குகின்றன.

பிப்ரவரி பிற்பகுதியில் மேற்கு-தென்மேற்கு வானத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, 5 கோள்களை வெறும் கண்களாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூனை பைனாகுலர் உதவியுடனும் காண முடியும்.

இதையும் படியுங்கள்:
கரடி போல மாதக் கணக்கில் தூங்க ஆசையா? விஞ்ஞானிகள் சொல்லும் குட் நியூஸ்!
February 2026 wonders happen in space

7. ஓரியன் நட்சத்திரக் கூட்டம்:

பிப்ரவரி முழுவதும் இரவு நேரங்களில், தெற்கு வானத்தில் ஓரியன்(Orion) வேடன் நட்சத்திரக் கூட்டத்தை தெளிவாகக் காணலாம்.

இந்த நிகழ்வுகளைக் காண வானம் தெளிவாகவும், நகர விளக்குகளின் ஒளி மாசு இல்லாமலும் இருப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com