சந்திர கிரகணக் குளறுபடி!

2026 lunar eclipse
2026 lunar eclipse
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on

இன்று (03.03.2026) நடைபெறும் சந்திர கிரகணம் வித்தியாசமானது. ஆமாம், சந்திரன் உதிக்கு முன்னரே கிரகணம் நிகழ்கிறது!

அதுதானே? சூரிய ஒளியில் சந்திர கிரகணத்தை எப்படிப் பார்க்க முடியும்? சாஸ்திரியக் கணக்குப்படி, நம் நாட்டில், 2026, மார்ச் மாதம், மூன்றாம் தேதி, செவ்வாய்க் கிழமை மதியம் 3.20 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மத்யம காலமாகிய மாலை 5.03ஐக் கடந்து, நிறைவு மாலை 6.47 என்றாக இருந்திருக்கிறது.

அதே சாஸ்திரப்படி சந்திரோதயம் ஆரம்பிக்காமலேயே கிரகணம் பிடிக்கக் கூடாதே, இது எப்படி? நம்முடைய அந்த இந்திய நேரத்தில், வேறு எந்த நாட்டிலாவது சந்திர உதயம் ஆரம்பித்திருக்கும். அங்கே கிரகணம் நிகழ வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக நமக்கு மாலை 3.30 மணி என்றால் ஆஸ்திரேலியா பெர்த்தில் மாலை 6 மணி; அதே கண்டத்தின் பிரிஸ்பேனின் இரவு 8 மணி மற்றும் சிட்னியில் இரவு 9 மணி.

இதன்படி ஆஸ்திரேலியாவில் மாலை 6 மணிக்கு ச்ந்திர கிரகணம் நிகழ்கிறது. ஆனால், அதே இந்திய நேரத்தில், சூரிய அஸ்தமனம் ஆகவில்லை என்பதால் நமக்கு கிரகணம் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று சந்திர உதய நேரம் மாலை 6.20 மணி. ஆக, நம்மைப் பொறுத்தவரை கிரகண காலம் இருபத்தேழே நிமிடங்கள்தான். இந்தக் குறுகிய காலத்திலும் நம் நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிரகணத்தைக் காண முடியும்; தமிழ்நாட்டில் காண இயலாது.

இதையும் படியுங்கள்:
2026-ன் முதல் சந்திர கிரகணம் எப்போது? தேதி மற்றும் துல்லியமான நேர விபரங்கள்!
2026 lunar eclipse

ஆனாலும் பஞ்சாங்கக் கணிப்புப்படி மதியம் 3.20க்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து விடுவதால், அதை அப்போதிலிருந்தே அனுஷ்டிக்க ஆரம்பிப்பது நம் சம்பிரதாயம். அதன்படி இன்று மாலை 6.47க்குப் பிறகு நீராடி, அவரவர் குடும்ப வழக்கப்படி தானங்கள் செய்து சந்திர கிரகண சாந்தி செய்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com