இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதால் பேட்டரி பழுதாகுமா? அறிவியல் சொல்வது என்ன?

ஸ்மார்ட்போன் சார்ஜிங் பற்றியும் அதன் மறைமுக ஆபத்துகள் பற்றியும் நீங்கள் அறியாத உண்மைகள்.
பேட்டரி ஆயுள் - Mobile Battery
பேட்டரி ஆயுள் - Mobile Battery
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் நம்மால் ஒரு நொடி கூட கடத்துவது மிகவும் சிரமமான விஷயமாகும். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை கையில் எப்பொழுதும் செல்போனுடனேயே இருக்கிறோம். இது நம் அன்றாட வழக்கத்தில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

பலருக்கும் தூங்குவதற்கு முன்பு கைபேசியை பிளக்கில் போட்டு விட்டு நிம்மதியாக தூங்கும் பழக்கம் உண்டு. இந்தப் பழக்கம் சாதாரணமாகத் தோன்றினாலும் அது நம் போனின் பேட்டரியை பாதிக்குமா, விரைவில் பழுதாகுமா என்பதைப் பற்றி அறியாமல் செய்யும் தவறான பழக்கம் இது.

எனவே பேட்டரியின் ஆயுளை பாதுகாக்க சார்ஜிங் வசதிகளை சரியாகப் பயன்படுத்துவது நல்லது. இரவு முழுவதும் போனை சார்ஜில் போடுவதால் நவீன ஸ்மார்ட்போன்களின் பேட்டரி உடனடியாகப் பழுதாகாது. ஆனால் காலப்போக்கில் அதன் ஆயுட்காலம் சற்று குறைய வாய்ப்புள்ளது என்று அறிவியல் கூறுகிறது.

ஓவர் சார்ஜ் நடக்குமா?

நவீன போன்களில் உள்ள மேம்பட்ட சார்ஜிங் சர்க்யூட்கள், பேட்டரி 100 சதவீதம் எட்டியவுடன் மின்சாரம் உள்ளே செல்வதைத் தானாகவே நிறுத்திவிடும். இதனால் ஓவர் சார்ஜிங் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பழைய காலத்து போன்களைப் போல பேட்டரி வீங்குவதோ, வெடிப்பதோ அல்லது அதிகப்படியான சார்ஜ் ஏறுவதோ தடுக்கப்படுகிறது.

பேட்டரி ஆயுள் - Mobile Battery
பேட்டரி ஆயுள் - Mobile Battery

பேட்டரி ஆயுள் ஏன் குறைகிறது?

*ட்ரிக்கிள் சார்ஜிங் (Trickle Charging):

போன் இரவு முழுவதும் சார்ஜரில் இருக்கும் பொழுது பேட்டரி 100 சதவீதத்திலிருந்து 99 சதவீதத்திற்கு குறையும் பொழுதெல்லாம் மீண்டும் 100 சதவீதத்திற்கு சார்ஜ் ஏற்றப்படும். இது பேட்டரி செல்களுக்குத் தொடர்ந்து சிறிய அளவிலான அழுத்தத்தைக் கொடுத்து அதன் திறனைக் குறைக்கிறது.

*அதிக மின்னழுத்த அழுத்தம் (High Voltage Stress):

லித்தியம்-அயன் பேட்டரிகள் 100% முழு சார்ஜில் நீண்ட நேரம் இருக்கும் பொழுது அவற்றின் உள்ளே அதிக மின்னழுத்தம் இருக்கும். இது பேட்டரியின் வேதியியல் கூறுகளை மெதுவாக சேதப்படுத்தும். எனவே எப்போதும் 100% முழுமையாக வைத்திருப்பதை விட, 20% முதல் 80% வரை வைத்திருப்பதே அதன் வேதியியல் கட்டமைப்புக்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை… இப்படி செஞ்சா உங்க போனின் Type-C போர்ட் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்!
பேட்டரி ஆயுள் - Mobile Battery

*வெப்பம் (Heat):

பேட்டரியின் மிகப்பெரிய எதிரி வெப்பம் ஆகும். சார்ஜ் ஏறும் பொழுது போனில் பொதுவாக சிறிது வெப்பம் உருவாகும். குறிப்பாக சார்ஜரில் போனை வைத்துவிட்டு தலையணைக்கு அடியிலோ அல்லது வெப்பம் வெளியேற முடியாத இடத்திலோ வைத்து இரவு முழுவதும் சார்ஜ் போட்டால், அந்த வெப்பம் வெளியேறாமல் பேட்டரியின் ஆயுளை வேகமாகக் குறைக்கும்.

நவீன போன்களின் பாதுகாப்பு அம்சங்கள்:

ஆப்டிமைஸ்டு சார்ஜிங்:

தற்போதைய புதிய ஆப்பிள் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் உள்ள மென்பொருள்கள், நாம் தூங்கும் நேரத்தைக் கணித்து பேட்டரியை 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்யும். நாம் காலையில் எழுவதற்கு சற்று முன்புதான் மீதமுள்ள 20 சதவீதத்தை நிரப்பி 100 சதவீதம் ஆக்கும்.

பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க சில எளிய வழிகள்:

20% முதல் 80% விதி:

பேட்டரி அளவை எப்போதும் 20 சதவீதத்திற்கும் 80 சதவீதத்திற்கும் இடையில் வைத்திருப்பது பேட்டரி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

காற்றோட்டமான இடம்:

சார்ஜ் போடும்போது போனை கடினமான, தட்டையான மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.

தரமான சார்ஜர்:

போன் நிறுவனத்தின் ஒரிஜினல்/அசல் சார்ஜர் அல்லது தரமான சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை மட்டுமே பயன்படுத்துவது மின்னழுத்த மாறுபாடுகளைத் தவிர்க்கும்.

போன் செட்டிங்ஸில் (Battery Settings) 80% அல்லது 85% உடன் சார்ஜ் நின்றுவிடும் வசதி இருந்தால் (Optimized Battery Charging அல்லது Adaptive Charging) அதை ஆன் செய்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி சீக்கிரம் வீணாகிறதா? இந்த 6 தவறுகள்தான் காரணம்!
பேட்டரி ஆயுள் - Mobile Battery