நாசாவின் விதிகளையே உடைத்த விண்வெளி வீரர்! நிலவின் மேற்பரப்பில் பறந்த கோல்ஃப் பந்து!

NASA Astronaut Secrets - விண்வெளி வீரர்
NASA Astronaut Secrets - விண்வெளி வீரர்AI Image
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பூமியில் பல நாடுகளில் காலம் காலமாக கோல்ஃப் விளையாட்டு விளையாடப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், பூமிக்கு 2,30,000 மைல்கள் தொலைவில் இருக்கும் நிலவின் மேற்பரப்பிற்கு சென்று ஆலன் ஷெப்பர்ட் என்ற விண்வெளி வீரர் கோல்ஃப் விளையாடிய சுவராசியமான கதையை குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

1971ம் ஆண்டு அப்போலோ 14 ராக்கெட் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. பொதுவாக இதுபோன்ற ராக்கெட்டுகள், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பரிசோதனை களுக்காக மட்டுமே அனுப்பப்படும். அதேபோல்தான் அப்போலோ 14 ராக்கெட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இப்பயணத்தின்போது விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் செய்த செயல்தான் இன்றளவும் ஒரு வரலாற்று நிகழ்வாக குறிப்பிடப்பட்டு வருகிறது.

பொதுவாக விண்வெளிக்கு செல்கையில் சில அத்தியாவசியமான பொருட்களுக்கு மட்டுமே அனுமதி. விண்வெளி வீரர்கள் எதைக் கொண்டுச் செல்லவேண்டும் என்பதில் கடுமையான விதிமுறைகள் உள்ளன.

ஆனால், நிலவின் தரையில் கோல்ஃப் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆலன் கோல்ஃப் குச்சியின் தலை பகுதியை மட்டும் எடுத்து தனது உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். யார் கண்ணிலும் சிக்காமல், அதனை தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.

பிப்ரவரி 6, 1971 அன்று, நிலவின் 'பிராமோ மௌரோ' (Fra Mauro) பகுதியில் தனது பணிகளை முடித்த பிறகு, ஷெப்பர்ட் தான் கொண்டு வந்த உபகரணங்களை வெளியே எடுத்தார். நிலவின் ஈர்ப்பு விசை பூமியை விட ஆறில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதால், ஒரு சாதாரண ஸ்விங் கூட பந்தை நீண்ட தூரம் கொண்டு செல்லும் என்று அவர் எதிர்பார்த்தார்.

NASA Astronaut Secrets - விண்வெளி வீரர்
NASA Astronaut Secrets - விண்வெளி வீரர்AI Image

ஆனால், விண்வெளி உடையில் அவரால் முதல் முயற்சியிலேயே பந்தை அடிக்க முடியவில்லை. இரண்டாவது முயற்சியில் பந்து காற்றில் பறந்தது. நிலவில் காற்று இல்லாததால், உராய்வு விசை ஏதுமின்றி அந்தப் பந்து நீண்ட நேரம் காற்றில் மிதந்து சென்று விழுந்தது.

ஷெப்பர்ட் அடித்த பந்து மற்றும் கோல்ஃப் குச்சி ஆகியவை இன்றும் வாஷிங்டனில் உள்ள நேஷ்னல் ஏர் அண்ட் ஸ்பேஸ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த நிகழ்வு குறித்து எதுவும் நாசாவின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த அப்பல்லோ திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 25 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் இது சுமார் 246 பில்லியன் டாலர்கள்). இதன்படி பார்த்தால், நிலவில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடையது.

எனவே, விண்வெளி வீரர்களின் ஒவ்வொரு அசைவும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்படியான நேரத்திற்கும் இடையே, ஷெப்பர்ட் தனது கோல்ஃப் விளையாடும் ஆசையை விண்வெளியில் நிறைவேற்றியது, விண்வெளி பயண வரலாற்றில் ஒரு குறிப்பிட வேண்டிய நிகழ்வாக மாறியது.

இதையும் படியுங்கள்:
வாட்டர் ஹீட்டர் ராடு பயன்படுத்துகிறீர்களா? உயிரைக் காக்கும் 5 அதிமுக்கிய எச்சரிக்கைகள்!
NASA Astronaut Secrets - விண்வெளி வீரர்

நிலவின் மேற்பரப்பில் ஷெப்பர்ட் கோல்ஃப் பந்தை அடித்த நேரலை காட்சிகள், ஹூஸ்டனில் இருந்த நாசா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளையும், உலகம் முழுவதும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் விண்வெளி வீரர்களும் ஒரு மனிதர்கள்தான் என்பதையும் இக்கட்டான சூழலிலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் இடமளிக்கலாம் என்பதையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.

விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி வீரர்களின் அசைக்க முடியாத மன உறுதி குறித்துப் புதிய கோணத்தில் அறிந்துகொள்வதுடன், மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் ஒரு மனிதன் தன் மகிழ்ச்சியை எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற உத்வேகத்தையும் வாசகர்கள் பெறமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com