வாட்டர் ஹீட்டர் ராடு பயன்படுத்துகிறீர்களா? உயிரைக் காக்கும் 5 அதிமுக்கிய எச்சரிக்கைகள்!

Electrical safety tips - ஹீட்டர் ராடு
Electrical safety tips - ஹீட்டர் ராடுAI Image
Updated on

ம் முன்னோர்கள் விறகடிப்பில் தண்ணீர் காயவைத்து குளித்தார்கள். அதன் பிறகு கேஸ் அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து பயன்படுத்தப்பட்டது. தற்போது சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக கேஸ் அடுப்பில் தண்ணீர் காயவைப்பது குறைந்துவிட்டது. சற்று வசதியானவர்கள் கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

நடுத்தர மக்கள் விலை குறைவாக எளிதாக வாங்கக்கூடிய வகையில் இருப்பதால் வாட்டர் ஹீட்டர் ராடுகள் வாங்கி பயன்படுத்துகின்றனர். எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த 'வாட்டர் ஹீட்டர் ராடு'களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். மலிவான ஹீட்டர் ராடுகளை கவனமின்றி பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். அந்த வகையில் "வாட்டர் ஹீட்டர் ராடு" பயன் படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இப்பதிவில் விரிவாக காண்போம்.

ஹீட்டர் ராடு பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியது

பாத்ரூமிற்குள் பயன்படுத்தக் கூடாது

குளியலறை ஈரப்பதமாக இருக்கும் என்பதால் வாட்டர் ஹீட்டர் ராடை ஒருபோதும் இங்கு பயன்படுத்தக்கூடாது. மின்சாரம் ஈரப்பதம் உள்ள இடங்களில் சுவிட்ச் போடும் போதும், எடுக்கும் போதும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் குளியலறை மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் வாட்டர் ஹீட்டர் ராடை கண்டிப்பாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

தண்ணீர் அளவு முக்கியம்

தண்ணீரில் ஹீட்டர் ராடு போடும்போது முழுவதும் மெட்டல் கம்பிப் பகுதி மூழ்கி இருக்கும் போதுதான் சுவிட்ச் ஆன் செய்யவேண்டும். மெட்டல் கம்பி பகுதி தண்ணீரில் மூழ்காமல் குறைவாக இருந்தால் விபத்தை ஏற்படுத்துவதோடு ஹீட்டர் ராடு பழுதடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Electrical safety tips - ஹீட்டர் ராடு
Electrical safety tips - ஹீட்டர் ராடுAI Image

விரல் விட்டு பார்ப்பது ஆபத்து

சுவிட்ச் ஆனில் இருக்கும்போது தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்ப்பதற்கு தண்ணீர் இருக்கும் வாளியில் விரலை விட்டு பார்த்தால் மின்சாரம் தாக்கி ஆபத்தை ஏற்படுத்த கூடும். ஆகவே வாட்டர் ஹீட்டர் ராடு இருக்கும் தண்ணீரை சுவிட்ச் ஆப் செய்து சிறிது நேரம் கழித்தே தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்க்கவேண்டும்.

ராடை உடனே எடுக்கக் கூடாது

வாளியில் இருக்கும் தண்ணீர் சூடாகி ஆவி பறக்கும்போது ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு பத்து நிமிடங்கள் ராடை தண்ணீரில் அப்படியே விட்டு விடவேண்டும். அப்போதுதான் ராடில் இருக்கும் வெப்பம் முழுமையாக குறைந்திருக்கும்.

வெப்பத்தால் பிளாஸ்டிக் உருகி தீப்பிடிக்க கூடும் என்பதால் தண்ணீரை சூடாக்குவதற்கு பிளாஸ்டிக் வாளியை பயன்படுத்தக் கூடாது. மேலும் ஹீட்டர் ராடை தொங்கவிட்டு பிளாஸ்டிக் வாளிகளிலும் பயன்படுத்துவது சரியான முறையாகாது.

இரும்பு வாளியும் ஆபத்தே

மின்சாரத்தை இரும்பு எளிதில் கடத்தும். ஆகவே வாட்டர் ஹீட்டர் ராடுகளில் தண்ணீர் சூடாக்குவதற்கு இரும்பு வாளியையும் பயன்படுத்தக் கூடாது. இரும்பு வாளியை பயன்படுத்தினால் எதிர்பாராத விதமாக ஷாக் அடிக்கலாம் என்பதால் தண்ணீரை சூடாக்குவதற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாட்டர் ஹீட்டர் ஸ்டாண்டுகள் கொண்ட உலோக பாத்திரங்கள், எஃகு பாத்திரங்கள் அலுமினியம் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரூ.5,000 உயர்வு.! காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை..!
Electrical safety tips - ஹீட்டர் ராடு

எலக்ட்ரிக் சாதன பொருட்கள் அன்றாட வாழ்வில் நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்தும்போது கவனமாக கையாளவேண்டும். முறையாகவும் முன்னெச்சரிக்கையுடனும் பயன் படுத்தும்போது எதிர்பாராத ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.

இந்த எளிய மற்றும் அவசியமான வழிகாட்டார்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் அன்றாட மின்சாதனப் பயன்பாட்டை எவ்வித அச்சமுமின்றி மாற்றியமைக்கலாம். எதிர்பாராத மின் விபத்துகளில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் முழுமையாகப் பாதுகாத்து, நிம்மதியான, பாதுகாப்பான குளியல் நேரத்தை உறுதி செய்ய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com