சூரியனை தொட்டு ஆராய நாசா முயற்சி!

NASA attempts to touch the sun and explore.
NASA attempts to touch the sun and explore.

சூரியனை தொட்டு ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செயல்படுத்த இருப்பதாக நாசா தெரிவித்து இருக்கிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனை ஆராய்ச்சி செய்ய பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் பார்க்கர் சோலார் ப்ரோப். இத்திட்டம் சூரியனின் கரோனாவில் அதிக நேரம் வெண்கலத்தை இருக்கச் செய்வது. இதன் மூலம் சூரியனுடைய நிலையை ஆராய முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனுக்கு மிக அருகில் சொல்லும் செயல் திட்டமும் இது தான். இந்த மிக முக்கியமான பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் வரும் டிசம்பர் மாதம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக பார்க்கர் சோலார் ப்ரோப் 7 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை கடந்து செல்லும், இவ்வாறு 3.8 மில்லியன் மைல்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்கில் இருந்து லண்டனை 30 வினாடிகளில் சென்றடைவதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சூரிய கடிகாரம் உள்ள கோவில் எது தெரியுமா?
NASA attempts to touch the sun and explore.

இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தின் மூலம் அதிக வெப்பத்தை தாங்கும் கவசத்திற்கு பின் கருவிகளை பயன்படுத்தி சூரியனின் சூழலை அளவிட முயற்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இதையெல்லாம் கண்டுபிடிக்க போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் சூரியனுடைய அலைகளை அளவிடுவதில் மிக முக்கிய ஒன்றாக திட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com