உடைந்தால் தானாகவே ஒட்டிக்கொள்ளும் உயிருள்ள கட்டடங்கள். ஆச்சரியப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்!

New Construction technology
New Construction technology
Published on

ட்டடம் கட்டவேண்டும் என்றால் சிமெண்ட், செங்கல், மணல் இல்லாமல் அது சாத்தியமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, உடைந்தால் தானாகவே தன்னை சரிசெய்துகொள்ளும் ஒரு உயிருள்ள கட்டடப் பொருளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள். வெனிஸ் நகரில் நடந்து வரும் ஒரு பிரம்மாண்டமான கண்காட்சியில் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பு இதை சாத்தியமாக்கி காட்டியுள்ளது. 

இந்த புதிய தொழில்நுட்பம், கலை, அறிவியல் மற்றும் இயற்கையை ஒன்றாக இணைக்கும் ஒரு சூப்பரான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சிமெண்டிற்குப் பதிலாக, உயிருள்ள பாக்டீரியாக்களை வைத்து எப்படி கட்டடம் கட்டுகிறார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உயிருள்ள கட்டடம்!

இந்த புதிய முறையில், நவீன த்ரீடி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடப் பொருட்களை உருவாக்குகிறார்கள். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பொருட்களுக்குள் சயனோபாக்டீரியா எனப்படும் உயிருள்ள நுண்ணுயிரிகளை மிகவும் பாதுகாப்பாக அடைத்து வைக்கிறார்கள். இந்த பாக்டீரியாக்கள் உயிர்வாழவும் நன்கு வளரவும் சரியான அளவு வெளிச்சம், ஈரப்பதம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை கட்டாயம் தேவை.

இதை ஒரு பெரிய கட்டடமாக உருவாக்கும்போது, அது வெறும் உயிரற்ற சுவராக இல்லாமல், நம்மோடு சேர்ந்து சுவாசிக்கும் ஒரு உயிருள்ள அமைப்பாகவே மாறிவிடுகிறது. இந்த பாக்டீரியாக்கள் இயற்கையோடு இணைந்து எப்படி ஆச்சரியப்படும் வகையில் வேலை செய்கின்றன என்பதுதான் இதன் ஹைலைட். இந்தக் கண்காட்சியில் இதைப் பராமரிக்கவே தனியாக ஆட்களை நியமித்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
New Construction technology

கார்பனை உறிஞ்சும்!

இந்த நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை இரண்டு வழிகளில் தங்களுக்குள் இழுத்துக்கொள்கின்றன. ஒன்று, சாதாரண மரங்களைப்போல ஒளிச்சேர்க்கை மூலமாக கார்பனை உறிஞ்சுவது. மற்றொன்று, சுற்றியுள்ள வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி மிகவும் திடமான கார்பனேட்டுகளை உருவாக்குவது.

 ஆரம்பகட்ட ஆய்வுகளில், இந்த பாக்டீரியாக்கள் கலந்த ஹைட்ரோஜெல் முதல் முப்பது நாட்களில் ஒரு கிராமுக்கு சுமார் இரண்டு மில்லிகிராம் கார்பனை உறிஞ்சியிருப்பது உறுதியாகியுள்ளது. அப்படியே நானூறு நாட்கள் கழித்துப் பார்க்கும்போது, இது இருபத்தி ஆறு மில்லிகிராமாக அதிகரித்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் இல்லாத சாதாரண கட்டுப்பாட்டுப் பொருளில் இந்த அளவுக்கு எந்த ஒரு மாற்றமும் நடக்கவில்லை.

தற்போதைய நிலையில், உலகிலேயே உயிருள்ள பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டட அமைப்பு இதுதான் எனலாம். ஆனால், இதை வைத்து உலக வெப்பமயமாதலை ஒரேயடியாகக் குறைத்துவிட முடியும் என இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், இருபத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சி சற்று மந்தமாகிவிடுகிறது. ஆனாலும், நாளாக நாளாக இந்த கட்டடப் பொருள் மேலும் அதிக உறுதியைப் பெறுகிறது என்பது ஒரு மிகச் சிறந்த செய்தி.

இதையும் படியுங்கள்:
ரசாயன உரங்கள் விவசாயியின் நண்பனா? மண்ணின் எதிரியா? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
New Construction technology

மற்ற ரசாயன முறைகளைப் போல இதில் எந்தவிதமான நச்சுப் பொருட்களும் வெளியேறுவதில்லை. இது நமது சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இதன் நீண்ட கால உழைப்பை உறுதி செய்ய இன்னும் பல வருட ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவைப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com