
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் பல கார்கள், குறிப்பாக எஸ்.யூ.வி-கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs) உட்பட, 15 க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளை விற்பனை செய்கிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய பயணிகள் மற்றும் வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட பொலிரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதுப்பிப்பு மாடலில் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மஹிந்திராவின் தயாரிப்பான பொலிரோ காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் அட்டகாகமான வசதியும் இதில் உள்ளது.
இந்த மாடல் இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகளவு விற்பனையாகும் மாடல்களில் மிக நீண்ட காலமாக முக்கிய இடத்தை பிடித்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
புதிய புதுப்பிக்கப்பட்ட பொலிரோ மாடலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இன்னும் கொஞ்சம் ஸ்டைலான, வசதியான மற்றும் நவீன பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா புதிய பொலிரோவின் வெளிப்புறத்திற்கு ஒரு மாற்றத்தை அளித்தது மட்டுமல்லாமல், கேபினுக்குள் சில தேவையான அம்சங்களையும் சேர்த்துள்ளது. புதிய ஸ்டீல் பிளாக் நிறத்திலும், புதிய அலாய் வீல்களிலும் நிலையான பொலிரோ இப்போது மிகவும் ஸ்டைலாகத் தெரிகிறது. முக்கிய புதுப்பிப்பு என்னவென்றால், புதிய மாடலில் நீங்கள் இப்போது ஒரு புதிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடு ஆகியவற்றைப் பெறுகிறீர்கள். அதைத் தவிர, இரண்டும் மேனுவல் ஏசி, பவர் ஜன்னல்கள் மற்றும் ரிமோட் லாக்கிங் / அன்லாக்கிங் போன்ற மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதில் காரில் பயணிக்கும் ஒவ்வொரு பயணமும் பிரீமியமாக உணரப்படுவதை உறுதிசெய்யும் வகையில் லெதரெட் (leatherette interiors) உட்புறங்கள் மற்றும் ஏழு பெரியவர்கள் வசதியான அமரக்கூடிய வகையில் மேம்பட்ட வசதியுடன் கூடிய விசாலமான 7 இருக்கைகள் கொண்ட கேபின் உள்ளது.
2025 பொலேரோ மாடல் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (75PS/210Nm) மூலம் இதில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த எஸ்யூவி காரில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வண்ணங்களைப் பொறுத்தவரை, மஹிந்திரா பொலிரோ கார் அசத்தலான 4 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. அதாவது, புதிய பொலிரோ- டயமண்ட் ஒயிட், டிசாட் சில்வர், ராக்கி பெய்க் மற்றும் ஸ்டெல்த் பிளாக் என நான்கு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் B4, B6, B6(O) மற்றும் B8 ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
எஸ்யூவி வாடிக்கையாளர்கள் இந்த காரை மிகவும் விரும்புவதற்கு முக்கிய காரணம், மேடு பள்ளம் உள்ளிட்ட மோசமான கரடுமுரடான சாலைகளில் ஒவ்வொரு பயணத்திலும் சிறந்த சவாரி வசதிக்காக மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குவதுடன், அனைத்து விதமான சாலைகளிலும் இந்த காரை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது என்பதால் தான்.
பார்த்த உடனே ஒரு முரட்டுத்தனமான தோற்றத்துடன் எஸ்யூவி பிரியர்களை வசீகரிக்கும் இந்த காரில் உள்ள எளிமையான க்ரில் அமைப்பு, தட்டையான பானட், பவர் ஸ்டீயரிங், ரியர் வைப்பர், டிஜிட்டல் கிளஸ்டர், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல அடிப்படை வசதிகள் புதிய பொலிரோவில் உள்ளது.
மேலும் இந்த இந்த காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், EBD உடன் ABS மற்றும் ISOFIX குழந்தை இருக்கை, எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட பல உயர்தரமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.
மஹிந்திராவின் தயாரிப்பான பொலிரோவின் ஆரம்ப விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது.