தற்போதுள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் ஆர்வம் என்பது இன்றியமையாத தொழில்நுட்பத் தேவையாகவும், தொடர்ச்சியான பயன்பாடாகவும் மாறியுள்ளது. இணையத் தேடல், சமூக ஊடகங்கள், தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு போன்ற காரணங்களால் மனிதர்களுக்கு இதன் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள், ஒன்ப்ளஸ் மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களின் 5ஜி (5G) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட புதிய மாடல்கள் கிடைக்கி்ன்றன. ரூ. 20,000 விலைக்குள் பல சிறந்த பட்ஜெட் கைபேசிகளும், ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளான Croma போன்ற தளங்களில் பல்வேறு தள்ளுபடிகளுடன் விற்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆகஸ்ட் 2026 மாதத்தில், Google Pixel 11 சீரிஸ், Xiaomi Redmi Note 17 5G, Vivo S2, Poco M8 Power மற்றும் iQOO Z11 போன்ற முன்னணி பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூகுளின் வரவிருக்கும் நான்கு மாடல்களான பிக்சல் 11(Pixel 11), பிக்சல் 11 ப்ரோ (Pixel 11 Pro), பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 11 Pro XL) மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் (Pixel 11 Pro Fold) புதிய பிரீமியம் போன்கள் வரும் ஆகஸ்ட் 12-ம்தேதி அறிமுகமாகவுள்ளன. ஆகஸ்ட் 12 அன்று நடைபெறவுள்ள 'மேட் பை கூகுள் 2026' நிகழ்வில் பிக்சல் 11 சீரிஸ் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட்போன்களுடன், இந்த தொழில்நுட்ப ஜாம்பவான் புதிய தலைமுறை பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் பட்ஸ் ஆகியவற்றையும் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போகோ எம்8 பவர் (POCO M8 Power) ஸ்மார்ட்போன் மிகப்பெரிய 8,000mAh பேட்டரி, 7.0 இன்ச் AMOLED திரை மற்றும் 45W Fast Charging ஆதரவுடன் ஆகஸ்ட் 4-ம்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 45W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 8,000mAh பேட்டரி (3 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் எனக் கூறப்படுகிறது). இது 6.9 இன்ச் FHD+ AMOLED 120Hz திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 (Snapdragon 4 Gen 4) செயலி கொண்டு இயங்குகிறது. 6GB / 8GB RAM மற்றும் 128GB உள் நினைவகம், மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு (Micro SD) ஆதரவு மற்றும் இதன் பின்புறம் 50MP இரட்டை கேமராக்கள் உள்ளன.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, தனது S1 மாடலுக்குப் பிறகு சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பின் Vivo S2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 OriginOS 6-ல் இயங்குகிறது. இதன் செயல்திறனை அதிகரிக்க மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசஸரை பயன்படுத்தியுள்ளனர். Vivo S2 போனில் 6.83-இன்ச் 1.5K 3D வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 7050mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. இதற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால், குறைந்த நேரத்திலேயே போனை சார்ஜ் செய்யமுடியும். தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க IP68 மற்றும் IP69 ரேட்டிங்கும் இந்த போனுக்கு உண்டு. இந்த போன் நீலம், பிரான்ஸ் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.39,999 ஆகவும், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.45,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 11 முதல் விற்பனை தொடங்குகிறது.
50 MP கேமரா, 8,000Ah பேட்டரி, OLED திரை, சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 4 சிப்செட், நான்கு ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட், ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 6.99 இன்ச் AMOLED டிஸ்பிளே, 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா போன்ற சிறப்பு சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த போன் இந்தியாவில் ஆகஸ்ட் 6-ம்தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விற்பனை ஆகஸ்ட் 12-ம்தேதி அமேசான் மற்றும் ஷாவ்மி (Xiaomi) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்குகிறது. இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme 16x 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆகஸ்ட் 12-ம்தேதி மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளது. இது ப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5W சார்ஜிங் வசதியுடன் கூடிய பெரிய 7,000mAh பேட்டரி, மென்மையான காட்சியைத் தரும் 144Hz டிஸ்ப்ளே, மீடியா டெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300), 50MP AI முதன்மைப் பின்புறக் கேமரா போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
ப்ளூமிங் பிரவுன் மற்றும் ப்ளூமிங் சில்வர் (Blooming Brown, Blooming Silver) நிறங்களில் கிடைக்கும் இந்த போன் இந்தியாவில் தோராயமாக ரூ.15,000 முதல் ரூ.18,000 விலைக்குள் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) இன்று (ஆகஸ்ட் 8) முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே, 6,000mAh பேட்டரி, 50 MPகேமரா, 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
இந்த போனுக்கு 6 வருடங்களுக்குப் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை ஆகஸ்ட் 12 முதல் தொடக்கம். இதன் ஆரம்ப விலை ரூ.23,999-ல் இருந்து தொடங்குகிறது.
மீடியா டெக் டைமன்சிட்டி செயலியுடன் iQOO Z11 இம்மாதத்தின் நடுப்பகுதியில் (ஆகஸ்ட்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று iQOO அறிவித்துள்ளது. நீலம் மற்றும் பச்சை என குறைந்தபட்சம் இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். குறிப்பாக, சீனப் பதிப்பில் காணப்படும் சதுர வடிவ கேமரா ஐலண்டிற்குப் பதிலாக, iQOO Z11-இல் கிடைமட்ட மாத்திரை வடிவ பின்புற கேமரா மாட்யூல் இடம்பெறும்.
இது தவிர, iQOO Z11-இல் மேற்புறத்தில் ஒரு ஸ்பீக்கர் கிரில் மற்றும் ஒரு மைக்ரோஃபோன், போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் ஸ்மார்ட்போனின் வெளியீடு நெருங்கும்போது மற்ற விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.