சீன நிறுவனமாக ஒப்போ (Oppo), ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் சாதனங்கள், ஆடியோ சாதனங்கள் போன்றவற்றைத் தயாரித்து 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஒப்போ, அதன் கேமரா புதுமைகள், ColorOS மென்பொருள் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்திற்காக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால், Oppo என்பது தொழில்நுட்பத்தில் புதுமையைப் புகுத்தி, நல்ல விலையில் தரமான ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
அந்த வகையில் கடந்த ஜனவரி 8-ம்தேதி, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓப்போ ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. 2025-ல் வெளியான ரெனோ 14 சீரிஸின் அடுத்த கட்டமாக இந்த புதிய மாடல்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய ரெனோ 15 சீரிஸில், iPhone Pro மாடல்களை நினைவூட்டும் வகையில் முக்கிய மாற்றமாக கேமரா ஐலண்ட் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
ஓப்போ ரெனோ 15 5ஜி, ஓப்போ ரெனோ 15 புரோ 5ஜி மற்றும் ரெனோ 15 Pro Mini என மூன்று மாடல்களாக வெளியாகி உள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
ஓப்போ ரெனோ 15 5ஜி
ஓப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் மற்றும் கலர் ஓ.எஸ். 16 இதில் இடம் பெறுகிறது. 6.32 அங்குல அமோலெட் டிஸ்பிளே, 2640x1216 பிக்சல்கள் ரெசல்யூசன், 1.5கே குவாலிட்டி, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 3600 நிட்ஸ் பிரகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமரா அம்சங்களில் 200 எம்.பி. மெயின் கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்.பி. பெரிஸ்கோப் கேமரா ஆகியவை உள்ளன. செல்பி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்காக 50 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமிங் விளையாடும்போது போன் கொஞ்சம் கூட சூடாகாம இருக்க AI கூலிங் சிஸ்டமும் இந்த போனில் இருப்பது முக்கிய அம்சமாகும்.
இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், ஐ.பி.66, ஐ.பி.68 மற்றும் ஐ.பி.69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. 6,200mAh பேட்டரியுடன், 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ஓப்போ ரெனோ 15 புரோ 5ஜி
ஓப்போ ரெனோ 15 புரோ 5ஜி மாடலிலும் பெரும்பாலும் இதே அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதில், 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மீடியாடெக் டைமென்சிட்டி 8450 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் 6.78 அங்குல பெரிய டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும் 6500 எம்.ஏ.எச். பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 50 வாட்ஸ் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 200MP Ultra-Clear மெயின் கேமரா இருக்கு. இதில் உள்ள 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மூலமா நீங்க தூரத்துல இருக்குற பொருளை கூட செம குவாலிட்டியா ஜூம் செய்து எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் வசதியும் செய்துள்ளதால், நீங்க ஒரு புரொபஷனல் வீடியோகிராஃபராவே மாறி விடலாம்.
ரெனோ 15 புரோ மினி
சின்ன போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்காக 6.32 இன்ச் OLED டிஸ்ப்ளேவோட ஒப்போ ரெனோ 15 புரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நிறுவனம். இது, 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மீடியாடெக் டைமென்சிட்டி 8450 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினிபோனில் 6,200mAh பேட்டரி, f/1.8 அபெர்சுர் கொண்ட 200MP மெயின் கேமராவைக் கொண்டுள்ளது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, இந்த மாடலில் 1.5K ரிசொலுஷன், 120Hz ரெப்பிரேஷ் ரேட் மற்றும் 3,600 நிட்ஸ் பீக் பிரைட்னெஸையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல்களில் செல்பி எடுப்பவர்களின் வசதிக்காக 200MP பிரைமரி கேமரா, 50MP 3.5x டெலிபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமராக்கள் உள்ளன. மொத்தத்தில் அடக்கமா, சிறியதாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒப்போ ரெனோ 15 புரோ மினி ஸ்மார்ட்போன் நிச்சயமாக பிடிக்கும்.
- இந்த மூன்று மாடல்களும் IP66, IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தர சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. மேலும் புளூடூத் 5.4, NFC மற்றும் ஆப்டிகல் கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் ஸ்டோரேஜ் பொருத்தவரையில் 8+256,12+256 மற்றும் 12+512 ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 15 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கிளேசியர் ஒயிட், ட்விலைட் ப்ளூ மற்றும் அரோரா ப்ளூ ஆகிய 3 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று மாடல்களிலும் பெரிய பேட்டரி இருந்தாலும், போன் ரொம்ப ஸ்லிம்மா இருக்குற மாதிரி வடிவமைத்துள்ளது தான் இந்த போனுடைய ஸ்பெஷாலிட்டி. கூடவே 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கு. இதை தவிர இந்த போனில் அலுமினியம் அலாய் பிரேம் மற்றும் பின்புறத்தில் க்ளாஸ் டிசைன் கொண்டுள்ளது.
ஓப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போன், 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,45,999 எனவும் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,48,999 மற்றும் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ,53,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 13-ம்தேதி முதல் பிளிப்கார்ட் (flipkart) மற்றும் ஓப்போ அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வாங்கலாம்.