அடேங்கப்பா 8000mAh பேட்டரியா... இனி 3 நாளைக்கு சார்ஜ் போடவே வேண்டாம் மக்களே!

8000mAh பேட்டரி மற்றும் கூகுள் ஜெமினி ஏஐ அம்சங்களுடன் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள புதிய ரியல்மி போன் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
Realme Narzo 100x 5G ரியல்மி போன்
Realme Narzo 100x 5G ரியல்மி போன்AI Image
Updated on

இந்திய மொபைல் சந்தையில் நாளுக்கு நாள் புதுப்புது மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக ஒரு பிரம்மாண்டமான சாதனத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100x 5G) மாடல். இதன் அபாரமான சிறப்பம்சங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தின் உச்சமாகவே அமைந்துள்ளன. இந்த புதிய சாதனம் நிச்சயம் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் மிக முக்கியமான ஹைலைட் அதனுடைய மிகப்பெரிய பேட்டரி திறன் ஆகும். இதில் 8000mAh அளவிலான சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் சார்ஜ் குறைந்துவிடுமே என்ற கவலை உங்களுக்குத் துளியும் இருக்காது. மேலும் 45W வேகமான சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்களுக்கு இது தடையின்றி உழைக்கும்.

அசத்தலான திரை மற்றும் செயலி!

இதன் டிஸ்ப்ளே அனுபவத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் மிகவும் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. 6.8-inch அல்ட்ரா பிரைட் LCD திரையுடன் இது சந்தைக்கு வருகிறது. இதனுடன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 nits அதிகபட்ச வெளிச்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் பயன்படுத்தும்போதும் இதனுடைய திரை எந்தவித மங்கலும் இன்றி மிகத் தெளிவாகத் தெரியும்.

செயல்திறனைப் பொறுத்தவரை இதில் மிகவும் பிரபலமான MediaTek Dimensity 6300 சிப்செட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் மொபைல் சூடாகிவிடும் என்ற பிரச்சனையைத் தவிர்க்க ஐயாயிரத்து முந்நூறு மில்லிமீட்டர் அளவிலான வேப்பர் கூலிங் அமைப்பு இதில் இருக்கிறது. எனவே கேமிங் பிரியர்களுக்கு இந்த அட்டகாசமான ரியல்மி போன் மிகவும் பிடித்தமான ஒரு தேர்வாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் வேலைகளை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு: மனிதர்களை மாற்றிவிடுமா AI?
Realme Narzo 100x 5G ரியல்மி போன்

செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமரா!

புகைப்படங்களை எடுப்பதற்காகப் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் கொண்ட சிறப்பான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 50MP முதன்மை சென்சார் மிகத் துல்லியமான படங்களை அழகாக எடுக்க உதவுகிறது. செல்பி எடுப்பதற்கும் வீடியோ கால்கள் பேசுவதற்கும் முன்புறத்தில் 8MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்கும் வகையில் இதன் மென்பொருள் மிகவும் நேர்த்தியாகவும் கவனமாகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme Narzo 100x 5G ரியல்மி போன்
Realme Narzo 100x 5G ரியல்மி போன்91mobiles

இந்த மொபைலின் மிகச் சிறந்த அம்சமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கூறலாம். கூகுள் ஜெமினி (Google Gemini) நேரடியாக இதனுள் இணைக்கப்பட்டுள்ளது. ஏஐ எரேசர் (AI Eraser 2.0) மூலம் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை நொடியில் அழித்துவிடலாம். மேலும் AI pulse Light மற்றும் போர்ட்ரைட் லைட்டிங் போன்ற அசத்தலான வசதிகளும் இதில் தாராளமாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
இது மட்டும் நடந்தால் பெட்ரோல் விலை 220-230 ரூபாய் வரையில் உயரும்..!
Realme Narzo 100x 5G ரியல்மி போன்

இயங்குதளம் மற்றும் விலை! 

இயங்குதளத்தைப் பொறுத்தவரை Realme UI 7.0 வெர்ஷனில் இயங்குகிறது. இந்த அதிநவீன இயங்குதளம் பயனர்களுக்கு மிக மென்மையான மற்றும் வேகமான பயன்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. புதிய ஏஐ வசதிகளுடன் இணைந்து செயல்படும்போது இதன் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் இதன் சாப்ட்வேர் கட்டமைப்பு மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் சேமிப்புத் திறனைப் பார்த்தால் இது மூன்று வகைகளில் கிடைக்கிறது. அடிப்படை மாடலான 4GB Ram மாடலின் அசல் விலை 20,999 ரூபாயாகும். எனினும் வங்கிச் சலுகைகள் மற்றும் கூப்பன்களைப் பயன்படுத்தும்போது இரண்டாயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதிகபட்சமாக 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு கொண்ட மாடலும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கப் போகிறது.

குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அசுரத்தனமான ரியல்மி போன் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

logo
Kalki Online
kalkionline.com