உங்கள் வேலைகளை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு: மனிதர்களை மாற்றிவிடுமா AI?

AI benefits Tamil - செயற்கை
AI benefits Tamil - செயற்கை AI Image
Updated on

ந்த AI பற்றி எல்லோரும் பேசுகிறார்களே AI என்றால் என்ன? அது நமக்கு எப்படி உதவுகிறது? நம் ஒரு நாளின் அனைத்து வேலைகளையும் இந்த AI செய்துவிடுமா? மனிதர்களையே மாற்றி விடுமா?

இப்படி பல கேள்விகளைக்கேட்ட என் தோழியின் அம்மாவிற்கு நான் தந்த பதில் இதோ…

AI என்பது செயற்கை நுண்ணறிவு..பல விஷயங்களை கற்றுக் கொண்டு பணிகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட கணினி தொழில்நுட்பம்.

AI செய்யும் உதவிகள்

ஒரு காலத்தில் அறிவியல் புனைக்கதைகளில் மட்டுமே இடம் பெற்ற Artificial intelligence இன்று நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. நாம் உணராமலேயே பல இடங்களில் AI நமக்கு உதவி செய்து வருகிறது. உதாரணமாக,

Google search

நாம் தேடும் தகவலை விரைவாகவும் நமக்கு பொருத்தமாகவும் கண்டுபிடிக்க AI உதவுகிறது.

Google maps

இது போக்குவரத்து நெரிசலை கணித்து குறுகிய மற்றும் வேகமான பாதையை பரிந்துரைக்கிறது.

Translation

ஒரு மொழியில் உள்ள தகவலை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய AI உதவுகிறது.

Medical assistance

சில நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு AI தொழில்நுட்பம் துணை புரிகிறது..

Banking service

சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளை க் கண்டறிந்து மோசடிகளைத் தவிர்க்க AIபயன்படுகிறது.

Online shopping

நமக்கு பிடித்த பொருட்களை ஆன்லைன் லில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைப்பதும் AI இன் செயல்தான்.

இது மட்டுமா? மங்கலான பழங்கால புகைப்படங்களை தெளிவாக்குவது போன்ற வசதிகளை AI வழங்குகிறது. மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப பாடங்களை வழங்கி கற்றலை எளிதாக்குகிறது. பல நிறுவனங்களில் chatbotகள் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

AI benefits Tamil - செயற்கை
AI benefits Tamil - செயற்கை நுண்ணறிவுAI Image

இப்படி நாம் பயன்படுத்தும் பல வசதிகளின் பின்னணியில் A I அமைதியாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு இசைச் செயலியில் பாடலைக் கேட்ட பிறகு உங்கள் ரசனைக்கு ஏற்ப மற்ற பாடல்களை பரிந்துரை செய்வதும் இந்த AI தான்.

மின்னஞ்சலில் வரும் தேவையற்ற "don't தகவல்களை வடிகட்டுவதிலும் AI முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தில் நாம் ஒரு பொருள் வாங்கும்போது "உங்களுக்கு இதுவும் பிடிக்கலாம்’’ என்று காட்டப்படும் பரிந்துரைகளும் AI செய்வதுதான்.

விவசாயத்திலும் AI புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மண்ணின் தன்மை, வானிலை மற்றும் பயிர்களின் வளர்ச்சியை ஆய்வு செய்வது எப்போது நீர் பாய்ச்ச வேண்டும், எப்போது உரமிட வேண்டும் என்பதைக்கூட சில நவீன தொழில்நுட்பங்கள் பரிந்துரைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காக்கும் ஒரு மினியேச்சர் கருவி: மலையேற்றக் கடிகாரங்களின் ரகசியம்!
AI benefits Tamil - செயற்கை

பேரிடர் காலங்களில் வெள்ளம் அல்லது புயலின் தாக்கத்தை முன்கூட்டியே கணிக்கவும் AI உதவுகிறது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு பொருட்களை அடையாளம் காட்டுவது பேச்சை எழுத்தாக மாற்றுவது போன்ற வசதிகளையும் AI வழங்குகிறது.

இப்படி நாம் நினைப்பதைவிட பல துறைகளில் அமைதியாக செயல்பட்டு மனிதர்களின் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் மறைமுக உதவியாளராக AI இன்று விளங்கி வருகிறது. இன்னும் புரியும் வகையில் சொல்வதானால் நாம் பயணம் செல்கையில் இந்த ரோடில் traffic jamஇருக்கிறது வேறு பாதையில் போகவும் என்று கைபேசி சொல்வதும் இந்த artificial intelligence தான்.

ஒரு காலத்தில் science fiction இல் மட்டும் பார்த்த AI இப்போது வாழ்க்கையில் உதவி செய்யும் நண்பனாக மாறிவிட்டது.. இருப்பினும் AI மனிதர்களை முழுமையாக மாற்றாது.

ஆனால் அன்பு இரக்கம் பொறுப்பு ஒழுக்கம் போன்ற மனித உணர்வுகளுக்கு AI மாற்றாக இருக்க முடியாது. கண்டிப்பாக இது ஒரு சக்தி வாய்ந்த கருவிதான். அதை அறிவோடும் அளவோடும் பயன்படுத்தினால் அது நம் வேலையை எளிதாக்கும். ஆனால் சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுப்பை மனிதர்கள்தான் ஏற்க வேண்டும். அப்படி இருந்தால் கண்ணாடி AI போட்டியாளன் இல்லை நண்பன்தான்.

இதையும் படியுங்கள்:
ரயிலில் சேரும் கழிவுகளை எப்படி வெளியேற்றுகிறார்கள்?
AI benefits Tamil - செயற்கை

இந்தத் தொழில்நுட்பப் புரிதலின் மூலம், உங்களைச் சுற்றி நிகழும் டிஜிட்டல் மாற்றங்களை எளிதாகப் புரிந்து கொண்டு, உங்கள் தினசரி வேலைகளையும் திட்டமிடல் களையும் நவீன செயலிகள் கொண்டு இன்னும் வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் மாற்றியமைக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com