குறைந்த விலையில் பிரம்மாண்ட அம்சங்கள்: ‘Redmi Note 17 5G’ போனின் சிறப்பம்சங்கள்!

சியோமி நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Redmi Note 17 5G ஸ்மார்ட்போன்
Redmi Note 17 5G ஸ்மார்ட்போன்image credit-mi.com
Updated on

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் தனது முற்றிலும் புதிய ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையிலும் வெளியாகியுள்ளது.

ரெட்மி (Redmi) என்பது சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சியோமி (Xiaomi)-யின் கீழ் இயங்கும் ஒரு பிரபல துணை பிராண்ட் (Sub-brand) ஆகும். கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது குறைந்த விலையில் உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர மின்னணுச் சாதனங்களை தயாரித்து வழங்குவதற்காக உலகளவில் அறியப்படுகிறது.

பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை ஸ்மார்ட்போன்கள் (குறிப்பாக ரெட்மி நோட் சீரிஸ்), ஸ்மார்ட் தொலைக் காட்சிகள் (Smart TVs), மடிக்கணினிகள் (Laptops), டேப்லெட்டுகள் மற்றும் பவர் வங்கிகளை இந்த நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளாகும். குறைவான விலையில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 8000mAh பெரிய பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்நாப்டிராகன் சிப்செட், TÜV கண் பாதுகாப்பு, DCI-P3 Wide Color Gamut, TrueColour திரை, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், HydroTouch 2.0 உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வருகிறது.

இந்த போனில் 6.9 அங்குல அமோலெட் (AMOLED) தொடுதிரை, 120Hz ரெஃப்ரேஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் உச்ச பிரகாசம் வழங்கப்பட்டுள்ளது.

100 சதவிகித டிசிஐ-பி, 3 வண்ண வரம்பு, 5ஜி நெட்வொர்க், கண்களை பாதிக்காத பாதுகாப்பு வசதி மற்றும் ஈரமான கைகளிலும் பயன்படுத்த உதவும் ஹைட்ரோடச் 2.0 வசதியும் உள்ளது. 200 சதவிகிதம் அதிக ஒலி கொண்ட ஸ்பீக்கர்களும் இடம் பெற்றுள்ளன.

50MP மெகாபிக்சல் ஏஐ முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா இடம் பெற்றுள்ளன. நைட் மோட், ஏஐ எச்டிஆர், டைனமிக் ஷாட்ஸ், ஏஐ எடிட்டர் மற்றும் 2 மடங்கு சென்சார் ஜூம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

4 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 4 ஜென் 4 சிப் செட் (Snapdragon 4 Gen 4) இதில் உள்ளது. அதிகபட்சமாக 16ஜிபி ரேம் மற்றும் 2 டிபி வரை நினைவகத்தை விரிவுபடுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 17 5g|ஸ்மார்ட்போன்
Redmi Note 17 5g|ஸ்மார்ட்போன்image credit-mi.com

மேலும் 10,416 சதுர மிமீ கிராபைட் குளிரூட்டும் அமைப்பு இருப்பதால் நீண்ட நேர பயன்பாட்டின் போது வெப்பத்தை கட்டுப்படுதத உதவும்.

8000 mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், போனின் தடிமன் 8.4 மிமீ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. USB Type-C போர்ட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. 1600 சார்ஜிங் சுழற்சிகளுக்கு பிறகும் 80 சதவிகிதம் வரை பேட்டரி திறனை தக்கவைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்டிக் ப்ளூ, டார்க் நைட், ஸ்டார்லைட் பர்ப்பிள் மூன்று நிற வண்ணங்களில் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 இயங்குதளத்தில் இந்த போன் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரெண்டு நாள் ஆனாலும் சார்ஜ் குறையாது... 20,000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் இதோ!
Redmi Note 17 5G ஸ்மார்ட்போன்

4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும். கொரில்லா கிளாஸ் 7-ஐ பாதுகாப்பு ஐபி65 தர நீர், தூசி எதிர்ப்பு வசதியும் உள்ளது.

தொகுப்பில் உள்ளவை: REDMI Note 17 5G ஸ்மார்ட்போன் ×1, பவர் அடாப்டர் ×1, USB Type-C டேட்டா கேபிள் ×1, பாதுகாப்பு உறை (Case) ×1, ஸ்கிரீன் ப்ரொடெக்டர் ×1 (தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டது), சிம் கார்டு எடுக்கும் கருவி ×1, பயனர் கையேடு ×1 (உத்தரவாதத் தகவல் உட்பட).

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.27,999 விலையிலும், அறிமுக சலுகையாக ரூ.24,999க்கும் கிடைக்கிறது.

8 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.30,999 விலையிலும், அறிமுக சலுமைகயாக ரூ.27,999-க்கும் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளில் ரூ.3000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
HONOR Robot Phone: என்னது போன் நம்மகூட பேசுமா? புதிய தொழில்நுட்பத்துடன் சீனாவில் அறிமுகம்!
Redmi Note 17 5G ஸ்மார்ட்போன்

நீங்கள் இந்த போனை Amazon அல்லது சியோமி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com