விபத்து என்பது யாரும் விரும்பாத ஒரு நிகழ்வு. ஒரு விபத்து நிகழ்ந்த பின், பிற்காலத்தில் மீண்டும் நிகழாதவாறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த இடத்தில் ஏற்படுத்தி வைத்தாலும், ஏதோ ஒரு வழியில் புது விதமாய் மீண்டும் நடக்கத்தான் செய்கின்றன. இதை முற்றிலும் தடுக்க ஏதேனும் விசேஷ சக்திகள் இருக்கா?
இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் பங்கு
வேகமாக வளர்ந்து வரும் இன்றைய போக்குவரத்து உலகில், தொழில்நுட்பத்தின் பங்கு, வாகனத்தின் வேகம் மற்றும் அதன் வசதியை கொடுப்பதற்காக மட்டும் வருவதில்லை. அதை உபயோகிக்கும் மனிதர்களின் உயிரையும் சேர்த்து தான் பாதுகாக்கின்றன. உலகம் முழுவதும் இப்போதுள்ள மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான (ADAS) ஏற்கனவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தானியங்கி அவசரகால பிரேக்கிங் (automatic emergency braking), லேன் மாறும் எச்சரிக்கைகள் (lane departure warnings), நம்மால் பார்க்க முடியாத இடங்களை கண்டறிதல் (blind-spot detection) போன்ற அம்சங்கள் இப்போது பல உயர் ரக வாகனங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இது வருங்காலத்தில் எல்லா வாகனங்களிலும் வரும்போது விபத்துகள் முற்றிலும் தடுக்கப்படலாம்.
பொது போக்குவரத்தில் நிகழ்நேர GPS கண்காணிப்பு (real-time GPS tracking), ஓட்டுநர்களுக்கான சோர்வு கண்டறிதல் (fatigue detection systems for drivers) அமைப்புகளோடு சேர்த்து AI- அடிப்படையிலான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முறை, மனித பிழை மற்றும் நெரிசலால் (Congested traffic) உண்டாகும் அபாயங்களைக் குறைக்கின்றன.
பல நாடுகளில் நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துக்குள்ளாகும் மண்டலங்களைக் பிரத்தியேகமாக கண்காணிக்க ட்ரோன்(Drone) கண்காணிப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவசரகால நேரங்களில் விரைவாக உதவ முடிகிறது.
தண்டவாளங்களில் உள்ள விரிசல்கள் அல்லது என்ஜின்களில் உண்டாகும் அதிக வெப்பம் ஆகியவை பெரும் பிரச்னையாக மாறுவதற்கு முன்பே internet of things தொழில்நுட்பம் மூலம் பல சென்சார்கள் உதவியால் இந்திய ரயில்வே துறையால் பராமரிக்கப்படுகிறது.
வரவிருக்கும் தொழில்நுட்பங்கள்
தற்போது ஐரோப்பா, ஆசியாவின் சில பகுதிகளில் சோதனையில் இருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை (Satellite-based traffic management) ஒரு நாட்டின் மொத்த சாலைகளையும் விண்வெளியில் இருந்து கண்காணித்து ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க உதவுகிறது.
Vehicle-to-Everything (V2X) தொடர்பு வசதி எதிர்காலத்தில் அனைத்து வாகனம், சாதனங்களில் வரும் பட்சத்தில், கார்கள் ஒன்றோடு ஒன்று தகவல்களை பரிமாறி கொள்ளும், அதன் தொடர்புடைய போக்குவரத்து விளக்குகள், சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளின் ஸ்மார்ட்போன்கள் என்று எல்லாமே ஒரே நேரத்தில் செயற்கைக்கோளின் உதவியுடன் தொடர்பில் இருக்கும். இதனால் விபத்துக்களும் தடுக்கப்படும்.
முற்றிலும் AI யில் இயங்கும் விபத்து கணிப்பு (AI-powered accident prediction) என்பது ஒரு வாகனத்தை சுற்றிய அனைத்து தரவுகளையும் எடுத்துக்கொள்ளும். அது வானிலை, ஓட்டுநர் நடத்தை, தற்போதைய சாலை நிலைகளை ஆராய்வது என்று AI யின் உதவியோடு அந்தந்த வாகனங்கள் விபத்து ஏற்படாதவாறு செயல்படும்.