பொழுதுபோக்கு துறையில் பொறியியலின் பங்கு என்ன? அதற்கான சிறந்த கல்வியை எங்கு பெறுவது?

entertainment industry
Entertainment Industry
Published on

சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் பொறியியல் படிப்புகள் சார்ந்த வேலைகள் பெருகிய அளவில் இருக்கின்றன, திரைப்படங்கள், நேரடி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பொறியியலின் (Engineering) தாக்கம் இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் பார்க்கும் மற்றும் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் புதுமையான விஷயங்களை புகுத்துவதில் பொறியாளர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் பொறியியலின் பங்களிப்புகள்:

பொழுதுபோக்குத் துறையில் பொறியியலாளர்களின் முதன்மை வேளைகளில் ஒன்று ஸ்பெஷல் எபக்ட்ஸ் (Special Effects) மற்றும் அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) வடிவமைப்பு போன்றவை ஆகும். உதாரணமாக, திரைப்படங்கள் மற்றும் தீம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் பயன்படுத்தப்படும் ரோபோடிக் பொருட்கள் மற்றும் அனிமேஷன் (Animations) உருவாக்குவதில் மெக்கானிக்கல் பொறியாளர்கள் (Mechanical Engineers) முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த பொறியாளர்கள் மூலம் சில சிக்கலான அமைப்புகளை வடிவமைத்து, பார்வையாளர்களுக்கு கதையோடு ஒட்டி போகும் ஓர் யதார்த்தமான கதை மற்றும் இதர பொழுதுபோக்கு அனுபவத்தை உணர வைக்கிறது.

திரைப்படங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கச்சிதமான ரசிக்கும் சூழலை பார்வையாளர்களுக்கு வழங்க மேம்பட்ட ஒளி (Lighting) மற்றும் அதற்கேற்ற ஒலி (Sound) அமைப்புகளை உருவாக்குவதில் மின் பொறியாளர்கள் (Electrical Engineers) பெரிய பங்களிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அளவில் சின்னது, எடையில் பெரியது… அது என்னது? 
entertainment industry

கணினி பொறியாளர்கள் (Computer Engineers) விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects - VFX) மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட படங்கள் (Computer Generated Imagery - CGI) உருவாக்கம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். இந்த பொறியாளர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி தேவைப்படும் மென்பொருளை உருவாக்கி, நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் படமெடுக்க முடியாத ஓர் உலகில் அனைவரையும் அழைத்து செல்லும் ஓர் அசாதாரண உணர்வை பெற வைப்பார்கள். உதாரணமாக 'அவெஞ்சர்ஸ்' தொடர் மற்றும் 'அவதார்' போன்ற CGI இன் முழுமையான பயன்பாட்டைக் கொண்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களில், இந்த பொறியாளர்களின் பங்கு தெளிவாக நமக்கு தெரியும்.

பொழுதுபோக்குக்கு ஏற்ற தரமான பொறியியல் கல்வியை எங்கு பயிலாம்:

பொழுதுபோக்கு பொறியியல் துறையில் உயர்தர கல்வியை வழங்குவதில் பல நாடுகள் தனித்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா (USA), கலிபோர்னியா தெற்கு பல்கலைக்கழகம் (University of Southern California) (USC) மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் தி ஆர்ட்ஸ் (California Institute of the Arts - CalArts) போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பொழுதுபோக்கு தொழில்நுட்பம் மற்றும் அதன் பொறியியல் சார்ந்த சிறப்பு படிப்புகளை உலக தரத்தில் வழங்குகின்றன.

யுனைடெட் கிங்டம்மில் (UK) லண்டன் கலை சார்ந்த பல்கலைக்கழகம் (University of the Arts London) மற்றும் நேஷனல் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஸ்கூல் (National Film and Television School) போன்ற சிறந்த கல்வி நிறுவனங்கள், திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த பொறியியல் கலந்த படிப்புகளை வழங்குகிறது. இந்த படிப்புகள் மூலம் மாணவர்கள் சில தொழில் முனைவர்கள் மூலம் பல நடைமுறை அனுபவங்களை பெறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இனி பார்வை இழந்தவர்களும் பார்க்க முடியும்... ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் சாதனை!
entertainment industry

ஆசியாவில் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொழுதுபோக்கு பொறியியல் கல்வியில் முன்னணியில் உள்ளன. டோக்கியோ கலை பல்கலைக்கழகம் (Tokyo University of the Arts) மற்றும் கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Korea Advanced Institute of Science and Technology - KAIST) போன்ற பல்கலைக்கழகங்கள் டிஜிட்டல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்நுட்பங்களுடன் சார்ந்த பொறியியல் படிப்புகளை வழங்குகிறார்கள். இந்த கல்வி நிறுவனங்கள் தங்கள் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் வலுவான தொழில் வல்லுனர்களின் தொடர்புகள் மூலம், உயர்தர நிறுவங்களில் பணிபுரியும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com