

அறிவியல் உலகம் நமக்குத் தரும் அதிசய உண்மைகள் பல. நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே போகிறது. சில உண்மைகளைப் பார்த்து வியக்கலாமா?
அறிவியல் உண்மைகள்(Science facts)
1. உலகில் ஐஸ்லாந்தில் மட்டுமே கொசுக்கள் இல்லை என்று அனைவரும் நினைத்த நிலையில், இந்த நிலை 2025 அக்டோபர் மாதம் மாறி விட்டது. அங்கும் கொசுக்கள் வந்து விட்டன!
2. மனிதர்கள் பறவைகள் போலப் பறக்க வேண்டுமெனில் 20 அடி நீளமுள்ள இறக்கைகள் வேண்டுமாம்.
3. நீங்கள் தூங்கி எழுந்தவுடன் மூளை தன் இயல்பான இயக்கத்தைப் பெற 15 முதல் 30 நிமிடங்கள் ஆகுமாம். அதுவரை மூளை இருக்கும் நிலை ஸ்லீப் இனர்ஷியா (Sleep Inertia) எனப்படுகிறது.
4. உலகில் அறியப்படும் பெரிய ப்ரைம் நம்பர் (Prime Number) 41,024,320 இலக்கங்களைக் கொண்டிருக்கிறது.
5. தவளை தன் தோல் மூலமே சுவாசிக்கிறது, குடிக்கிறது.
6. ஆமையின் மேல் ஓடு 50 எலும்புகளால் ஆனது.
7. இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் இணைக்கும் குகை கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 23.5 மைல். இதுவே நீருக்கு அடியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய குகையாகும்,
8. 2025 மார்ச் நிலவரப்படி நாம் அறிந்த அளவில் சூரியனைச் சுற்றி வரும் சந்திரன்களின் எண்ணிக்கை 953.
9. சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு உடல் முற்றிலுமாக அழிந்து எலும்புக்கூடாக மாற ஆகும் காலம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகும்.
10. பூமி மீது மோதி டைனோஸர்களை அழித்த குறுங்கோள் மணிக்கு 27000 மைல் வேகத்தில் வந்து மோதியது.
11. உலகில் அதிக உயரம் உள்ள மலைச் சிகரம் மவுண்ட் எவரெஸ்ட். இதன் உயரம் 29031.69 அடி. 'மானா கிய' என்ற செயலற்றுப் போன எரிமலை ஹவாயில் இருக்கிறது. இதன் அடி முதல் உச்சி வரை அளந்தால் அது 33497 அடி இருக்கிறது.
12. மொட்டைக் கத்தியை வைத்து வெங்காயத்தை உரித்தால் கூரிய கத்தியை வைத்து அதை உரிப்பதால் ஏற்படும் கண்ணீரை விட அதிகம் கண்ணீர் வரும்.
13. மனித இதயம் அதிக வலிமை உடையது. ஒரு லட்சம் தடவை துடித்து சராசரியாக 2500 காலன் ரத்தத்தை தினமும் அது வெளியேற்றுகிறது.
14. உடலில் அதிகம் குறிப்பிடப்படும் அங்கங்களின் எண்ணிக்கை 78. அதில் அதிக கனமானது தோல் தான்!
15. சுறாமீன்களைப் புரட்டித் தலைகீழாகப் போட்டால், அது செயலற்றுப் போய் விடும்.
16. நாம் காணும் பிரபஞ்சத்தில் சுமார் 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன!
17. 223 ரெமிங்டன் துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டு மணிக்கு 2727 மைல் வேகத்தில் சீறிப் பாய்கிறது. இது ஒரு விநாடியில் 11 கால்பந்து மைதானத்தைக் கடக்கும் தூரமாகும்.
18. ஒரே மாதிரியாகப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு கை ரேகைகள் வேறு மாதிரியாகவே இருக்கும்.
19. ஒருவர் டை (tie) கட்டிக் கொள்வதால் மூளைக்குப் பாயும் அவரது இரத்த ஓட்டத்தின் வேகம் 7.5% குறைகிறது. அது தலைவலி, மயக்கம் உள்ளிட்டவற்றைத் தரும்.
20. உலகில் வாழ்ந்தவற்றுள் அதிக ஆயுள் கொண்ட நாய் வாழ்ந்த காலம் 29.5 வருடங்கள். பூனையை எடுத்துக் கொண்டால் அதிக ஆயுளுடன் இருந்த பூனை ஒன்று 38 வருடம் 3 நாட்கள் வாழ்ந்தது.
21. உலகில் சந்தோஷமான நாடு ஃபின்லாந்து தான். வோர்ல்ட் ஹாப்பினெஸ் ரிபோர்ட் தரும் தகவலின் படி ஆறு வருடங்கள் தொடர்ந்து ஃபின்லாந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
22. முழுவதும் வைரத்தினாலேயே ஆன கிரகம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் 55 CANCRI e. இது பூமியைப் போல இரு மடங்கு பெரியது. இது 40 ஒளி ஆண்டு தூரத்தில் கடக ராசியில் உள்ளது.
23. நீருக்கடியில் மூச்சைப் பிடித்து ஒருவர் இருந்த காலம் 24.5 நிமிடமாகும். சாதாரணமாக ஒருவர் 30 முதல் 90 விநாடிகளே நீருக்கடியில் மூச்சைப் பிடித்து இருக்க முடியும். ஆனால், க்ரோஷியன் புடிமிர் சபாட் (Croatian Budimir Sobat) என்பவர் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி 24 நிமிடம் 37 விநாடிகள் நீருக்கடியில் மூச்சைப் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தினார்.