கொட்டாவிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான உண்மை! அதிர்ச்சி தரும் அறிவியல்!

a baby, a woman and a cat are yawning
Yawning
Published on

கொட்டாவி என்பது தூக்கம் அல்லது சோர்வின் அறிகுறி என்றுதான் நாம் பொதுவாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கொட்டாவியின் பின்னால் ஒரு வியக்கத்தக்க அறிவியல் உண்மை மறைந்திருக்கிறது. கொட்டாவி என்பது மூளையை குளிர்விக்கும் ஒரு இயற்கையான செயல்பாடு என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நம் மூளை உடலின் மொத்த ஆற்றலில் பெரும் பகுதியை பயன்படுத்துகிறது. இதனால், கணிசமான அளவு வெப்பத்தை உருவாக்குகிறது. மூளையின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதன் செயல்திறன் குறையக்கூடும். இந்த வெப்பநிலையை சீராக வைத்திருக்கத்தான் நம் உடல் ஒரு விந்தையான வழிமுறைதான் கொட்டாவி. இதுவே, 'வெப்பநிலைக் கட்டுப்பாடு கோட்பாடு (Thermoregulatory Theory)' ஆகும்.

கொட்டாவி எப்படி மூளையை குளிர்விக்கிறது?

கொட்டாவியின்போது நடக்கும் சில விஷயங்கள், மூளைக்குத் தேவையான குளிர்ச்சியைத் தருகின்றன.

ஆழமான சுவாசம்: கொட்டாவியின்போது, நாம் வாயை அகலமாகத் திறந்து ஆழமாக மூச்சு உள்ளிழுக்கிறோம். அப்போது, குளிர்ந்த காற்று நுரையீரலுக்குள் சென்று, அங்குள்ள இரத்தத்தை குளிர்விக்கிறது.

இந்த குளிர்ந்த இரத்தம் மூளைக்குச் செல்லும்போது, அது மூளையின் வெப்பநிலையைக் குறைக்கிறது.

இரத்த ஓட்ட அதிகரிப்பு: கொட்டாவி விடும்போது, தாடை மற்றும் முகத்தில் உள்ள தசைகள் விரிவடைந்து சுருங்குகின்றன. இது, அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், மூளையிலிருந்து வெப்பமான இரத்தம் வெளியேறி, உடலின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் குளிர்ந்த இரத்தம் உள்ளே செல்கிறது.

இதையும் படியுங்கள்:
விஞ்ஞானத்தால் விளக்க முடியாத மர்மங்கள்!
a baby, a woman and a cat are yawning

சரியான வெப்பநிலை: ஆராய்ச்சிகள், கொட்டாவியின் அளவு சுற்றுப்புற வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடுவதாகக் காட்டுகின்றன. மிதமான, இதமான வெப்பநிலையில் கொட்டாவி விடுவது அதிகமாக இருக்கிறது. அதே சமயம், மிகக் குளிர்ந்த அல்லது மிக வெப்பமான காலநிலையில் கொட்டாவி விடுவது குறைகிறது. இது, கொட்டாவியானது வெறுமனே தூக்கத்தின் அடையாளம் அல்ல, மாறாக மூளையின் வெப்பநிலையைச் சமன்படுத்தும் ஒரு செயல் என்பதற்கான சான்றாக கருதப்படுகிறது.

கொட்டாவியின் முக்கியத்துவம்:

கொட்டாவி என்பது வெறும் சோர்வின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான உடலியல் செயல்பாடு.

  • மூளையின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க கொட்டாவி உதவுவதால், அது மன விழிப்புணர்வையும், கவனத்தையும் மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் ஒரே வேலையில் இருக்கும்போது கொட்டாவி வந்தால், அது உங்கள் மூளைக்கு ஒரு சிறிய 'ரீசெட்' இடைவெளியை அளிக்கிறது என்று அர்த்தம்.

  • சில நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொட்டாவி முறைகள் அசாதாரணமாக இருக்கும். எனவே, கொட்டாவியை கவனிப்பதன் மூலம் சில நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்குள் உருவாகும் மின்சாரம்: உங்களுக்குத் தெரியாத பயோ-எலக்ட்ரிக் ரகசியம்!
a baby, a woman and a cat are yawning

ஆகையால், அடுத்த முறை நீங்கள் கொட்டாவி விடும்போது, அது சோர்வின் அறிகுறி மட்டுமல்ல, உங்கள் மூளையைக் குளிர்விக்க வெளிப்படும் ஒரு இயற்கையான செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வியத்தகு செயல், உங்கள் உடல், உங்கள் மூளைக்கு ஒரு குளிர்ந்த காற்றோட்டத்தை அளித்து, அதை சிறப்பாக செயல்பட வைக்கிறது என்று உணருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com