உலக பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா(Tesla) கார் இந்தியாவிற்கு வந்துவிட்டது. மற்ற நாடுகளை எப்படி இந்தக் கார் கவர்ந்தது? அதில் அப்படி என்ன சுவாரசியம் உள்ளது? மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் என்ன தனித்துவம் இதில் உள்ளது?
டெஸ்லாவின் அதிநவீன தொழில்நுட்பம், பயனர்களை மையமாகக் (user-centric philosophy) கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற உலகளாவிய EV பிராண்டுகளில் இருந்து சற்று தனித்து நிற்கிறது. பாரம்பரிய வாகன உற்பத்தியாளர்கள் போலல்லாமல் டெஸ்லா நேரடி-நுகர்வோர் மாதிரியை (direct-to-consumer model) கடைப்பிடிக்கிறது.
இதனால் மக்கள் டீலர்ஷிப்களை நோக்கி வராமல் முற்றிலும் ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இது கார் வாங்கும் செயல்முறையை எளிதாக்குவது மட்டுமல்லாமல் வெளிப்படையான விலை நிர்ணயம் (transparent pricing) மற்றும் தனித்துவமான சேவையையும் (personalized service) பெற உறுதி செய்கிறது.
டெஸ்லாவின் தனித்துவமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, அதன் பிரத்யேக சூப்பர் சார்ஜர் நெட்வொர்க் (Supercharger network) ஆகும். இது உலகளவில் ஆயிரக்கணக்கான இடங்களில் அதிவேக சார்ஜிங்கை வழங்கிக்கொண்டிருக்கிறது. மற்ற EV பிராண்ட்கள் சீரற்ற வேக தன்மையுடன் இயங்கும் மூன்றாம் தரப்பு சார்ஜிங் (third-party charging stations) நிலையங்களைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது.
டெஸ்லா வாகனங்கள் ஓவர்-தி-ஏர் மென்பொருள் (over-the-air software updates) பெறுகின்றன. இது காரின் புதிய அம்சங்கள், செயல்திறன் மேம்பாடுகள் (performance enhancements), புதிய பாதுகாப்பு மேம்பாடுகள் பெறுவதன் மூலம் உரிமையாளர்கள் தங்கள் கார்களை அடுத்தடுத்த ஆண்டுகள் மேம்படுத்திக்கொள்ள (Continuous Update) அனுமதிக்கிறது.
உரிமையாளர்களின் அனுபவங்கள்:
ஓசுமின் உலகளாவிய கணக்கெடுப்பின்படி (Osum’s global survey) டெஸ்லா 98% வாடிக்கையாளர் திருப்தி விகிதத்தைக் கொண்டுள்ளது; இது மற்ற நிறுவனங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையை 85%ஐ விட மிக அதிகமாம்! உள்ளுணர்வு தொடுதிரை இடைமுகம் (intuitive touch screen interface), குறைந்தபட்ச உட்புறங்கள் (minimalist interiors), தொடக்க வேகம் (instant torque) போன்றவற்றை உரிமையாளர்கள் பாராட்டுகிறார்கள். ஆட்டோ பைலட் (Autopilot) அல்லது சுய-ஓட்டுநர் (Full Self-Driving features) போன்ற அம்சங்கள் இன்னும் சோதனை அடிப்படையில் இருந்தாலும்; டெஸ்லா மூலம்தான் இவ்வுலகிற்கு எதிர்காலத்தில் கார்கள் எவ்வாறு இருக்கும் என்ற பார்வையைக் காட்டுகிறது.
ஓட்டுவது எப்படி இருக்கும்?
டெஸ்லாவை ஓட்டுவது ஒரு பாரம்பரிய காரை விட ஸ்மார்ட் சாதனத்தை இயக்குவது போன்றது. குரல்-செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் (voice-activated controls) முதல் AI-இயங்கும் வழிசெலுத்தல் (AI-powered navigation), நிகழ்நேரப் போக்குவரத்து அறிவிப்புகள் (real-time traffic updates) வரை; இதன் அனுபவம் அதிவேகமாகவும் ஆற்றல்மிக்கதாகவும் இருக்கும்.
கரோக் (Caraoke), பயோ வெப்பன் டிஃபென்ஸ் மோட் (Bioweapon Defense Mode), டெஸ்லாவின் (மாடல் X இல்) இருக்கும் ஃபால்கன் விங் கதவுகள் (Falcon Wing doors) போன்ற தனித்துவமான அம்சங்கள் புதுமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. இது கார் ஓட்டுநரின் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது; ஒரு தனிப்பயனாக்கப்பட்ட (personalized experience) சூழலையும் உருவாக்குகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் இவர்களின் இன்னொரு நிறுவனமான SpaceX மூலம் செலுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைகோள்களும் பெரும் பங்களிக்கின்றன.