

நமது கிரகமான பூமி இந்த பிரம்மாண்ட அண்டத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் சிறிய புள்ளி மட்டும் தான். உங்களுக்கு தெரிந்த அனைவருமே இங்கே மட்டும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பயணம் தொடங்கும் இடமும் இது தான். நாம் வளிமண்டலத்தை கடந்து நிலவு, சூரியன் மற்ற நட்சத்திரங்களை தாண்டி பிரபஞ்சத்தின் எல்லைக்கு செல்வதற்கு ஒரு மிகபெரிய பயணத்தை தொடங்க போகிறோம். இந்த பயணம் நம் பிரபஞ்சத்தை உண்மையாக புரிந்துக் கொள்வதற்கான தேடல்.
முதலில் பூமியை விட்டு வெளியேறும் போது நிலவு இருக்கும். நிலவு பூமியிலிருந்து சுமார் 3,84,000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறது. நீங்கள் ஒரு காரை நிலவை நோக்கி மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால், நிலவை அடைய 160 நாட்களுக்கு மேல் ஆகும். அதோடு நிலவிலிருந்து பூமியை பார்க்கும் போது நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கோளம் கருப்பு வெற்றிடத்தில் இருப்பதுப்போல தெரியும்.
அடுத்து நாம் பார்க்க போவது சூரியன். பூமியிலிருந்து தோராயமாக 1AU தொலைவில் சூரியன் இருக்கிறது. 1AU என்றால், 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு. பூமியிலிருந்து சூரியனை அளவிடும் நிலையான அளவீடு தான் Astronomical unit. சூரியனில் இருந்து வரக்கூடிய ஒளி நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து 8 நிமிடம் 20 நொடியில் பூமியை வந்தடைகிறது.
அடுத்ததாக பூமிக்கு மிக அருகில் இருக்கும் செவ்வாய் கிரகம் 54.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த இரண்டு கோள்களும் சூரியனுக்கு எதிரெதிரே இருக்கும் போது 401 மில்லியன் கிலோ மீட்டர் வரை அதிகமாகலாம். இந்த தூரம் தான் செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வுகளுக்கு தடையாக உள்ளது.
நாம் சூரிய மண்டலத்தின் வெளிப்புறப்பகுதிக்கு பயணிக்கும் போது மிகவும் தொலைவில் உள்ள பனிக்கட்டி கிரகமான நெப்ட்யூன் கிரகத்தை சந்திப்போம். பூமியில் இருந்து சுமார் 450 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிரகம் சூரிய மண்டலத்தின் விளிம்பைக் குறிக்கிறது.
அடுத்ததாக இங்கிருந்து சூரிய மண்டலத்தின் விளிம்பிற்கு போனால் அங்கே oort cloud இருக்கும். சூரியனை சுற்றி ஒரு கோளவடிவில் பனிக்கட்டி பொருட்களால் சூழப்பட்டது தான் இந்த Oort cloud. இது சூரியனில் இருந்து 2000 முதல் 5000 AU இருக்கு. இது கிட்டத்தட்ட 1 லட்சம் AU வரை நீண்டிருக்கிறது. இதுதான் சூரிய குடும்பத்தின் இறுதி எல்லையாக இருக்கிறது.
நம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் தான் Alpha centauri. இது சூரியனில் இருந்து 4.3 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. நம்முடைய தற்போதைய விண்வெளி அறிவை வைத்து இந்த நட்சத்திரத்திற்கு போக பல ஒளியாண்டுகள் ஆகும்.
Milky way galaxy சுமார் 1 லட்சம் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது. இதிலிருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் சொந்த கிரகங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது. இப்போது Milky way galaxy ஐ விட்டு வெளியே செல்லும் போது நாம் புரிந்துக் கொள்ள முடியாத பிரம்மாண்டமான விண்வெளியில் நுழைகிறோம்.
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அண்டக்கடலில் கேலக்ஸிகள் தனிதனியாகப் பிரிக்கப்பட்டு விண்வெளியில் மிதந்துக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். Milky way galaxy லோக்கல் குரூப் என்று சொல்லப்படும் கேலக்ஸியில் உள்ள ஒரு பகுதி மட்டும் தான். லோக்கல் குரூப் கேலக்ஸி என்பது நமது சூரிய குடும்பத்தை சுற்றி சுமார் பத்து மில்லியன் ஒளியாண்டுகளுக்குள் இருக்கும் அனைத்து கேலக்ஸிகளும் லோக்கல் குரூப் கேலக்ஸி என்று அழைக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட கேலக்ஸிகள் இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் (Universe) நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா? அல்லது நம்மை போலவே பலர் இருக்கிறார்களா? என்னும் கேள்வியே மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.