மனித உடலைப் பற்றி வெஸாலியஸ் கண்டறிந்த ரகசியம்!

ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கையை உடைத்த De Humani Corporis Fabrica புத்தகம்!
Andreas Vesalius and De Humani Corporis Fabrica book
Andreas Vesalius and De Humani Corporis Fabrica book
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

னித உடல் என்பது இயற்கையின் மிகப்பெரிய அதிசயமாகும். எலும்புகள், தசைகள், நரம்புகள், இதயம், மூளை போன்ற பல உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் மனிதன் உயிருடன் வாழ்கிறான். இந்த உடல் அமைப்பு (Human body) மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள மனிதன் பல நூற்றாண்டுகளாக முயன்று வந்தான். அவற்றில் முக்கியமான திருப்புமுனையாக விளங்கியவர் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிரியஸ் வெஸாலியஸ் (Andreas Vesalius) ஆவார்.

ஆண்டிரியஸ் வெஸாலியஸ் 1514 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்தார். அவர் ஒரு சிறந்த மருத்துவரும் உடலியல் அறிஞரும் ஆவார். இத்தாலியின் படுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். மனித உடலைப் பற்றி அதுவரை நிலவி வந்த தவறான கருத்துகளை நேரடி ஆய்வுகள் மூலம் திருத்தியவர் இவரே.

வெஸாலியசுக்கு முன் நிலவிய உடலியல் கருத்துகள்:

வெஸாலியசுக்கு முன், மனித உடல் பற்றிய அறிவு பெரும்பாலும் கேலன் (Galen) என்ற கிரேக்க மருத்துவரின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. கேலன் மனித உடலை நேரடியாக ஆய்வு செய்யாமல், மிருகங்களின் உடலை வைத்து பல கருத்துகளைச் சொன்னார். ஆனால், அவை அனைத்தும் மனித உடலுக்கு சரியாகப் பொருந்தவில்லை. இருப்பினும் நூற்றாண்டுகளாக அவை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன.

வெஸாலியஸ் செய்த முக்கிய கண்டுபிடிப்புகள்:

ஆண்டிரியஸ் வெஸாலியஸ் முதன்முறையாக மனித உடலை நேரடியாக வெட்டி ஆய்வு செய்தார் (Human Dissection). இதன் மூலம் பல உண்மைகள் வெளிப்பட்டன. மனித எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு குறித்து துல்லியமான விளக்கம் அளித்தார். இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகள் பற்றிய தவறான பழைய கருத்துகளை மறுத்தார். நரம்புகள் மூளையிலிருந்து கட்டுப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தினார். மனித உடல் அமைப்பு பற்றிய துல்லியமான வரைப்படங்களை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க! 2026 பிப்ரவரி மாதத்தின் வானியல் காலண்டர் இதோ - எந்த நாளில் என்ன அதிசயம் நடக்கும்!
Andreas Vesalius and De Humani Corporis Fabrica book

புகழ்பெற்ற நூல் – De Humani Corporis Fabrica:

1543 ஆம் ஆண்டு வெஸாலியஸ் எழுதிய 'De Humani Corporis Fabrica' என்ற நூல் மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நூலில் மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் விரிவாக விளக்கப்பட்டது. அழகான, தெளிவான உடலியல் ஓவியங்கள் இடம்பெற்றன. அறிவியல் ஆதாரங்களுடன் உண்மைகள் நிரூபிக்கப்பட்டன. இந்த நூல் நவீன மருத்துவக் கல்விக்கான அடித்தளமாக அமைந்தது.

வெஸாலியஸ் புதிய உறுப்புகளை உருவாக்கி கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மனித உடல் உண்மையில் எப்படி அமைந்துள்ளது என்பதை அறிவியல் ஆதாரத்துடன் நிரூபித்தார்.

வெஸாலியஸின் முக்கியத்துவம்:

ஆண்டிரியஸ் வெஸாலியஸ், 'நவீன உடலியல் அறிவியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். கண் மூடித்தனமான நம்பிக்கைகளை விட, நேரடி ஆய்வும் ஆதாரமும் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தினார். மருத்துவம் ஒரு அறிவியல் துறையாக வளர்வதற்கு பெரிதும் உதவினார்.

இதையும் படியுங்கள்:
கரடி போல மாதக் கணக்கில் தூங்க ஆசையா? விஞ்ஞானிகள் சொல்லும் குட் நியூஸ்!
Andreas Vesalius and De Humani Corporis Fabrica book

மனித உடல் பற்றிய உண்மையான அறிவு வளர்ச்சியில் ஆண்டிரியஸ் வெஸாலியஸ் செய்த பங்களிப்பு அளவிட முடியாதது. 16-ம் நூற்றாண்டில் அவர் மேற்கொண்ட துணிச்சலான ஆய்வுகள் இல்லையெனில், இன்று நாம் அறியும் நவீன மருத்துவ அறிவியல் உருவாகியிருக்காது. மனித உடல் இயங்கும் முறையை சரியான அறிவியல் பாதையில் கொண்டு வந்தவர் ஆண்டிரியஸ் வெஸாலியஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com