
நம் பூமி கிரகத்தை,12,952 பொருட்கள் சுற்றி வருவதாக ஜூன் 29 நிலவரப்படி செயற்கைக்கோள் கண்காணிப்பு வலைத்தளமான ஆர்பிட் நவ் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை (GEO) மத்திய பூமி சுற்று பாதை (MEO) அல்லது தாழ்வான பூமி சுற்று பாதை (LEO) போன்ற பூமியை சுற்றியுள்ள பல சுற்றுப்பாதைகளில் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் விண்வெளியில் அதிக செயற்கைக்கோள்களை கொண்ட 10 நாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அமெரிக்கா
நவம்பர் 2024 நிலவரப்படி, ஸ்டேட்டிஸ்டா.காம் (Statista.com) தகவலின்படி, 8530 செயற்கைக்கோள்களுடன் அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை கொண்ட முதல் நாடாக உள்ளது. அரசு முகமைகள், ராணுவ சொத்துக்கள், தனியார் நிறுவனங்கள் இதற்கு காரணமாக இருந்தாலும் 7400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை SpaceX இன் ஸ்டார்லிங்க் (Starlink) கொண்டுள்ளது.
2. ரஷ்யா
n2yo.com குறிப்பிட்டுள்ளபடி, பூமியின் சுற்றுப்பாதையில் 1559 செயற்கைக்கோள்களை கொண்டு ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. தகவல் தொடர்பு மற்றும் பூமி ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களில் கூட்டமைப்பை 2036 க்கு 2600 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரோஸ்காஸ்மோஸ் ஸ்டேட் ஸ்பேஸ் கார்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி யூரி போரிசோவ் 2024-ல் கூறியிருந்தார்.
3. சீனா
n2yo.com-ல் உள்ள தரவுகளின்படி, பூமியின் சுற்றுப்பாதையில் அரசு ராணுவம் மற்றும் வணிக அமைப்புகளை கொண்டு 906 செயற்கைக்கோள்களுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது . CERES-1 மார்ச் மாதத்தில், லாங் மார்ச்-6/6A Qianfan தொகுப்புகள் மற்றும் குவோவாங் (Guowang) உள்ளிட்ட முக்கிய செயற்கைக்கோள்களை இந்த ஆண்டு செலுத்தியது.
4. இங்கிலாந்து
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள எண்களின்படி, மார்ச் 28, 2025 நிலவரப்படி, இங்கிலாந்துக்கு மட்டுமே சொந்தமான 763 செயற்கைக்கோள்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ ஐ.எஸ்.ஆர், தகவல் தொடர்பு, வணிக/அறிவியல் நோக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.
5. ஜப்பான்
n2yo.com-ல் உள்ள தரவுகளின்படி, பூமி சுற்று பாதையில் 203 செயற்கைக்கோள்களுடன் ஜப்பான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அரசு, ராணுவம், அறிவியல் மற்றும் புதுமையான துறைகளில் இவை பரவியுள்ளது .
6. பிரான்ஸ்
ராணுவ உளவுத்துறை, உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமி படங்கள் மற்றும் விண்வெளி பாதுகாப்பு செயல் விளக்கங்கள் கொண்ட 100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பை பிரான்ஸ் பராமரித்து ஆறாவது இடத்தில் உள்ளது .
7. இந்தியா
தனியார் ஆப்பரேட்டர்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் உட்பட சுமார் 136 செயற்கை கோள்கள்(ISRO) தகவல்படி, டிசம்பர் 31, 2024 நிலவரப்படி பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டு இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. LEO-ல் உள்ள 22 செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் GEO-ல் உள்ள 32 செயற்கைக்கோள்கள் தவிர, சந்திரயான்-2 ஆர்பிட்டர் மற்றும் ஆதித்யா-L1 போன்ற ஆழமான விண்வெளி பயணங்களும் செயலில் இருந்தன.
8. ஜெர்மனி
n2yo.com-ல் உள்ள தரவுகளின்படி, அரசு, அறிவியல் பாதுகாப்பு மற்றும் வணிக பணிகளை உள்ளடக்கி ஜெர்மனி விண்வெளியில் சுமார் 82 செயலில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டு எட்டாவது இடத்தில் உள்ளது. ராணுவ விண்வெளி திறன்களில் ஒரு வரலாற்று பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாக வாகன் டுடே (Vogon Today) குறிப்பிட்டுள்ளது.
9. கனடா
n2yo-ன் பூமி கண்காணிப்பு தகவல் தொடர்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நோக்கங்களுக்காக கனடா இதுவரை சுமார் 64 செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி ஒன்பதாவது இடத்தில் உள்ளது Telesat, MDA, GHGSat மற்றும் Northstar ஆகியவை கனடாவிலிருந்து செயல்படும் முக்கிய செயற்கைக்கோள் நிறுவனங்கள் ஆகும்.
10. இத்தாலி
கண்காணிப்பு தகவல் தொடர்பு மற்றும் வழி செலுத்தலின் கவனம் செலுத்துவதற்காக பூமி சுற்று பாதையில் 66 செயற்கைக்கோள்களை கொண்டு இத்தாலி பத்தாவது இடத்தில் உள்ளது.