டிவி ரிமோட் கருப்பு, ஏசி ரிமோட் வெள்ளை - பின்னணியில் இருக்கும் சுவாரசிய அறிவியல் உண்மை!

தினமும் பயன்படுத்தும் ரிமோட்களின் நிறத்திற்கு பின்னால் உள்ள ரகசிய காரணங்கள் என்னென்ன?
ரிமோட் நிறம் - Remote Color
ரிமோட் நிறம் - Remote ColorAI Image
Updated on

வீட்டில் அவசியமான டிவி, ஏசி ரிமோட்டுகளின் நிற வேறுபாட்டுக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. ஏசி ரிமோட் மற்றும் இன்டோர் யூனிட் ரிமோட் நிறம் வெள்ளையாக இருப்பது வெப்பத்தை குறைவாக உறிஞ்சுவதற்கும், அறையின் இன்டீரியர் அமைதியுடன் பொருந்துவதற்கும் உதவுகிறது. ஒரே ஸ்டைல், ஒரே நிறம் மூலம் தயாரிப்பு வடிவமைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது.

வீட்டின் மிகவும் அத்தியாவசிய பொருளாக இருந்த தொலைக்காட்சியுடன் சேர்ந்து ஏசியும் மிகவும் முக்கிய பொருளாகிவிட்டது. இரண்டையும் உட்கார்ந்த இடத்திலிருந்து இயக்க ரிமோட்டுகள் இருக்கின்றன. அதிலும் தொலைக்காட்சியின் ரிமோட் கருப்பு நிறத்திலும், ஏசியின் ரிமோட் வெள்ளை நிறத்தில் இருப்பதையும் பார்த்திருப்போம்.

எலக்ட்ரானிக் பொருட்களின் வடிவமைப்பிற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதுபோல, அவற்றின் நிறத்திற்கும் பின்னாலும் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.அந்த வகையில் ஏசி ரிமோட் வெள்ளையாகவும்,டிவி ரிமோட் கருப்பாக இருப்பதன் காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஏ சி ரிமோட் வெள்ளை நிறத்திற்கான காரணம்:

எலக்ட்ரானிக் பொருட்களின் டிசைன்கள் மற்றும் நிறங்கள் அறிவியல் காரணங்களை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்படுகின்றன. ஏசியின் ரிமோட் வெள்ளை நிறத்தில் இருப்பதைப் போலவே சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஏசியின் இன்டோர் யூனிட்டும் ரிமோட்டுடன் பொருந்துவதற்காகவே வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.

ஏசி தயாரிப்பு முழுவதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் இருப்பதற்காகவே இவ்வாறு ஒரே மாதிரியான வெண்மை நிற வண்ணம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பொதுவாக படுக்கையறையிலும், அலுவலகங்களிலும் ஒருவித அமைதியை உருவாக்க வெளிர் நிறங்களை டிசைனர்கள் நம்புவதால் இன்டீரியர் டிசைனுக்கு மிகச் சரியாக பொருந்தக்கூடிய வெள்ளை நிறத்தை ஏசிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ரிமோட் நிறம் - Remote Color
ரிமோட் நிறம் - Remote Color

வெப்பத்தை வெள்ளை நிறம் மிகக் குறைவாகவே உறிஞ்சும் என்பதும் மற்றொரு காரணமாக பார்க்கப் படுகிறது. அதேசமயம் கருப்பு நிறம் அதிக வெப்பத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் ஏசி ரிமோட் ஏசி இருக்கும் அறையில் இருந்தாலும், சில சமயங்களில் ஏசி ரிமோட் மீது அந்த அறையில் உள்ள ஜன்னல் அல்லது அதிக வெளிச்சம் உள்ள இடத்தில் இருந்து வெப்பம் தாக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, வெள்ளை நிறத்தில் ரிமோட் இருந்தால் வெப்பத்தை அதிகம் ஈர்க்காது என்ற அடிப்படையில் ரிமோட் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

டிவி ரிமோட் கருப்பு நிறத்திற்கான காரணம்:

டிவி ரிமோட் அதனுடைய பயன்பாட்டு முறையின் காரணமாகவே கருப்பு நிறத்தில் இருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்துவதால் டிவி ரிமோட்டை ஒரு நாளில் பலமுறை தொட்டு பயன்படுத்துவார்கள். இதனால் டிவி ரிமோட்டில் கைகளில் இருக்கும் தூசி, வியர்வை, எண்ணெய் கறைகள் போன்றவை எளிதாக படிந்துவிடும். ஆனாலும் கறைகள் ரிமோட் கறுப்பு நிறமாக இருப்பதால் எளிதில் கண்ணுக்கு தெரியாது. இதன் காரணமாகத்தான் இதனை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அடர் வண்ணத்தை தேர்ந்தெடுத்து ரிமோட்டை உருவாக்கியுள்ளன.

இதையும் படியுங்கள்:
டிவி வாங்கிட்டிங்களா... ஆடியோ சிஸ்டம் வாங்கும் முன் இத கண்டிப்பா படிங்க!
ரிமோட் நிறம் - Remote Color

மேலும் டிவி ரிமோட்டில் இருக்கும் அதிகமான பட்டன்களில் உள்ள எழுத்துக்களும் எண்களும் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக கருப்பு நிற பின்னணி உதவிகரமாக இருப்பதாலும், பட்டன்களை எளிதாக அடையாளம் காணவும் டிவி ரிமோட் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.

தொழில்நுட்பம், சக்தி, எலக்ட்ரானிக் கெஜெட்டுகளின் அடையாளமாக கருப்பு நிறம் கருதப்படுவதால் டிவி, சவுண்ட் சிஸ்டம், செட்டாப் பாக்ஸ் போன்றவை பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே இருக்கின்றன. டிவியை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் எல்லாம் அம்சங்களையும் மனதில் வைத்தே டிவி ரிமோட்டை கருப்பாகவும்,ஏசி ரிமோட்டை வெள்ளையாகவும் தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ளனர்.

நாம் தினந்தோறும் எளிதாக பயன்படுத்தும் ஏசி ரிமோட்,டிவி ரிமோட்டிற்கு பின்னால் பல்வேறு காரணங்களை மனதில் வைத்தே இதனுடைய தயாரிப்பு நிறுவனங்கள் நிறத்தையும் டிசைனையும் தேர்ந்தெடுத்துள்ளது என்பதனை இக்கட்டுரையின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் இந்த கலர் பெயிண்ட் அடிச்சா பூச்சிகளுக்கெல்லாம் ஷாக் அடிக்கும்!
ரிமோட் நிறம் - Remote Color

இந்த சுவாரசியமான தகவலை அறிவதன் மூலம், உங்களது அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் அறிவியல் பின்னணியை எளிதாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையான பராமரிப்புடன் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com