'எடிசன் விளைவு'வும் இன்றைய எலக்ட்ரானிக்ஸ் விந்தையும்!

Edison effect
Edison effect
Published on

மின்சாரம் தடைப்பட்டு மின்விளக்குகள் சில நேரம் எரியவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு மின்விளக்குகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதை கண்டுபிடிக்க தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவு முறை முயன்று தோல்வியுற்று வெற்றி பெற்றார் என்பதை நாம் பலமுறை படித்திருக்கிறோம். பல்வேறு விஷயங்களில் தோல்வி அடைபவர்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக தாமஸ் ஆல்வா எடிசனை கூறுவது உண்டு. அவர் எப்படி பல்பை எரிய வைத்தார்? அது எப்படி மற்றைய கண்டுபிடிப்புகளுக்கு உதவியது? இப்பதிவில் காண்போம்.

அணுகுண்டை பற்றி சிந்திப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே எலக்ட்ரானிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால், சமீப காலத்தில் மூச்சு திணறும் வேகத்தில் அது முன்னேறி உள்ளது. எனவே, விஞ்ஞான துறையில் அது சமீப காலத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இன்றைய உலக விஞ்ஞானக் கலைகளிலும் தொழில்நுட்பங்களிலும் அது ஒன்றாக விளங்குகிறது.

எலக்ட்ரானிக்ஸ் என்றால் ஒரு கம்பின் வழியாக மின்சக்தி செல்லும்போது அதன் உட்புறத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கம்பியின் உலோகம் நெருக்கமான அணுக்களால் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒவ்வொரு அணுவிலும் மையக்கரு உள்ளது.

மையக்கருவை பல மின்னணுக்கள் வேகமாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கம்பியின் வழியாக மின்சக்தி செல்லும்போது மேற்கூறிய மின்னணுக்களில் சில ஒரு நீரோட்டத்தைப் போல பாயும் படி முன்னுக்கு தள்ளப்படுகின்றன. இவை கம்பியின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு தள்ளி விடப்படுகின்றன. மின்னணுக்களின் இந்த தொடர்ச்சியான நீரோட்டம் போன்ற ஓட்டம் ஹீட்டர்கள், விளக்குகள் ஆகியவற்றையும் மற்ற மின் கருவிகளையும் இயக்குகின்றன.

மின் அணுக்களின் இந்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு இடைவெளி மிகவும் குறுகலாக இருந்தால் மின்னணுக்கள் தாவி செல்ல முயற்சிக்கின்றன. அப்பொழுது தீப்பொறி ஏற்படுகிறது. இடைவெளி அதிகமாக இருந்தால் மின்னணுக்களால் தாவி செல்ல முடியாமல் மின்னோட்டம் நின்று விடுகிறது.

உதாரணமாக ஒரு மின் விளக்கின் பல்பை கவனித்தால், அதற்குள் ஒரு மெல்லிய துண்டு கம்பி உள்ளது. அதற்குப் பிலமெண்ட் என்று பெயர். இந்த கம்பியின் வழியாக மின்சக்தி செல்லும் பொழுது அது வெப்பமடைகிறது. அது மிகவும் வெப்பமடைந்ததும் பிரகாசிக்கிறது. ஒளி தெரிகிறது. மேற்கூறிய கம்பி அல்லது பிலமென்ட் உடைந்து விட்டால் அதன் வழியாக மின்சக்தி செல்ல முடியாது. அது ஒளி தருவது இல்லை. அதைத்தான் நாம் ப்யூஸ் ஆகிவிட்டதாக கூறி புதுபல்பை வாங்கி மாட்டுகிறோம்.

தாமஸ் ஆல்வா எடிசன்( 1841 -1930) என்ற விஞ்ஞானிதான் மின் விளக்கின் பல்பை முதன் முதலில் கண்டுபிடித்து அமைத்தார். 1885-ல் அவர் ஒரு தனி சிறப்பு வாய்ந்த பல்பை அமைத்தார். அவர் பல்புக்குள் பிலமெண்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு உலோகத்தகட்டை வைத்தார்.

அவர் அந்த தகட்டிற்கு நேர் மின்னூட்டத்தை (positive charge) அளித்தார். அதன் விளைவாக மின் ஓட்டம் ஏற்பட்டது. உலக தகட்டிற்கு எதிர் மின் ஓட்டம் (Negative Charge) அளித்ததும் மின்னோட்டம் நின்று விட்டது. அவருடைய இந்த கண்டுபிடிப்பிற்கு எடிசன் விளைவு (Edison effect) என்று பெயர். எடிசன் விளைவு மூலமாக என்ன தெரிகிறது என்றால், உலோக தகட்டிற்கு நேர் மின்னூட்டம் அளித்தால் அதற்கும் பிலமெண்ட்டிற்கும் இடையே மின் ஓட்டம் ஏற்படுகிறது என்பதுவே.

பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜான் ஆம்ப்ரோஸ் பிளெமிங் என்னும் ஒரு ஆங்கிலேய பொறியியல் வல்லுநர் எடிசன் கண்டுபிடித்த பல்பை அபிவிருத்தி செய்தார். அவருடைய கண்டுபிடிப்பு தர்மியோனிக் குழல் அல்லது தடுப்பிதழ் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
பட்டையை கிளப்பும் அட்டை! மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனை! ஆச்சரியமூட்டும் உண்மை!
Edison effect

லிடிபிரெஸ்ட் என்னும் ஒரு அமெரிக்க விஞ்ஞானி தர்மியோனிக் குழலை மேலும் அபிவிருத்தி செய்தார். அவர் அந்த குழலை பெரிதுபடுத்தும் சாதனமாக அமைத்தார். அதற்கு ஆடியோன் என்று பெயரிட்டார். அது ட்ரயோட், என்றும் அழைக்கப்படுகிறது. பின்னர் இது ரேடியோ ஏற்படுவதற்கு அடிப்படையா சாதனமாக ஆகியது.

இதையும் படியுங்கள்:
நவம்பர் மாதம் ரிலீஸாகும் டாப் 3 ஸ்மார்ட் போன்கள்!
Edison effect

இவ்விதமாக ஒவ்வொரு மின் சாதன பொருட்களும் ஒன்றினை ஒன்று அடிப்படையாக வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றை எலக்ட்ரானிக்ஸ் விந்தை என்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி என்றும் கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com