'ஜெமினி ஜெம்ஸ்' என்றால் என்ன? அதை பயன்படுத்தி என்ன செய்ய முடியும்?
ஜெமினி ஜெம்ஸ் (Gemini Gems) என்றால் என்ன?
ஜெமினி ஜெம்ஸ் (Gemini Gems) என்பது, ஒரு குறிப்பிட்ட வேலைக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட AI மாடல்கள் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு வேலையை மிகவும் திறமையாகச் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் உதவியாளர்தான் இது.
உதாரணமாக, வீட்டுப் பாடங்களில் உதவும் தனிப் பயிற்சி ஆசிரியர், உங்கள் தொழில் குறித்த வழிகாட்டி அல்லது உங்களுடன் சேர்ந்து கோடிங் எழுதும் ஒரு பார்ட்னர் போல ஜெம்ஸை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஜெமினி ஜெம்ஸின் சிறப்பம்சங்கள்:
ஜெம்ஸ்-ஐ உருவாக்குவது எளிது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஜெம்ஸ்களைத் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்களே உருவாக்கலாம்.
1. நீங்களே ஒரு ஜெம்மை உருவாக்கினால், அதன் நோக்கம் மற்றும் அது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான முழுமையான வழிமுறைகளை அதில் சேமிக்கலாம். இதனால், ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியதில்லை.
2. கூகிள் டிரைவில் (Google Drive) உள்ள ஃபைல்களை பதிவேற்றி, உங்கள் ஜெம்முக்கு மேலும் கூடுதல் தகவல்களைக் கொடுத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
ஜெம்மை வடிவமைக்க 4 எளிய வழிகள்:
கூகிள் பரிந்துரைக்கும் இந்த நான்கு அணுகுமுறைகளைப் பின்பற்றி உங்கள் ஜெம்மை சிறப்பாக வடிவமைக்கலாம்.
1. Persona:அந்த ஜெம் என்னவாகச் செயல்பட வேண்டும் (உதாரணமாக: ஒரு சமையல் நிபுணர்)
2. Task : அது என்ன செய்ய வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.
3. Context : வேலைக்கான பின்னணி விவரங்களைக் கொடுக்கவும்.
4. Format : நீங்கள் விரும்பும் வெளியீட்டு வடிவத்தைக் குறிப்பிடவும்.
ஜெமினி ஜெம்ஸை (Gemini Gems) அணுகுவது எப்படி?
ஜெமினி செயலி (App) அல்லது இணையதளம் வழியாக ஜெம்ஸை அணுகலாம். ஜெம்ஸ்களை உருவாக்கவும், எடிட் செய்யவும், நீக்கவும் 'இணையதள வெர்ஷனை' மட்டுமே பயன்படுத்த முடியும். gemini.google.com தளத்திற்குச் சென்று, "Explore Gems" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஜெம்ஸை பயன்படுத்தி என்ன செய்ய முடியும்?
நீங்கள் உருவாக்கிய தனிப்பயன் ஜெம்ஸை, மற்றவர்களுடன் பகிர்வது (Sharing) தான் இதன் மிகப் பெரிய சிறப்பம்சம். ஒரு சில செட்டிங்ஸ் மாற்றங்கள் மூலம் ஜெம்ஸையும் எளிதாகப் பகிரலாம். யார் பார்க்க வேண்டும், யாருக்கு எடிட் செய்யும் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம்.இது உங்கள் அன்றாட வேலைகளில் இணைந்து, கூட்டுறவை மேம்படுத்தும்.
அலுவலகப் பணி: நீங்கள் ஒரு குழுவில் வேலை செய்யும் போது, தரவுகளை அட்டவணைப்படுத்துதல் (organizing data) அல்லது சுருக்கம் அளித்தல் போன்ற ஒரே மாதிரியான பணிகளை ஆட்டோமேட் செய்ய ஒரு ஜெம்மை உருவாக்கலாம். ஒருவர் உருவாக்கிவிட்ட பிறகு, அதை அனைவருக்கும் பகிரலாம்.
தனிப்பட்ட பயன்பாடு: குறிப்பிட்ட உணவு முறைகளுக்கான (specific diets) உணவுத் திட்டங்களைத் தயாரிக்க ஒரு ஜெம்மை உருவாக்கிக் கொள்ளலாம்.
சரியான முறையில் Prompt கொடுத்து, ஜெம்ஸுக்குத் தேவையான சூழலை (Context) அமைத்துக் கொடுப்பது சவாலாக இருந்தாலும், உங்கள் வேலைகளை ஆட்டோமேட் செய்ய ஜெமினி ஜெம்ஸ் (Gemini Gems) ஒரு சிறந்த கருவியாகும். இப்போது அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதால், இந்த AI உதவியாளர்களைப் பயன்படுத்தத் தொடங்க இதுவே சரியான நேரம்..