அறுவைச் சிகிச்சை அறையில் மருத்துவர்கள் ஏன் பச்சை உடை அணிகிறார்கள்? பின்னணியில் உள்ள அறிவியல்!

மருத்துவமனைகளில் பச்சை நிறம் ஏன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது? கண்சோர்வு குறைப்பு முதல் நோயாளி அமைதி வரை அதன் அறிவியல் காரணங்கள்!
 Doctors green dress
Doctors green dressImage credit: AI Image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

ஏன் பச்சை நிறம்?:

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவர்கள் பிரகாசமான விளக்குகளின்கீழ் வெள்ளைச் சீருடைகளில் அறுவை சிகிச்சைகளில் ஈடுபடும்போது கண் கூச்சம், கண் சோர்வும் ஏற்படுவதைப் பெரும்பாலும் உணர்ந்தனர். மிக முக்கியமாக பல மணி நேரம் நோயாளிகளின் சிவப்பு ரத்தம், திசுக்களை உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் அணிந்த வெள்ளைச் சீருடையைப் பார்க்கும் போது; கவனத்தைத் திசை திருப்பும் சில ‘பச்சை நிறப் பிம்பங்களை ’(பார்வை மறைப்பை) அனுபவித்தனர்.

இதனால்தான் மருத்துவத்துறை பச்சை நிற உடைகளுக்கு (Doctors green dress) மாறியது. காரணம் பச்சை நிறம் சிவப்பு நிறத்தை முற்றிலும் உள்வாங்கிக்கொள்ளும் (Neutralize). இது மருத்துவர்களின் கண்களைத் தெளிவாக்கியது; அறுவைச்சிகிச்சைகளில் சிவப்பு, இளஞ்சிவப்பு திசுக்களின் நுட்பமான நிறவேறுபாடுகளை எளிதாக வேறுபடுத்த உதவியது. கூடவே மருத்துவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி, அறுவை சிகிச்சை தவறுகளைக் குறைத்தது.

உளவியலாக இவற்றின் நன்மைகள்:

அமைதியான உணர்வு: பச்சை நிறம் சற்று இயற்கை, குணப்படுத்துதல், ஓய்வுடன் தொடர்புடையது. வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறச் சீருடைகள் அல்லது திரைகள் (screens) நோயாளிகளைச் சுற்றியிருக்கும்போது; அவர்களின் பதட்டத்தைச் சற்று குறைக்கிறது.

கறைகள் குறைவு: வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறம் உடலின் ரத்தம், திரவக் கறைகளைச் சிறப்பாக மறைத்து அறுவைச் சிகிச்சைகளின்போது தூய்மையான தோற்றத்தைச் சுற்றிலும் பராமரிக்கிறது.

பணியாளர்களுக்கான கண் வசதி: மேலே குறிப்பிட்டதைப்போல் கடுமையான வெளிச்சத்தின்கீழ் நீண்ட நேரம் பணியாளர்கள் பணிபுரியும்போது பச்சை நிறத்தை அணிவதால் சோர்வு குறைவாக இருக்கும். அது கண்ணுக்கு எந்தவிதத் தொந்தரவும் தராது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் ஏன் எண்ணெய் குளியல் அவசியம்? காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!
 Doctors green dress

பச்சை நிறத்தைத் தாண்டி உபயோகிக்கப்படும் மற்ற நிறங்கள்:

நீலம்: பெரும்பாலும் உலகளவில் பச்சை நிறத்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மருத்துவர்களின் உடை (Scrubs), நோயாளிகளின் உடைகளில் (gowns). ஆக நீலமும்; பச்சை நிறம் தரும் நன்மைகளைத் தருகிறது.

வெள்ளை: மருத்துவத்துறையின் ஆய்வகங்கள், அதன் நிர்வாக அமைப்புகளில் தூய்மையைக் (cleanliness) குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அறுவை சிகிச்சை நேரங்களில் இது குறைவாகவே காணப்படுகிறது.

மென்மையான வண்ணங்கள்: சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்குச் சற்று மாறுதலான சூழலைத் தர அவர்கள் அணியும் உடைகளில் மென்மையான வண்ணங்களை (இளம் நீலப்பச்சை அல்லது லாவெண்டர் போன்றவை) இப்போது பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன.

ஆக, மருத்துவமனைகளில் பச்சை நிறத்தின் ஆதிக்கம் என்பது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; அது ஒளியியல் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைத் தன்மையில் வேரூன்றியுள்ளது. முக்கியமாக, அறுவை சிகிச்சை நிபுணர்களின் சோர்வைக் குறைப்பதன் மூலமும், நோயாளிகளை அமைதிப்படுத்துவதன் மூலமும், கறைகளை நிர்வகிப்பதன் மூலமும், பச்சை ஒரு உலகளாவிய தரநிலையாக மாறியுள்ளது. இதன்மூலம் நவீன மருத்துவமனை சூழலையும், மருத்துவத் திறனையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குத் தேவையான ஆறுதலையும் ஒருசேர சமநிலைப்படுத்துகிறது.

logo
Kalki Online
kalkionline.com