இப்போது எல்லாம் விமானப் பயணம் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகவும் மலிவான விலையில் சிறிய ரக விமானங்கள் தனிநபர் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. தினசரி விமானம் பயன்படுத்தும் நபர்களும் ஏராளமாக உள்ளனர். பல நாடுகளில் இந்தியாவை போல நீண்ட தூரம் செல்லும் ரயில்களும், நீண்ட தூர சாலைகளும் இல்லை. அந்த நாடுகளில் விமானப் பயணங்கள் குறைவான விலையில் கிடைக்கிறது.
நாம் விமானத்தில் பயணம் செய்யும் போது ஜன்னல் சீட்டை விரும்பி அமர்ந்திருக்கலாம். அப்போது ஜன்னலின் உள்ள சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளை ஒன்றை பார்த்திருக்கலாம். இந்த இடத்தில் எதற்காக ஒரு துளை உள்ளது, என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?
இந்த துளை இருப்பது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்குதான். ஒரு விமானம் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் போது, அதன் காற்றழுத்தத்தை பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம். விமானப் பயணத்தின் போது, விமானத்திற்கு வெளியே காற்றழுத்தம் குறைவாக இருக்கும். அதே நேரம் விமானத்தின் உள்ளே இருக்கும் காற்றழுத்தம் பயணிகளுக்கு அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்தால் பயணிக்கும் பயணிகளுக்கு சுவாசத் தடை ஏற்படும்.
விமானத்தின் உள்ளே அதிக காற்றழுத்தம் இருந்தால் தான் பயணிகள் எளிதாக சுவாசிக்க முடியும். காற்றழுத்தம் குறைந்தால் உள்ளே இருப்பவர்களால் சுவாசிக்க முடியாது. அதனால் தான் விமானத்தில் உள்ள ஜன்னல் அருகே இந்த துளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துளை காற்றைக் கடத்தி காற்றழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த துளை பயணிகளை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு துளை மட்டும் ஜன்னலில் இல்லாவிட்டால் வெளிப்புற காற்றழுத்தம் அதிகரிக்கும் போது, சமநிலையை பராமரிக்க முடியாது. அதிக அழுத்தம் ஏற்படும் போது விமானத்தில் உள்ள ஜன்னல்கள் அழுத்தம் தாங்காமல் உடைந்து சிதறி விடும்.
அதன் பின்னர் வெளிப்புறக் காற்று அளவுக்கு அதிகமாக உள்புறத்தில் புகும். இவ்வாறு காற்று புகுந்தால் விமானத்தில் சமநிலை பாதிக்கப்பட்டு அது அந்தரத்தில் கவிழ ஆரம்பிக்கும். அதன் பின்னர் காற்றின் அழுத்தத்தில் முழு விமானமும் சுழன்று விபத்திற்கு உள்ளாகலாம். இந்த பாதுகாப்பு துளை இருந்தால் விமானத்தின் உள்புறம் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் ஜன்னல்கள் உடையாது.
ஜன்னலின் பின்னால் ஒரு சாளர அமைப்பு உள்ளது. ஜன்னல்களை உருவாக்கும் போது, கண்ணாடி மூன்று அடுக்குகளில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் ஜன்னல் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாது. இந்த துளை ஈரப்பதத்தை பராமரிப்பது உடன், உறைபனி உள்ளே ஏற்படாமல் தடுக்கிறது. காற்றை கிழிக்கும் அதீத சத்தம் உள்ளே கேட்காமல் இருக்கவும் இந்த துளை நிறுவப்பட்டுள்ளது. இந்த துளை விமானத்தின் பாதுகாப்பில் முக்கிய அம்சமாக உள்ளது .