பேனா மூடியில் ஓட்டை ஏன் தெரியுமா? உயிரைக்காக்கும் அறிவியல் ரகசியம்!

நாம் தினமும் பயன்படுத்தும் பேனா மூடியில் உள்ள அந்தச் சின்ன ஓட்டைக்கு பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்தா?
பேனா மூடி - Pen cap hole
பேனா மூடி - Pen cap hole
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

நாம எல்லாரும் பேனாவை ஆயிரக்கணக்கான தடவை யூஸ் பண்ணியிருப்போம். ஆனா, பல பேனாக்களோட மூடியில ஏன் ஒரு சின்ன ஓட்டை இருக்குனு எப்போவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?

மேலோட்டமா பார்க்கும்போது இது ஏதோ ஒரு சாதாரண டிசைன் மாதிரியோ இல்ல கம்பெனிக்காரங்க சும்மா வச்ச ஓட்டை மாதிரியோ நமக்கு தோணலாம். ஆனா, இதுக்கு பின்னாடி நம்ம உயிரையே காப்பாத்துற செம சயின்ஸ் ஒளிஞ்சிருக்கு!.

நானும் சின்ன வயசுல இருந்து எத்தனையோ பேனாக்கள யூஸ் பண்ணியிருக்கேன். ஆனா அப்போலாம் இந்த ஓட்டையை ஒரு சாதாரண விஷயமா நெனச்சேனே தவிர, இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய முக்கியமான காரணம் இருக்கும்னு யோசிச்சதே இல்ல. ஸ்கூல் படிக்கும்போதோ, இல்ல ஆபீஸ்ல வேலை பார்க்கும்போதோ, நாம எதேச்சையா பேனா மூடிய வாயில வச்சு கடிச்சுட்டே யோசிக்கிற பழக்கம் நம்மல்ல பல பேருக்கு இருக்கும்.

அப்படி செய்யும்போது, நம்மள அறியாமலே அந்த மூடி தொண்டைக்குள்ள போயிட்டா, அது நம்ம மூச்சு விடுற பாதைய முழுசா அடைச்சு உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்.

இந்த பயங்கரமான ஆபத்தை தடுக்கத்தான், இன்டர்நேஷனல் லெவல்ல ‘ISO 11540’ அப்படிங்கிற உலக லெவல்ல இருக்குற பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தாங்க. இதனால, மூடி தொண்டையில மாட்டினா கூட அந்த சின்ன ஓட்டை வழியா கொஞ்சமாச்சும் காத்து உள்ள போகும்.

இத பத்தி உலகப் புகழ்பெற்ற BIC பேனா தயாரிப்பு நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ சேஃப்டி வெப்சைட்ளையும், பிரிட்டன் நாட்டோட குவாலிட்டி செக் கம்பெனியான BSI (British Standards Institution) அவங்களோட தகவல் தளத்துலயும் (BSI Knowledge) ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க.

பேனா மூடி - Pen cap hole
பேனா மூடி - Pen cap hole

ஆனா, உலகத்துல இருக்குற எல்லா பேனா மூடியிலயும் இந்த ஓட்டை இருக்குமானு கேட்டா, கண்டிப்பா இல்ல! ரொம்ப கம்மியான விலையில விக்கிற லோக்கல் பேனாக்கள், பழைய மாடல் பேனாக்கள், அப்புறம் ரொம்ப காஸ்ட்லியான ‘லக்ஸரி’ பேனாக்கள்ல இந்த ஓட்டை இருக்காது.

சில பேனாக்கள்ல ஓட்டை வெளிய தெரியாம, உள்பக்கமாவே காத்து போற மாதிரி டிசைன் பண்ணியிருப்பாங்க. அப்புறம் நம்ம ‘கிளிக் பேனாக்கள்ல’ (Retractable pens) மூடியே இருக்காதுங்கிறதால இந்த ஓட்டைக்கு வேலையே இல்ல.

பாதுகாப்பைத்தாண்டி, இந்த ஓட்டை பேனாவுக்குள்ள இருக்குற ஏர் பிரஷரை (Air pressure) பேலன்ஸ் பண்ணவும் ஹெல்ப் பண்ணுது. இதனால பேனாவ நாம வேற ஊருக்கு கொண்டு போகும்போதோ, இல்ல வெயில்ல வைக்கும்போதோ ‘இங்க் லீக்’ ஆகாம சூப்பரா எழுத வைக்குது.

இதையும் படியுங்கள்:
புது வீடு கட்ட போறீங்களா? முதல்ல இந்த சோதனையை செய்யலைனா பட்ஜெட் எகிறிடும்!
பேனா மூடி - Pen cap hole

இத அறிவியல்ல 'மல்டிஃபங்க்ஷனல் டிசைன்' (Multifunctional design) அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது ஒரே ஒரு சின்ன ஓட்டை, அத யூஸ் பண்றவங்களோட பாதுகாப்பு, அப்புறம் பேனாவோட குவாலிட்டினு இரண்டுக்குமே பயனுள்ளதா அமையுது.

இனிமே உங்க வீட்டுல இருக்குற பேனாக்களை சும்மா எடுத்துப் பாருங்க, ஓட்டை இருக்குற பேனாவும் இருக்கும், இல்லாததும் இருக்கும். ஒரு சின்ன ஓட்டைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய பாதுகாப்பு சம்பந்தமான இன்ஜினியரிங் இருக்குறது நிஜமாவே எனக்கு 'OMG' பீலிங் வருது, படிக்கிற உங்களுக்கும் வருதா..?