வெள்ளை ரோடு இருந்தா ஆபத்தா? கருப்பு நிற ரோடுக்கு பின்னாடி இருக்கும் 'செம' சயின்ஸ்!

asphalt road and types
asphalt roadcredit AI Image
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

எப்போதாவது யோசித்ததுண்டா, ஏன் எல்லா ரோடுகளும் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என்று? அதுபோல உலகில் சில இடங்களில் உள்ள ரோடுகள் நீலம், சிவப்பு, பச்சை நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன? இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

நாம் வழக்கமாக இதனைத் 'தார் ரோடு' என்று சொல்வது என்பது நிலக்கரியில் இருந்து கிடைப்பது. ஆனால், இப்போதெல்லாம் தாரை சாலை அமைக்கப் பயன்படுத்துவது கிடையாது. அதற்குப் பதில், கச்சா எண்ணெய்யிலிருந்து கிடைக்கிற 'Bitumen' என்ற பசைத்தன்மை கொண்ட பொருளைத்தான் ஜல்லியுடன் கலந்து சாலை போடப் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பெயர் தான் 'ஆஸ்பால்ட் கலவை' (Asphalt).

சாலைகள் கருப்பு நிறத்தில் (asphalt road) இருப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்:

  1. பார்வைத்திறன் மற்றும் பாதுகாப்பு: சிமெண்ட் சாலைகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால், வெயில் காலத்தில் சூரிய ஒளி பிரதிபலித்து ஓட்டுநர்களின் கண்கள் கூச வாய்ப்புள்ளது. இது ஓட்டுநர்களுக்குச் சோர்வைத் தரும். ஆனால், கருப்பு நிறத்தில் இந்தப் பிரச்சினையில்லை. மேலும், சாலையில் வரையப்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக் கோடுகள் கருப்பு நிறத்தில் மட்டுமே தெளிவாகத் தெரியும்.

  2. பிடிமானம் (Grip): சிமெண்ட் சாலையை விட ஆஸ்பால்ட் சாலையில் வாகனங்களை ஓட்டும்போது டயர்களுக்குச் சிறந்த பிடிமானம் கிடைக்கும். இதனால் பிரேக் பிடிக்கும்போது வாகனம் வழுக்காமல் சுலபமாக நிற்கும்.

  3. வெப்பத்தை உறிஞ்சுதல்: கருப்பு நிறம் இயல்பாகவே வெப்பத்தை அதிகமாக உறிஞ்சக்கூடியது. இதனால் குளிர்ப் பிரதேசங்களிலும், மழைக்காலங்களிலும் சாலையின் வெப்பம் ஈரப்பதத்தை விரைவாக ஆவியாக்க உதவும்.

  4. நீர்ப்புகாத் தன்மை (Waterproofing): சாலை போடப் பயன்படுத்தப்படும் 'Bitumen' இயற்கையாகவே ஒரு நீர்ப்புகாப் பொருள். இதனால் மழைநீர் சாலைக்குள் ஊடுருவி, அதன் அஸ்திவாரத்தைப் பலவீனப் படுத்தாமல் இது தடுக்கும்.

  5. குறைந்த செலவு: 'Bitumen' அரசாங்கத்திற்குக் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது. இதனால் சாலைகள் அமைக்கவும், சேதமடைந்த சாலைகளைப் பழுதுபார்க்கவும் மிகக் குறைந்த செலவே ஆகிறது.

வண்ணமயமான சாலைகள் ஏன்?

சில நாடுகளில் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களில் சாலைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். அங்கேயும் 'Bitumen' தான் பயன்படுத்தப்படுகிறது; ஆனால், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவற்றின் மீது வண்ணங்கள் பூசப்படுகின்றன:

இதையும் படியுங்கள்:
காயம் பட்டால் கைரேகை மாறுமா? இதோ வியப்பூட்டும் தகவல்கள்!
asphalt road and types
  • வெப்பத்தைக் குறைக்க: கத்தார் மற்றும் அமெரிக்காவின் சில இடங்களில் நீல நிறத்திலோ அல்லது சாம்பல் நிறத்திலோ பெயிண்ட் செய்கிறார்கள். இது சூரிய வெப்பத்தைக் குறைத்துச் சாலையைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

  • மிதிவண்டிப் பாதை: நெதர்லாந்து போன்ற நாடுகளில் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சைக்கிள் ஓட்டுவதற்கான தனிப்பாதை இது என்பதை அடையாளப்படுத்த சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

  • பாதுகாப்பு: ஜப்பானில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதற்கான பாதையைத் தனியாகக் காட்ட பச்சை நிற பெயிண்ட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com