விண்டோஸ் 10 பயனர்கள் ஜாக்கிரதை… ஆபத்து நெருங்குகிறது! 

Windows 10
Windows 10
Published on

மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான ஆதரவை 2025 அக்டோபர் 14-ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் 10 பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்த தேதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு புதுப்பிப்புகளோ அல்லது தொழில்நுட்ப ஆதரவோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்காது. இது, சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, பயனர்களின் கணினிகளை இலகுவாக ஹேக் செய்ய வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விண்டோஸ் 10 பயனர்கள் உடனடியாக தங்கள் இயங்குதளத்தை புதுப்பிக்க வேண்டும். அக்டோபர் 2025 வரை காத்திருக்காமல், கூடிய விரைவில் விண்டோஸ் 11-க்கு மாறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை, சாதனத்தின் தொழில்நுட்பக் காரணங்களால் விண்டோஸ் 11-க்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வேறு மாற்று இயங்குதளத்தை (உதாரணமாக, லினக்ஸ்) பரிசீலிக்கலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஆதரவு நிறுத்தப்பட்ட பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் கணினிகள் வைரஸ்கள் மற்றும் மால்வேர் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகும் என்று எச்சரித்துள்ளது. பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லாததால், சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே கண்டறிந்த மற்றும் புதிதாகக் கண்டறியப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி பயனர்களின் கணினிகளில் ஊடுருவ முடியும். இது, தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுதல், நிதி மோசடிகள் மற்றும் கணினியின் கட்டுப்பாட்டை இழத்தல் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
காலிஃப்ளவர் சீசனில் செய்து சுவைக்க மிகவும் பொருத்தமான ரெசிபிகள்!
Windows 10

ESET நிறுவனத்தின் ஐடி பாதுகாப்பு நிபுணர் தோர்ஸ்டன் அர்பன்ஸ்கி கூறுகையில், "நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. டிஜிட்டல் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க விரும்பினால், உடனடியாக விண்டோஸை புதுப்பிக்க வேண்டும்." அவர் மேலும், அக்டோபர் வரை காத்திருக்கும் பயனர்கள் சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு திருட்டுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
UPI பயனர்கள் ஜாக்கிரதை... அரங்கேறும் புதுவித மோசடி! 
Windows 10

எனவே, விண்டோஸ் 10 பயனர்கள் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக தங்கள் கணினியை புதுப்பித்து, சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவரை இந்த தகவலை விண்டோஸ் 10 பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்குப் பகிரவும்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com