
காலிஃப்ளவர் பக்கோடா:
காலிபிளவர் 1
கடலை மாவு 1/4 கப்
கார்ன்ஃப்ளார் 1/4 கப்
கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் பொரிக்க
காலிஃப்ளவர் பூக்களை சின்னத் துண்டுகளாக வெட்டி உப்பு கலந்த சூடான நீரில் 5 நிமிடம் போட்டு எடுக்கவும். நீரை நன்கு வடித்து எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அந்த மசாலாவில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும்வரை பொரித்தெடுக்கவும். மிகவும் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார். இதனை காபி, டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
காலிஃப்ளவர் சுக்கா:
காலிஃப்ளவர் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தனியா தூள் 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 6
பூண்டு 5 பற்க்கள்
பட்டை 1
சோம்பு 1/2 ஸ்பூன்
கிராம்பு 2
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகாய் 1
காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்பு சேர்த்த சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் பட்டை, கிராம்பு, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, தனியா ஆகியவற்றை நன்கு வறுத்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளியும் போட்டு நன்கு வதங்கியதும் தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து காலிபிளவரையும் போட்டு நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவவும். மிகவும் ருசியான காலிபிளவர் சுக்கா தயார்.