

அதிசய பாலங்கள்;
பாபிலோனிய யூப்ரடீஸ் நதி மீது மரக்கட்டைகளை போட்டுப் பாலம் அமைத்தார்கள் கிமு 2230 ம் ஆண்டைச் சேர்ந்த இந்த பாலம்தான் உலகின் முதல் பாலமாகக் கருதப்படுகிறது. முதன் முதலில் கற்களால் அமைக்கப்பட்ட இன்றும் பயன்பாட்டில் உள்ள உலகின் மிகப்பழமையான பாலம் துருக்கியின் இஸ்மிர் (Izmir) நகரில் உள்ள கேரவன் பாலம் (Caravan Bridge) ஆகும்.
மெலெஸ் ஆற்றின் மீது கற்களால் கட்டப்பட்ட இந்த ஆர்ச் பாலம் கி.மு. 850-ல் கட்டப்பட்டது. முதல் மரத் தொங்கும் பாலம் கிபி 1200 ல் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்டது. முதல் சங்கிலி தொங்கும் பாலம் கிபி 1741ல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. முதல் வார்ப்பு இரும்பு பாலம் 1779 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அமைக்கப்பட்டது. முதல் கான்கிரீட் பாலம் 1887 ம் ஆண்டு ஜெர்மனியில் கட்டப்பட்டது.
இந்த பாலத்திலிருந்து பார்த்தால் நிலப்பகுதியே தெரியாது!
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள லேக் பான்ட்சார்ட்ரைன் காஸ்வேயை (Lake Pontchartrain Causeway) உலகின் மிக நீளமான தொடர்ச்சியான பாலம் என்கிறார்கள். இது தண்ணீருக்கு மேல் கட்டப்பட்ட ஒரு பொறியியல் அதிசயமாகும்.
இது 23.83 மைல்கள் (38.35 கி.மீ) நீளமுள்ளது, உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான பாலமாக கின்னஸ் சாதனை படைத்துள்ள. இது மெடெய்ரி மற்றும் மேண்டவில் நகரங்களை இணைக்கிறது. ஆகஸ்ட் 30, 1956 அன்று திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் மையத்தில் இருந்து நோக்கினால் நிலப்பகுதியையே காணமுடியாது.
பாண்ட்சார்ட்ரெய்ன்' பாலம்தான் உலகின் முதல் மிக நீளமான பாலம் வழக்கமான போக்குவரத்து சூழலில் இந்தப் பாலத்தைக் கடக்க 25 முதல் 30 நிமிடங்கள் ஆகும். நகர்ப்புறங்களில் 39 கிலோமீட்டர் பயணம் செய்வது ஒரு பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால், இந்தப் பாலத்தில் பயணிக்கும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டது.
பாலத்தின் இருபுறமும் தண்ணீரைக் தவிர கட்டிடங்களோ, மரங்களோ, கடைகளோ அல்லது திருப்பங்களோ கிடையாது. ஒரே நேர்கோட்டுப் பாதையில் பல நிமிடங்கள் தொடர்ந்து பயணிக்கும்போது சலிப்பு, சோர்வு மற்றும் ஒரே காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கவனச்சிதறல் ஆகியவை ஓட்டுநர்களுக்குச் சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழலைக் காரணம் காட்டியே "இங்குச் சென்றால் பைத்தியம் பிடித்துவிடும்" என்ற பாணியில் நெட்டிசன்கள் மீம்களையும், வதந்திகளையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட பாலம் உலகிலேயே இது ஒன்றுதான்.
போஸ்டன் பல்கலைக்கழகப் பாலம் (BU Bridge) என்பது அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள சார்லஸ் நதியின் குறுக்கே பாஸ்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களை இணைக்கும் ஒரு முக்கியமான ஸ்டீல் டிரஸ் பாலமாகும். 1927 இல் கட்டப்பட்ட இந்தப் பாலம், அதன் தனித்துவமான அடுக்கு போக்குவரத்து அமைப்புக்கு பெயர் பெற்றது. போஸ்டன் பல்கலைக்கழகப் பாலத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்.
இங்கே, ஒரு படகு நதியில் செல்ல, அதன் மேலே ரயில்கள் செல்ல, அதற்கு மேலே கார் போக்குவரத்து, மற்றும் அதன் மேலே விமானங்கள் பறக்கக்கூடும் பாதை கொண்டதுதான். இப்படிப்பட்ட பாலம் உலகிலேயே இது ஒன்றுதான். இது பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் அருகே அமைந்துள்ளதால் இப்பெயரைப் பெற்றது. ஆரம்பத்தில் காட்டேஜ் ஃபார்ம் பாலம் (Cottage Farm Bridge) என்று அழைக்கப்பட்டது.
உலகின் நீண்ட நீர்ப்பாலம்:
ஜெர்மனியில் உள்ள எல்பே ஆற்றுக்கு மேலே ஒரு காணக் கிடைக்காத அதிசயம் உள்ளது. அதுதான். மாக்டெபர்க் நீர் பாலம் (Magdeburg Water Bridge) பொதுவாக, ஆறு அல்லது கடலை கடப்பதற்குதான் பாலம் கட்டப்படுவதை பார்த்திருக்கிறோம்.
இந்த பாலம் ஒரு ஆறு போலவே செயல்படுகிறது. பாலத்தின் இரு புறமும் நடைபாதை அமைக்கப் பட்டுள்ளது.
நடுபகுதியில் 34 மீட்டர் அகலமும், 4.25 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் ஓடுகிறது. இது ஜெர்மனியில் உள்ள ஒரு கப்பல் போக்குவரத்து நீர்வழிப் பாலமாகும். இது எல்ப்-ஹாவெல் கால்வாயை மிட்டெல்லாண்ட் கால்வாயுடன் இணைத்து, கப்பல்கள் எல்ப் ஆற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கிறது. 918 மீட்டர் நீளமுள்ள இது, உலகின் மிக நீளமான கப்பல் போக்குவரத்து நீர்வழிப் பாலம் ஆகும். ஜெர்மனியின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பாலம். பெர்லின் உட்பட பல ஜெர்மன் முக்கிய துறைமுகங்களை இணைக்கிறது இந்த பாலம் , உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று.
இரு புறமும் கடைகளைத் கொண்ட பாலம்:
இத்தாலி நாட்டின் பாண்டே வெச்சியோ (Ponte Vecchio) பாலம். இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அர்னோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கல் பாலமாகும் . 1345-ல் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்ட இது, அதன் இருபுறமும் கட்டப்பட்ட தனித்துவமான கடைகளுக்காகவும், வீடுகளுக்காகவும் புகழ்பெற்றது.
இது டாடியோ காடி (Taddeo Gaddi) என்பவரால் வடிவமைக்கப்பட்ட 90 மீட்டர் நீளம் கொண்ட வளைவுப் பாலமாகும். இரண்டாம் உலகப் போரின்போது தப்பி பிழைத்த ஒரே இத்தாலிய பாலம்.
உலகிலுள்ள 10 உயரமான பாவங்களில் 8 உயரமான பாலங்கள் இருப்பது சீனாவில்தான். உலகிலேயே மிகவும் உயரமான பாலமும் இருப்பது சீனாவில்தான். சீனாவின் குய்சூ (Guizhou) மாகாணத்தில் உள்ள ஹுவாஜியாங் கேன்டன் பாலம் (Huajiang Canyon Bridge) செப்டம்பர் 2025 இல் திறக்கப்பட்டது. இதுவே தற்போது உலகின் மிக உயரமான பாலமாகும். இது நதி மட்டத்திலிருந்து 625 மீட்டர் (2,051 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.பெய்பான் நதியின் மீது அமைந்துள்ளது.