சீனாவின் வுஷான் தேவி எஸ்கலேட்டரும் ஜப்பானின் கின்னஸ் சாதனைப் படைத்த சிறிய எஸ்கலேட்டரும்!

உலகின் நீளமான, குறைந்த உயரமான எஸ்கலேட்டர்களின் கண்டுபிடிப்பு முதல் இன்றைய நவீன வடிவம் வரை, சீனாவின் வுஷான் தேவி எஸ்கலேட்டரும் ஜப்பானின் கின்னஸ் சாதனைப் படைத்த சிறிய எஸ்கலேட்டரும் உருவாக்கும் வியப்புகள்.
amazing-escalators
amazing-escalators
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

ஷாப்பிங் மால்களிலும், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் பயணிகளை சுமந்து நகர்ந்து கொண்டிருக்கும். 'எஸ்கலேட்டர்' என்ற நகரும் படிக்கட்டுகள். வடிவத்தை பழைய ஐடியா ஒன்றில் இருந்து 1894 ம் ஆண்டு மேம்படுத்தினார் ஜெஸ்சி டபிள்யூ ரெனோ என்ற என்ற அமெரிக்கர்.

'லிப்ட்' எனப்படும் மின்தூக்கிக்குச் சிறந்த மாற்றாகவும், அதிகம் பேர் இடம்பெயரும் வசதியும் கொண்ட நகரும் படிக்கட்டுகள் 1859 ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால், அபாயகரமானவை என்று கருதி உடனடியாக பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இன்றோ 'எஸ்கலேட்டர்' இல்லாத ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் கிடையாது.

1859 ம் ஆண்டு நாதன் ஆக்ஸ் (Nathan Ames) எனும் அமெரிக்கர் சுழலும் படிக்கட்டு ('Revolving stairs') என்ற முதல் எஸ்கலேட்டர் முன்மாதிரிக்கு காப்புரிமை பெற்றார், ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

ஜெஸ்ஸி ரெனோ முதல் இயங்கும் நகரும் படிக்கட்டைக் கண்டுபிடித்தார், அது மார்ச் 15, 1892 அன்று காப்புரிமை பெறப்பட்டது. அப்போது சாய்வு மின்தூக்கி என்று அழைக்கப்பட்ட முதல் நகரும் படிக்கட்டு, ஜனவரி 16, 1893 அன்று நியூயார்க் நகரத்தில் உள்ள கோனி தீவில் உள்ள ஓல்ட் அயர்ன் பியரில் நிறுவப்பட்டது. அது பயணிகளை ஒரு கன்வேயர் பெல்ட் மூலம் 25 டிகிரி கோணத்தில் மேலே ஏற்றியது மற்றும் வெறும் ஏழு அடி தூரம் மட்டுமே பயணித்தது. இறுதியில், அந்த நகரும் படிக்கட்டு புரூக்ளின் பாலத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு, ஓல்ட் அயர்ன் பியரில் இரண்டு வாரங்கள் இயங்கியது.

1900 ம் ஆண்டு சார்லஸ் சீபெர்கர் 'escalator' என்ற வார்த்தையை உருவாக்கி, ஓடிஸ் (Otis) நிறுவனத்துடன் இணைந்து நவீன மரப்படிக்கட்டுகள் கொண்ட வடிவமைப்பை உருவாக்கினார்.escalator என்ற சொல் 'scala' (படிகள்) மற்றும் 'elevatus' (உயர்த்துதல்) ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது.

1900 ம் ஆண்டு பாரிஸ் சர்வதேச கண்காட்சியில் எஸ்கலேட்டர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.தொடக்கத்தில் மரப்படிகளைக் கொண்டிருந்த எஸ்கலேட்டர்கள், பின்னர் உலோகப் படிகளாக மாற்றப்பட்டு, இன்றைய நவீன, பாதுகாப்பான அமைப்புகளாக பரிணமித்தன.

ஓடிஸ் எலிவேட்டர் நிறுவனம் பல காப்புரிமைகளை வாங்கி, 1900-களின் தொடக்கத்தில் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் எஸ்கலேட்டர்களைப் பரவலாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

உலகின் நீளமான வெளிப்புற எஸ்கலேட்டர் (Outdoor Escalator) சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரில் உள்ள வுஷான் (Wushan) தேவி எஸ்கலேட்டர் ஆகும். இது சுமார் 905 மீட்டர் (2,969 அடி) நீளம் மற்றும் 800 அடி உயரத்தைக் கொண்டது. இந்த ஒட்டுமொத்தப் பயணத்தையும் கடக்க சுமார் 21 நிமிடங்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
“இசை இல்லையெனில் வாழ்க்கை இல்லை” - ஐன்ஸ்டீனின் சிந்தனையைத் தூண்டிய வயலின் வாத்தியம்!
amazing-escalators

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள சோங்கிங் (Chongqing )நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட எஸ்கலேட்டர் மேலே இருந்து கீழே இறங்கும் போது முடிவே இல்லாத பாதை போன்று தோன்றுகிறது. பல நாடுகள் இதுபோன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த போராடிக் கொண்டிருக்கும் போது சீனா மட்டும் மிகவும் அசால்டாக இதை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரம்மாண்ட எஸ்கலேட்டரில் பயணம் செய்ய சரியாக மூன்று நிமிடங்கள் ஆகும்.' சோங்கிங் ' நகரத்தில் அமைந்துள்ள இந்த உலகின் நீளமான எஸ்கலேட்டரின் அளவும், நிலத்தடியில் இறங்கும் ஆழமும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்தியாவின் மிக உயரமான எஸ்கலேட்டர் டெல்லியின் ஜானக்பூரி மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் மட்டும் 15.6 மீட்டர் ஆகும். மேலும், இந்த எஸ்கலேட்டர் சுமார் 35.3 மீட்டர் நீளத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு combined escalator ஆகும். அதிக பயணிகள் நெரிசலை சமாளிக்கவும், விரைவான அணுகலை வழங்கவும் இது சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மேகங்கள் முத்தமிடும் மலைக்கிராமம்: காந்தலூர் பயண அனுபவம்!
amazing-escalators

உலகின் சிறிய 'எஸ்கலேட்டர்' ஜப்பானில் பயன்பாட்டில் உள்ளது. உலகின் மிகச்சிறிய எஸ்கலேட்டர் ஜப்பானில் உள்ள கவாசாகி நகரில் உள்ள மோர்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் (More's Department Store) அடித்தளத்தில் உள்ளது.இதன் உயரம் வெறும் 83.4 சென்டிமீட்டர் (32.8 அங்குலம்) மட்டுமே. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது. இதன் உயரம் 2.8 அடி. ஐந்து படிகள் மட்டுமே உள்ளன. பயண நேரம் 6 வினாடி.

logo
Kalki Online
kalkionline.com