அமெரிக்காவையே மிரளவைத்த சீன அதிபரின் 'ஹாங்கி N701' கார்: 'தி பீஸ்ட்' காரை விட பாதுகாப்பானதா?

வல்லரசு நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஷி ஜின்பிங்கின் அதிநவீன பாதுகாப்பு மிதக்கும் கோட்டை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.
ஹாங்கி N701 - Xi Jinping Car
ஹாங்கி N701 - Xi Jinping Car
கோவீ.ராஜேந்திரன்

கோவீ.ராஜேந்திரன், அடிப்படையில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர். தமிழகத்தின் முன்னணி இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், பொது அறிவு சார்ந்த 12 புத்தகங்களும் எழுதியுள்ளார். கல்கி ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி, வித்தியாசமான தகவல்களை வழங்கி வருகிறார்.

Updated on: 

உலகத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ கார்களிலேயே மிகவும் அதிகமாகப் பேசப்படும் கார், 'தி பீஸ்ட்' எனப் பிரபலமாக அறியப்படும் கேடிலாக் ஒன் கார், அமெரிக்க ஜனாதிபதியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்வலர்களால் “உலகின் பாதுகாப்பான கார்” என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு காரணம் உண்டு. தனது படை பரிவாரங்களுடன், தான் எங்கு செல்கிறோமா அந்த நாட்டு மக்களையே வியக்கும் அளவுக்கு பிரமாண்டத்தை வெளிப்படுத்துவார்கள். பிரமாண்டம் என்று கூறுவதைவிட, உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க அதிபருக்கு அளிக்கும் பாதுகாப்பு அம்சங்கள்தான் பிரமாண்டத்தைக்காட்டும்.

அந்த வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்த நாட்டின் வருகைக்கும் முன்பாகவே அவர் பயன்படுத்தும் கார், விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை வந்து சேரும். அதில் முக்கியமானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது அவர் மட்டுமே பயன்படுத்தும்' தி பீஸ்ட் (The Beast)' வகைக் கார் ஆகும்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு (வாஷிங்டன்) அன்மையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்கா வழங்கும் வாகனப் பாதுகாப்பை நம்பியிருக்காமல், சீனாவிலிருந்தே தனது சொந்தப் பாதுகாப்பு காரான 'ஹாங்கி N701' (Hongqi N701) என்ற காரைக் கொண்டுவந்தார். 'ஹாங்கி' (Hongqi) என்ற சீன வார்த்தைக்கு 'சிவப்புக் கொடி' (Red Flag) என்று பொருளாகும்.

வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பு வாகனங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சீனா தனது சொந்த வாகனத்தைக் கொண்டு வந்தது உலக அரங்கில் அதன் வளர்ந்து வரும் பலத்தையும் தற்சார்பையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது அரசுமுறைப் பயணத்தின் போது சீனாவின் ஹாங்கி N701 எனப்படும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட லிமோசின் காரை பயன்படுத்தி வருகிறார். சாலை மார்க்கமாக செல்ல, பொதுமக்கள் இடையே அணிவகுப்பில் செல்ல தனக்காக பிரத்யேகமாக தனியாக தயாரிக்கப்பட்ட சீனாவின் 'ஹாங்கி N 171 ரக காரை பயன்படுத்துகிறார். இது உருவத்தில் மிகப்பெரியது, சொகுசானது. இதன் எடை 3,150 கிலோ. ஏறக்குறைய 20 அடி நீளமுடையது. 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது. தரையில் இருந்து வீல் பேஸ் 3.4 மீட்டர் உயரம் கொண்டது.

ஹாங்கி N701 - Xi Jinping Car
The beast car1 - Xi Jinping Car

அனைத்து வகை பாதுகாப்பு அம்சங்களுடன், உலகின் பிரபலங்கள் யாருடனும் பேசும் ஹாட்லைன் வசதியுடன் கூடிய அற்புதமான பாதுகாப்பு மிகுந்த கார் அது.

சீன அதிபர் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க சீனாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு (FAW) இத்தகைய கார்களை அதிபருக்காக தயாரிக்கிறது.1958 முதல் அரசுக்குச் சொந்தமான வாகனங்களை ஃபர்ஸ்ட் ஆட்டோ வொர்க்ஸ் (FAW) குழுமம் தான் தயாரிக்கிறது .

இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனம். இதன் துல்லியமான விவரக்குறிப்புகள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

சீனர்கள் உட்பட பெரும்பாலான உலகத் தலைவர்கள், தூதரகப் பயணங்களுக்காக, மெர்சிடிஸ்-பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ சொகுசு லிமோசின்கள் போன்ற, மாற்றியமைக்கப்பட்ட இறக்குமதி வாகனங்களையே வரலாற்று ரீதியாகச் சார்ந்திருந்தனர். ஜிங்பிங் தனது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே, சீன அரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பிராண்டுகளைக் கைவிட்டு, உள்நாட்டுப் பொறியியலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒரு திட்டமிட்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையும் படியுங்கள்:
நம்பி ஏமாந்த கஸ்டமர்ஸ்... பாதுகாப்புனு வாய் கிழிஞ்ச கம்பெனியோட மொத்த சீக்ரெட்டும் சந்தி சிரிக்குது!
ஹாங்கி N701 - Xi Jinping Car

ஹாங்கி N701 காரின் வெளிப்புறக் கூடு, தொடர்ச்சியான தாக்குதல் துப்பாக்கிக் குண்டுகளையும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களிலிருந்து (IEDs) வரும் சிதறல்களையும் தாங்கக்கூடிய இராணுவத் தரத்திலான கலப்புக் கவசத்தையும் கனமான எஃகுத் தகடுகளையும் கொண்டது.இதன் உறுதிப்படுத்தப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள், உயர் ரக சிறு ஆயுதத் தாக்குதல் களிலிருந்தும் கூட கேபினைப் பாதுகாக்கின்றன.

இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புக்கு என்று , N701 ஆனது, பயணிகளை நச்சு வாயு ஊடுருவலில் இருந்து பாதுகாப்பதற்காக, ஒரு தானியங்கி ஆக்ஸிஜன்-அழுத்த வடிகட்டுதல் அமைப்புடன் பொருத்தப்பட்ட, காற்றுப்புகாத, மூடப்பட்ட அறையைக் கொண்டுள்ளது. பிரம்மாண்டமான 21-அங்குல வலுவூட்டப்பட்ட சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ரன்-ஃப்ளாட் டயர்கள், வாகனம் முற்றிலும் காற்றிறங்கியிருந்தாலும் அல்லது துளைக்கப் பட்டிருந்தாலும் கூட, வேகமாக வெளியேற அனுமதிக்கின்றன.

காரில் இருந்தபடியே உயர்மட்டத் தலைவர்களை உள்நாட்டு மத்திய கட்டளை மையங்களுடன் நிகழ்நேரத்தில் இணைத்து வைப்பதற்காக, இதன் உட்பகுதி ஒரு நகரும் கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது, இதற்கென பிரத்யேக செயற்கைக்கோள் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

உள்நாட்டு சீனக் காப்புரிமைப் பதிவுகள் மற்றும் வாகனத் துறை சார்ந்த தகவல்களின்படி, N701 பிளாட்ஃபார்மானது, சுமார் 408 hp ஆற்றலை உற்பத்தி செய்யும் மேம்படுத்தப்பட்ட 6.0-லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் அல்லது FAW நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ஒரு ஹைப்ரிட் எலக்ட்ரிக் பவர்டிரெய்னுடன் இணைக்கப்பட்ட நவீன 3.0-லிட்டர் டர்போசார்ஜ்டு V6 இன்ஜின் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இயக்கப்படுகிறது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பழைய சியரா மீண்டும் வருகிறது! டாடா சியரா இவி: விலையும் சிறப்பம்சங்களும் இதோ!
ஹாங்கி N701 - Xi Jinping Car

ஹாங்கி N701, 2022-ல் முதல் முறையாக ஹாங்காங்கில் பொதுமக்களுக்கிடையே அறிமுகமானது. அதன் பிறகு, ரஷ்யா, பிரான்ஸ், சவுதி அரேபியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு அவருடன் பயணித்தது. இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஷி ஜின் பிங்கை ஏற்றிச்செல்ல இது கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.