பழைய சியரா மீண்டும் வருகிறது! டாடா சியரா இவி: விலையும் சிறப்பம்சங்களும் இதோ!

நவீனத் தொழில்நுட்பம், பிரம்மாண்டமான தோற்றம்: இந்தியாவின் கனவு எஸ்யூவி புதிய அவதாரம் எடுத்தது.
Tata Sierra EV | சியரா இவி
Tata Sierra EV | சியரா இவிAI Image
Updated on

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இது கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட வணிக மற்றும் பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்கிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் பாதுகாப்பான கார்கள் மற்றும் மின்சார வாகன (EV) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் வாகன உற்பத்தியிலும், மின்சார வாகன (இவி) தயாரிப்பிலும் கொடிகட்டிப் பறக்கும் டாடா நிறுவனம், சமீபத்தில், தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ₹900 கோடி முதலீட்டில் புதிய 'ஜாகுவார் லேண்ட் ரோவர்' (JLR) சொகுசு கார் உற்பத்தி ஆலையை திறந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்த ‘டாடா சியரா’ கார் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, விற்பனையிலும் சக்கைபோடு போட்ட நிலையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய வாகன சந்தையில் களமிறக்க டாடா திட்டமிட்டிருந்தது.

Tata Sierra EV | சியரா இவி
Tata Sierra EV | சியரா இவிimage credit-autocarindia.com

அந்த வகையில் ‘டாடா சியரா இவி’ கார் எப்போது அறிமுகமாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா சியாரா இவி (Tata Sierra EV) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. பழைய சியாராவின் அடையத்தை நவீன மின்சார தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொறுத்தவரை முன்புறத்தில் மூடிய கிரில், புதிய பம்பர் மற்றும் இணைக்கப்பட்ட எல்.இ.டி.டி.ஆர்.எல்.கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தல் புதிய எல்இடி டெயில் லேம்புகள் மற்றம் இவி அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. பழைய டாடா சியரா காரின் முக்கிய அடையாளமான பின்பக்க வளைந்த கண்ணாடி அமைப்பு இந்த புதிய மாடலிலும் நவீன முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் கேபின் மிகவும் பிரீமியம் தரத்தில் தாராளமான இட வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Tata Sierra EV | சியரா இவி
Tata Sierra EV | சியரா இவிimage credit-autocarindia.com

உட்புறத்தில் மூன்று திரைகள் கொண்ட டாஷ்போர்டு, இரட்டை மண்டல தானியங்கி ஏர் கண்டிஷன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், காற்று சுத்திகரிப்பு வசதி, குளிர்விக்கும் முன் இருக்கைகள், மின்சார டெயில்கேட் மற்றம் டால்பி அட்மோஸ் ஒலி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

விசாலமான கேபின் மற்றும் தாராளமான லக்கேஜ் வைக்கும் இடத்தையும் அப்படியே கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள், மின்சார பார்க்கிங் பிரேக் மற்றும் ஏடிஏஎஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரை, இரட்டை மின்மோட்டர் அமைப்புடன் சுமார் 300 ஹெச்.பி. திறனும், 500 நியூட்டன் மீட்டர் உச்ச டார்க்கும் கிடைக்கும். 63kWh பேட்டரி RWD (பின் சக்கர இயக்கம்) மற்றும் 75kWh பேட்டரி AWD (அனைத்து சக்கர இயக்கம்) ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஜூன் மாதத்தில் மட்டும் 4,436 இவி ஸ்கூட்டர்கள் விற்பனை: மாஸ் காட்டும் River Indie!
Tata Sierra EV | சியரா இவி

பெரிய பேட்டரி மாடலில் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 535 கி.மீ முதல் 665 கி.மீ வரை பயணிக்கலாம். புதிய டாடா சியாரா இ.வி 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 5.8 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் இதன் அடுத்த சிறப்பு அம்சமாகும்.

நீண்ட தூரப் பயணங்களுக்கு எந்தவிதத் தடங்கலும் இல்லாத வகையிலும், அதிவேகமாக சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனும் டாடா சியரா கார் வெளிவந்துள்ளது.

முக்கிய சிறப்பு அம்சமாக, இந்த காரின் பேட்டரிக்கு டாடா நிறுவனம் வாழ்நாள் (15 ஆண்டுகள் வரை) உத்தரவாதத்தை(வாரண்டி) வழங்குகிறது.

இந்தச் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி (SUV) காரின் தொடக்க விலை ரூ.18.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடல் Pure 63 RWD ரூ. 18.79 லட்சத்திலும், டாப் மாடல் Empowered A 75 AWD ரூ. 25.99 லட்சத்திலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

காரின் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூலை 15 முதல் வாடிக்கையாளார்களுக்கு டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவின் மூலம் நீங்கள் புதிய எலக்ட்ரிக் கார் வாங்குவதில் உள்ள குழப்பங்களைத் தீர்த்து, நீண்ட கால பேட்டரி வாரண்டியுடன் கூடிய சிறந்த சொகுசு எஸ்யூவி காரைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
ஃபேமிலி ஃப்ளோட்டர் vs சீனியர் சிட்டிசன் பாலிசி: எது பெஸ்ட்?
Tata Sierra EV | சியரா இவி
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com