ரயில் நிலைய மஞ்சள் கோட்டின் ரகசியம்: உயிரைக்காக்கும் அந்த முக்கியமான குறியீடு பற்றித் தெரியுமா?

நடைமேடையில் உள்ள மஞ்சள் கோடு வெறுமனே அலங்காரமல்ல; அது விபத்துகளில் இருந்து காக்கும் பாதுகாப்பு வளையம்.
மஞ்சள் கோடு - Yellow Line Railway,
மஞ்சள் கோடு - Yellow Line Railway,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

1960களில் ஜப்பானில் பார்வை மாற்றுத்திறனாளி களுக்காக உருவான தொடு மஞ்சள் கோடு இன்று உலகம் முழுவதும் ரயில், மெட்ரோ நிலையங்களில் கட்டாய பாதுகாப்பு அம்சமாக உள்ளது. மேடு பள்ளங்களுடன் கூடிய இந்த மஞ்சள் பாதை பார்வையற்றவர்களுக்கு நடைமேடை விளிம்பு, படிக்கட்டு, லிஃப்ட், டிக்கெட் கவுண்டர் போன்ற இடங்களை காலால் உணர்ந்து பாதுகாப்பாக அடைய வழிகாட்டுகிறது.

குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக்கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயிலில் பயணம் செய்வதைத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் ரயில் நிலையங் களுக்கு செல்லும்பொழுது நடைமேடையில் மஞ்சள் கோடுகளை அனைவரும் பார்த்திருப்போம். இந்த மஞ்சள் கோடுகள் அலங்காரத்திற்காக அல்ல, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட முக்கிய குறியீடுகள் என்பது தெரியுமா?

ரயில் நிலைய மேடைகளின் ஓரத்தில் வரையப்படும் இந்த பாதுகாப்புக் குறியீடு பயணிகள் தண்டவாளங்களில் இருந்து விலகி, பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் செயல்படுகிறது.

நடைமேடையின் விளிம்பிற்கு மிக அருகில் நிற்பது மிகவும் ஆபத்தானது. ரயில்கள் நிலையங்களுக்கு வரும் பொழுதும், புறப்படும் பொழுதும் அல்லது கடந்து செல்லும் பொழுதும் தற்செயலாக தடுக்கி, வழுக்கி விழுவதையும், ரயில்களுடன் தொடர்பு கொள்வதையும் தடுப்பதற்காக இந்த மஞ்சள் கோடு உதவுகிறது.

ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள மஞ்சள் கோடு பயணிகளின் பாதுகாப்பு எல்லைக் கோடாக மற்றும் பார்வையற்றவர்களுக்கான வழிகாட்டியாக செயல் படுகிறது. 1960களில் ஜப்பான் நாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக இந்த தொடு கோடுகள் முதன்முதலில் அமைக்கப்பட்டன.

மஞ்சள் கோடு - Yellow Line Railway,
மஞ்சள் கோடு - Yellow Line Railway,

காலால் தொடுவதன் மூலம் அவர்கள் தங்களுடைய வழியை அறிவதற்கு இந்த கோடுகள் வடிவமைக் கப்பட்டன. பின்னரே இந்த நடைமுறை உலகம் முழுவதும் பரவியது. இந்தியா உட்பட பல நாடுகளில் ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் இது கட்டாய பாதுகாப்பு முறையாக உள்ளது.

அறிவியல் காரணம்:

இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணம், அதிவேக ரயில்கள் கடுமையான காற்றுச் சுழற்சியையும், அழுத்த மாற்றங்களையும் உருவாக்குகின்றன. இந்த விசைகள் தளர்வான பொருட்களை இழுக்கலாம் அல்லது ஒருவருடைய சமநிலையை பாதிக்கலாம். மஞ்சள் கோடு மிகக் கடுமையான காற்றியக்க விளைவுகளுக்கு அப்பால் உள்ள பாதுகாப்பான பகுதியைக் குறிப்பதற்காக உள்ளது.

நடைமேடையின் விளிம்பில் உள்ள மஞ்சள் கோடு பாதுகாப்பு எச்சரிக்கைக் கோடாக செயல்படுகிறது. விரைவாகச் செல்லும் ரயில்கள் உருவாக்கும் காற்று அழுத்தம் (Suction effect) மற்றும் வேகம் காரணமாக, விளிம்பில் நிற்பவர்கள் தண்டவாளப் பக்கம் இழுக்கப்படலாம்.

எனவே ரயில் வரும்பொழுது அல்லது செல்லும்பொழுது பயணிகள் மஞ்சள் கோட்டிற்குப் பின்னாலேயே நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மஞ்சள் கோடு உள்ளது. இது கூட்ட நெரிசல் மற்றும் அவசர நிலைகளில் விபத்துகளைத் தடுக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ரோட்டில் இருக்கும் வெள்ளை மஞ்சள் கோடுகளுக்கு இதுதான் அர்த்தமா... இத்தனை நாள் தெரியாம போச்சே!
மஞ்சள் கோடு - Yellow Line Railway,

இது உயிர்களைக் காக்கும் ஒரு எளிய பாதுகாப்பு அம்சமாகும். பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும் மஞ்சள் கோடு ஒரு முக்கியமான ரயில்வே பாதுகாப்புக் கருவியாகும். இது பயணிகளைப் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறது.

பார்வையற்றவர்களுக்கான வழிகாட்டி:

"பிரெய்ல் கட்டைகள்" அல்லது "டென்ஜி கட்டைகள்" என்று அழைக்கப்படும் தொடு உணர்வு நடைபாதையானது 1965 ஆம் ஆண்டில் ஜப்பானில் செய்ச்சி மியாக்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் பார்வைக் குறைபாடுள்ள மக்கள் பாதுகாப்பான பாதைகளை அடையாளம் காண்பதற்கும், நடைபாதையின் விளிம்புகள் அல்லது சந்திப்புகள் போன்ற அபாயங்களைக் கண்டறிவதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு முதன்முதலில் ஒகாயாமா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு உலக அளவில் அங்கீகாரம் பெற்று பொது இடங்களில் குறிப்பாக போக்குவரத்து மையங்களில் இடம்பெற ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்:
கோடையிலும் வீடு ஏசி போல குளுகுளுனு இருக்கணுமா? இந்த தரை வகைகள் தான் ரகசியம்!
மஞ்சள் கோடு - Yellow Line Railway,

உயர்த்தப்பட்ட தொடு கோடுகள் பார்வை அற்றவர் களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றன. மஞ்சள் நிற மேடு பள்ளங்களைக் (Tactile paving) கொண்ட தடங்கள் மற்றும் புள்ளிகள் போன்ற அமைப்பு பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லவும், நடைமேடையின் விளிம்பை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன.

அத்துடன் வெளியேறும் வாயில், டிக்கெட் கவுண்டர், படிக்கட்டு மற்றும் லிஃப்ட் பகுதிகளுக்கான திசையையும் காட்டுகின்றதனால் அவர்கள் பிறரின் உதவி இன்றி பாதுகாப்பாகச் செல்ல முடிகிறது. மேலும் பிரகாசமான மஞ்சள் நிறம் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் கூட குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரியவும், அடையாளம் காணவும் உதவுகிறது. இந்த வசதிகள் அவர்களின் அன்றாடப் பயணத்தில் தன்னம்பிக்கை யையும் கண்ணிய உணர்வையும் ஏற்படுத்துகின்றன.

logo
Kalki Online
kalkionline.com