கோடையிலும் வீடு ஏசி போல குளுகுளுனு இருக்கணுமா? இந்த தரை வகைகள் தான் ரகசியம்!

summer tiles
summer tiles
Updated on

ஒரு வீட்டின் தரைவகை கோடைகாலத்தில் அந்த இடத்தில் தன்மையை மாற்றுகிறது. வெப்பம் அதிகமான நேரங்களில் கூட குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் தரையின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில் வீட்டில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு, வெறும் காலுடன் நடப்பதற்கு எளிதாகவும், அழகாகவும் இருக்கும் தரை வகைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

கோட்டா கல் தரைத்தளம்

வெறும் காலுடன் நடந்தாலும் கடினமான உணர்வை தராத, பழைய வீடுகளில் முக்கியமாக பயன்படுத்தப்பட்ட, எளிமையான பளபளப்பான தோற்றத்திற்கு பெயர் பெற்ற நவீன உள் அலங்காரங்களுடன் இருக்கும் 'கோட்டா கல் தரைத்தளம்' இயற்கையாகவே குளிர்ச்சியாக இருப்பதால் கோடை காலத்திற்கு ஏற்ற தரை வகைகளில் முதன்மையாக உள்ளது.

டெர்ராசோ தரைத்தளம்

சிறிய கல்சிதறல் போன்ற வடிவமைப்புடன், வீட்டிற்கு மென்மையான பழங்கால தோற்றத்தை அளிக்கும் அதிகப்படியான பளபளப்பு இல்லை என்றாலும், அறைகளை பிரகாசமாக வைத்திருக்கும் 'டெர்ராசோ தரைத்தளம் 'விரைவாக சூடாகாது என்பதால் கோடைக்கு ஏற்றதாக உள்ளது.

வெளிர் பளிங்கு தரைத்தளம்

பகல் நேரங்களில் அறையை தானாகவே காற்றோட்டமாக தோற்றமளிக்கச் செய்வதோடு, உடனடியாக ஓர் இடத்திற்கு அமைதியான உணர்வை கொடுக்கும் பொருட்களில் ஒன்றாக இருக்கும், வெள்ளை பளிங்கு நிற தரைத்தளம் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருப்பதால் வெப்பமான கால நிலைக்கு மிகவும் பொருத்தமானது.

களிமண் ஓடுகள்

பழைய வீடுகளுக்கே உரித்தான 'களிமண் ஓடுகள்' வெப்பமான கால நிலையிலும் செயற்கைப் பொருட்களைப் போல வெப்பத்தை தக்கவைப்பதில்லை என்பதால் வீட்டில் முற்றங்கள், பால்கனிகள் மற்றும் ஓய்வான வாழ்க்கை இடங்களுக்கு மிகவும் பொருத்தமான தரைத்தளமாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
அழகும் ஆரோக்கியமும்: கோடை காலத்திற்கு ஏற்ற திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
summer tiles

மேட் ஃபினிஷ் விட்ரிஃபைட் டைல்ஸ்

பளபளப்பு இல்லாத மேட் ஃபினிஷ்  விட்ரிஃபைட் டைல்ஸ், பளபளப்பான தரைகள் அறையை சூடாக உணர செய்வதைப்போல இல்லாமல் பார்ப்பதற்கு மென்மையாக இருப்பதால் வீட்டிற்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதால் கோடை காலத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

அதங்குடி டைல்ஸ்

பகல் நேரங்களில் கடுமையான சூரிய ஒளிவுபடும் வீடுகளுக்கு வண்ணமயமான அதங்குடி கைவினை ஓடுகள் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த தேர்வாக உள்ளன. ஏனெனில் வடிவமைப்பாளர் வீடுகளில் பிரபலமடைந்து வருவதோடு வீட்டின் குளிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஐபிஎஸ் தரையமைப்பு

வழவழப்பான சிமெண்ட் போன்ற பூச்சு, அதிக மெனக்கெடல் இல்லாமல் தூய்மையான, எளிமையான தோற்றத்தை அளிக்கும் ஐபிஎஸ் தரையமைப்பு அமைதியான தோற்றத்தை ஏற்படுத்துவதால் கோடை காலத்திற்கு ஏற்ற தரை வகையாக உள்ளது.

மணற்கல் தரைத்தளம்

இயற்கையான தோற்றமளிக்கும் நிம்மதியான உணர்வைத் தரும் ஓய்வெடுக்கும் இடம் மற்றும் பால் கனிகளுக்கு சிறந்த மணற்கல் விரைவாக சூடாகாது என்பதால் கோடைக்கேற்ற தரைத்தளமாக உள்ளது.

வெளிர் நிறங்களில் மரவேலைப்பாடு டைல்ஸ்

புத்துணர்ச்சியான தோற்றம் அளிக்கும், வெப்பமான காலங்களில் சிறப்பாக பயன்படும் வெளிர் நிற மரவேலைப்பாடு டைல்ஸ்கள் இதமான உணர்வைத் தருவதால் கோடை காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில் அடர் நிறங்கள் கோடை காலத்தில் வெப்பத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நடுநிலை நிற ஓடுகள்

சூரிய ஒளி உள்ளே நுழையும்போது வெளிர் நிறங்கள் உட்புறங்களை குளிர்ச்சியாக உணர வைப்பதோடு, அறைகளை பெரிதாகவும், நெரிசல் இல்லாமல் விசாலமாகவும் காட்டும் தந்தம் நிறம், பழுப்பு மற்றும் மென்மையான சாம்பல் நிற பெரிய டைல்ஸ்கள் கோடை காலத்திற்கு ஏற்ற தரை வகையாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
செம்மண் முதல் தேங்காய்ப் பால் வரை: எளிய பராமரிப்பில் மல்லிகைச் செடி!
summer tiles

மென்மையான வண்ணங்களில் கிரானைட் தரைத்தளம் பயன்படுத்தவும், பராமரிக்கவும்  எளிதாக, பல ஆண்டுகள் சேதமின்றி நீடித்து உழைக்கக் கூடியதும் உறுதியான மென்மையான வண்ணங்கள் கொண்ட கிரானைட் தரைத்தளம் கோடை காலத்திற்கு சிறந்தவையாக உள்ளன.

மேற்கூறிய தரைத்தளங்கள் அனைத்தும் கோடை காலத்தில் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால் இவற்றை பயன்படுத்தி வீட்டை குளிர்ச்சியாக வைத்து பலன் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com