உயிர் வாழ்வதற்கு உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் அவசியமானவை என்பதுதான் நம் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் ஒரு நபர் சில உறுப்புகள் இல்லாமல் வாழ முடியும். அந்த வகையில் நியூயார்க் போஸ்ட்டின் படி, டாக்டர் இந்திரனில் முகர்ஜி, இந்த 10 உறுப்புகள் இல்லை என்றாலும் உயிர் வாழ முடியும் என்று அடையாளம் கண்டு தெரிவித்துள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.
1. குடல்வால்
பண்டைய காலங்களில் தாவர உணவுகளை ஜீரணிக்க உதவியதாக விஞ்ஞானிகள் கூறும் குடல்வால் என்பது குடலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற உறுப்பு. இன்றைய வாழ்க்கை முறையில் இது அதிகம் தேவையில்லாததால் அதை அகற்றுவது பெரிய பிரச்சனையாக இருக்காது.
2. பித்தப்பை
கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தத்தை சேமிக்கும் ஒரு சிறிய பையாகவும், உணவை ஜீரணிக்கப் பயன்படும் பித்தப்பை அகற்றப்பட்டால், கல்லீரல் நேரடியாக குடலுக்கு பித்தத்தை அனுப்பும். இதை அகற்றி விட்டால் முதலில் சில அசௌகரியங்கள் இருக்கும் என்றாலும் சில வாரங்களில் உடல் பழகிவிடும் .
3. சிறுநீரகம்
ரத்தத்தை சுத்திகரிக்க நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு இந்த பணியை எளிதாக செய்ய முடியும். ஒரு சிறுநீரகத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வழக்கமான பரிசோதனைகளே போதுமானது.
4. வயிறு
வயிறு உணவைச் சேமித்து மென்மையாக்குகிறது. ஆனால் வயிறு அகற்றப்பட்டால், உணவு நேரடியாக குடலுக்குச் செல்லும் சூழ்நிலைகளில், வைட்டமின் மாத்திரைகள், சரியான உணவுமுறை மற்றும் மருத்துவரின் மேற்பார்வை அவசியம்.
5. சிறுகுடல்
உடலுக்கு ஊட்டச்சத்துக்களை சிறுகுடல் வழங்குகிறது. அதன் பெரும்பகுதி அகற்றப்பட்டால், நோயாளிக்கு ஊசி அல்லது IV ஊட்டச்சத்து மூலம் உணவளிக்கலாம் என்றாலும், இது ஷார்ட் குட் சிண்ட்ரோம் எனப்படும் வயிற்றுப்போக்கு, சோம்பல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
6. பெருங்குடல்
உணவில் இருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மலத்தை உருவாக்கும் பெருங்குடல் அகற்றப்பட்டால், அடிக்கடி மலம் கழித்தல் ஏற்பட்டு சிலருக்கு வயிற்றில் கொலோஸ்டமி பை அதாவது மலத்தை சேகரிக்கும் பை வைக்க வேண்டியிருக்கும் என்றாலும் இவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழலாம்.
7. ஆசனவாய்
ஆசனவாய் வயிற்றில் ஒரு புதிய பாதையை உருவாக்கி, கழிவுகள் ஒரு பைக்குள் செல்ல அனுமதித்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு மாற்றமாக இருந்தாலும், இது அகற்றப்பட்டாலும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழலாம்.
8. உணவுக்குழாய்
தொண்டையில் இருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் உணவுக்குழாய் அகற்றப்பட்டால், குடல் அல்லது வயிற்றின் ஒரு பகுதியை இணைத்து மருத்துவர்கள் புதிய பாதையை உருவாக்கி, ஆரம்பத்தில் உணவை ஒரு குழாய் வழியாக வழங்குவார்கள், பின்னர் நோயாளி புதிய உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
9. சிறுநீர்ப்பை
சிறுநீரைச் சேமிக்கும் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டால், வயிற்றில் ஒரு புதிய பாதை உருவாகி அதன் மூலம் சிறுநீர் ஒரு பையில் வெளியேறுகிறது. இது ஒரு நிரந்தர மாற்றம் என்றாலும், சாதாரண வாழ்க்கையை வாழலாம்.
10. ஒரு நுரையீரல்
ஒரு நுரையீரல் அகற்றப்பட்டால் சுவாசிக்கும் திறன் குறைந்துவிடும். ஏனென்றால் மீதமுள்ள நுரையீரல் அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, ஓடுவதும் கடினமான உடல் வேலைகளைச் செய்வதும் கடினமாகிவிடும்.
மேற்கூறியய 10 உடல் உறுப்புகள் இல்லையென்றாலும் ஒருவர் உயிருடன் வாழலாம் என்றாலும், இயற்கையின் படைப்பான அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)