பவர்பேங்கில் ஒரு அசுரன், 50000 mAh திறனில் ஒரு பவர் பேங்க் சந்தைக்கு வந்துள்ளது. வழக்கமாக ஒரு பவர் பேங்கில் இருமுறை அல்லது 3 முறை முழுமையாக மொபைல் போனுக்கு சார்ஜ் செய்யலாம். ஆனால் , ஜிப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மெகா பவர் பேங்கில் 7 லிருந்து 10 முறை மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு சாதாரண பவர்பேங்க் பயன்பாடு ஒத்து வராது. அதுபோல அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் நாடு முழுவதும் நிறைய உள்ளன. அந்த மாதிரி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு Zebronics EnergiPod 50R1 பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்து லடாக் வரை, 2 சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கும் இது அத்தியாவசிய தேவையாக இருக்கும்.
ஜிப்ரானிக்ஸ் எனர்ஜிபாட் 50R1 சிறப்பம்சங்கள்:
இந்த பவர் பேங்கின் முக்கிய சிறப்பம்சமே அதன் 50,000 mAh மின் சேமிப்புத் திறன் கொண்ட பிரம்மாண்டமான பேட்டரி ஆகும்.
5000mAh திறன் கொண்ட மொபைல் போன்களை 10 முறை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ளலாம். 6000 முதல் 7000 mAh திறன் கொண்ட மொபைல் போன்களை 7 அல்லது 8 முறை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். மேலும் இதில் 22.5W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால், சாதனங்களை மிக விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் இந்த பவர் பேங்க் மூலம் 3 மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். அதற்காக 2 USB அவுட்புட் போர்ட்கள் மற்றும் ஒரு Type-C போர்ட் உள்ளது. பவர்பேங்கில் சேமிக்கப்பட்ட பேட்டரி திறனை கண்டறிய LED டிஸ்ப்ளே உள்ளது. இது பவர் பேங்கில் மீதமுள்ள பேட்டரி சதவீதம், வோல்டேஜ் மற்றும் வாட்ஸ் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டுகிறது.
ஜிப்ரானிக்ஸ் எனர்ஜிபாட் 50R1 நிறைகள்:
ஜிப்ரானிக்ஸ் எனர்ஜிபாட் 50R1 பெரிய பேட்டரியை கொண்டுள்ளதால் , இது நீண்ட தூரப் பயணங்களுக்கு இது மிகவும் ஏற்றது. கேம்பிங் அல்லது மலைப் பிரதேசங்களுக்குச் செல்பவர்கள் பல நாட்களுக்கு கவலையின்றி இருக்கலாம்.
இதில் உள்ள PD 3.0 மற்றும் QC 3.0 தொழில்நுட்பம் மூலம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.இதில் அதிகப்படியான சார்ஜிங் செய்யும் போது ஷார்ட் சர்க்யூட் மற்றும் அதிக வெப்பமடைவதைத் தடுக்க இதில் சிறப்புப் பாதுகாப்புச் சுற்றுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் மல்டி -டிவைஸ் சார்ஜிங் வசதி உள்ளதால் , ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இயர்பட்ஸ் என அனைத்தையும் சார்ஜ் செய்யலாம்.
இதன் குறைகள் :
50,000 mAh திறன் சேமிக்கும் பேட்டரி கொண்டதால், இதன் எடையும் அதிகமாகவே இருக்கிறது. கிட்ட தட்ட 1கிலோ (971கி) அளவில் எடை கொண்டுள்ளதால் , மற்ற பவர்பேங்க் களைப் போல பேண்ட் பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது. இதற்கென தனியாக ஒரு பையில் வைத்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும். அதிக திறன் கொண்டதால் பவர்பேங்க் முழுமையாக சார்ஜ் ஏற அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 15 மணி நேரம் வரை ஆகும். இதை விமானப் பயணங்களின் போது கைப்பையில் எடுத்துச் செல்ல முடியாது. விமானங்களில் அதிகபட்சமாக 20,000 mAh திறனுக்கும் கீழே உள்ள பவர்பேங்கை எடுத்து செல்ல மட்டுமே அனுமதி உண்டு.
இதில் நிறைகள் மற்றும் குறைகள் இருந்தாலும் பொதுவாக வெள்ளம் , புயல் , மழைக்காலங்களில் மின்சாரம் தடை ஏற்படும் காலத்தில் வீட்டில் இருப்பது அவசியமானது. இதன் விலையும் மிகவும் குறைவு. அமேசான் தளத்தில் 6 மாத வாரண்டியுடன் ₹3499 விலையில் விற்பனை ஆகிறது.