
செப்டம்பர் 1-ம் தேதி உலக கடித தினமாக அனுசரிக்கப்படுகிறது. 'உலக கடித தினம்' கையால் எழுதும் கடிதங்களின் மதிப்பை பாராட்டி கொண்டாடப்படும் சர்வதேச தினம் ஆகும்.
நோக்கம் :
கைகளால் கடிதங்கள் எழுதும் முறையை ஊக்குவித்து, அதன் முக்கியத்துவத்தை நினைவுப்படுத்தும் தினமாகும். இந்த நாள் பண்டைய காலத்தில் கடிதங்களின் பெரும் பங்கு வகித்ததை நினைவு கூறுகிறது.
வரலாற்றில் எழுதியவர்கள் :
வரலாற்றில் பல தலைவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்கள் கடிதங்களால், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நேரு, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, மு வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். அவர்களின் கடிதங்கள் புத்தகங்களாகவும், வரலாற்று பதிவுகளாகவும் வெளிவந்துள்ளன.
முக்கிய தலைவர்கள் எழுதியது :
ஜவஹர்லால் நேரு :
தன் மகள் இந்திரா காந்திக்கு பல ஆண்டுகளாக எழுதிய கடிதங்கள் 'உலக வரலாறு' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளன.
மகாத்மா காந்தி :
'உலக வரலாறு' என்ற பெயரில் வெளிவந்த நேருவின் கடிதங்களில், காந்தி, நேருக்கு எழுதிய கடிதங்களும் அடங்கும்.
சர்தார் வல்லபாய் படேல் :
இவர் காந்திக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
அறிஞர் அண்ணா :
இவர் தனது சகோதரர் மற்றும் பிறருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கிய நயம் கொண்டவைகளாக இருந்தன.
மு. கருணாநிதி :
இவர் கடித முறையில் எண்ணற்ற சேதிகளை எழுதும் உக்தியைக் கைவரப்பெற்றவர்.
இவர் கடிதங்கள் 'அன்பு நண்பா', 'என் உடன் பிறப்பே' எனத் தொடங்கி, நீள்கின்றன.
இவர் எழுதிய கடிதங்கள் பல்வேறு தலைப்புகளில் வெளிவந்துள்ளன.
இவர் கடிதங்கள் சுருக்கமாகவும், தெளிந்த கருத்து மிக்கதாகவும் இருக்கும்.
மு.வரதராசனார் :
இவர் 'தம்பிக்கு' என்ற பெயரில் எழுதிய கடிதங்கள் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவை.
மகாகவி பாரதியார் :
இவர் தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதங்கள், அவரது தனிப்பட்ட வாழ்வையும் சமூக பார்வையையும் வெளிப்படுத்துகின்றன.
மார்க் டுவெய்ன் :
இவர் ஹெலன் கெல்லருக்கு எழுதிய கடிதங்கள் இவரது இலக்கியத்தையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் :
அமெரிக்க அணுகுண்டு உருவாக்கம் :
அமெரிக்கா அணுகுண்டு உருவாக்கும் பாதையில் பயணிக்கத் தொடங்கியதற்கு காரணமான கடிதங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
சில கடிதங்கள் போர்களின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன.
கடித இலக்கியத்தின் பங்கு :
கடிதங்கள் வெறும் செய்திகளை பரிமாறும் ஊடகமாக மட்டுமில்லாமல் கட்டுரைகள், நாட்குறிப்புகள் போன்ற பிற இலக்கிய வடிவங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளன.
கடிதங்கள் வாயிலாக சமூக அரசியலில் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு சமூக மாற்றங்களுக்கு வித்திட்டு உள்ளன.
காதல் கடிதபாடல்கள் :
நான் அனுப்புவது கடிதமல்ல
உள்ளம் ......
அன்புள்ள மான்விழியே .....
நலம், நலமறிய ஆவல்.....
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது .....
பூவே இளைய பூவே .....
கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதமே....
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா .....
அன்புள்ள மன்னவனே....
காதல் கடிதம் தீட்டவே .....
இன்றைய காலகட்டத்தில் கடிதங்கள் எழுதுவது குறைந்தாலும் இன்னும் எழுத்தாளர்கள், வாசகர்கள் பத்திரிகைகளுக்கு கடிதங்களில் எழுதி அனுப்பி கொண்டே இருக்கின்றனர்!