ஜூலை 22 தேசிய மாம்பழ தினம்: மாம்பழம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவது வரை என நம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை மாம்பழம் தருகிறது. மாம்பழத்தில் கிடைக்கும் 8 நன்மைகள் தெரியுமா?
National mango day
National mango day
Published on

மாம்பழமானது இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாகும். இந்தியாவில் இவை பொதுவாக மார்ச்-மே மாதங்களின் போது அறுவடை செய்யப்படுகின்றன. இது பழத்தின் ராஜா என அழைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச மாம்பழத் திருவிழா' டெல்லியில் கொண்டாடப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவது வரை என நம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை மாம்பழம் தருகிறது. மாம்பழத்தில் கிடைக்கும் 8 நன்மைகள் எது தெரியுமா?

1. விட்டமின் சி சத்துக்கு

மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. ஒரு கப் மாம்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 67% உள்ளது. நன்றாக பழுத்த மாம்பழத்தை விட மாங்காயில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

2. உடல் எடை குறைப்புக்கு

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், 165 கிராம் அளவுள்ள ஒரு கப் மாம்பழத்தில் 100 கலோரிகளுக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் உணவு சாப்பிடுவதற்கு முன் மாம்பழம் சாப்பிட்டால் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

3. குடல் ஆரோக்கியத்துக்கு

மாம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.

4. நீரிழிவு நோய் வராமல் தடுக்க

இயற்கையாகவே மாம்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும், டயாபடீஸ் நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் பருமனாக இருப்பவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. எனினும், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை அளவாகவே உண்ண வேண்டும். மேலும் மாம்பழ ஜூஸ்களை தவிர்க்க வேண்டும்.

5. கண் பார்வைக்கு

மாம்பழத்தில் லூடின் மற்றும் ஜெக்ஸாந்தின் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், நமது விழித்திரையில் படும் கூடுதலான வெளிச்சத்தை தடுத்து கண்களை பாதுகாக்கிறது.

6. இதயஆரோக்கியத்துக்கு

மாம்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால் இதை உண்ணும் போது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. அது மட்டும் இன்றி உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி 6 ஆகியவை அதிகம் உள்ளதால், நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நம்முடைய உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சிஸ்டம் சிறப்பாக செயல்படவும் உதவியாக இருக்கிறது. மேலும் மாம்பழத்தில் காப்பர் போலேட் என்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
குடகு முதல் வங்காள விரிகுடா வரை... காவிரி செய்யும் மாயங்கள்!
National mango day

8. ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகரிக்க

மாம்பழத்தில் பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளதால், நம் உடலுக்கு பல வகைகளில் உதவியாக இருக்கிறது. செல்களை பாதிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் மாம்பழத்தில் மேக்னிபெரின் என்ற பயோ ஆக்டிங் கலவை உள்ளது. இது பல நோய்களை எதிர்த்து போராட உடலுக்கு உதவி செய்கிறது. எனவே, மாம்பழத்தை சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லும் பழக்கம் மாறிவிட்டது! ட்ரெண்டிங்கில் உள்ள டாப் 7 பயண ஐடியாக்கள்!
National mango day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com