‘அக்னி சிறகுகள்’ தந்த ஆதவரே, உங்கள் காலடி மண் தொட்டு வணங்குகிறோம்!

அக்டோபர் 15, டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள்
Dr. Abdul Kalam's birthday
Dr. Abdul Kalam
Published on

றப்பிலும் சரித்திரம் படைத்த நமது  இந்தியாவின் முன்னாள் முதல் குடிமகனாா் பெருமைமிகு அப்துல் பகீா் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளாம், அக்டோபர் 15ல் அவர்தம் புகழ் பாடுவோம்.

‘அக்னி சிறகுகள்’ தந்த ஆற்றல்மிகு ஆதவரே…

‘இந்தியா 2020’ எனும் நூல் தந்த வெற்றித்திருமகனாரே…

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் தந்த தவப்புதல்வரே…

உலக மக்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் நீக்கமற நிறைந்த நிறைகுடமே…

‘சந்தர்ப்பமான வாழ்வை நழுவ விடாதே’ என நல்வாக்கு தந்த மணிமகுடமே…

கடமை தவறாமல் எடுத்த காாியம் நிறைவேற்ற அறிவுரைத்த அணையாவிளக்கே…

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பொறுப்பேற்க வேண்டிய நேரம்!
Dr. Abdul Kalam's birthday

‘பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்’ என சங்கநாதம் படைத்தவரே…

‘வாய்ப்புக்காக காத்திருக்காதே’ என உற்சாகம் தந்தவரே.

‘போராடலாம் போராடு’  என போதனை தந்த போதகரே…

‘உழைப்பால் முன்னேறி நீ நீயாகவே வாழ வேண்டும்’ என இயம்பிய இலக்கணமே.

‘ஒரு முறை வந்தால் அது கனவு’ எனச் சொல்லிய காவியமே…

‘இருமுறை வந்தால் அது ஆசை’ என கூறிய ஆண்டவன் கட்டளையே.

‘உன்னை தூங்கவிடாமல் செய்வதே லட்சியம்’ என எடுத்தியம்பிய உத்தமரே…

‘ரேகை பாா்த்து எதிா்காலம் நிா்ணயிக்காதே’ எனக் கூறிய நிதர்சனமே…

இதையும் படியுங்கள்:
மனநலத்தின் ரகசியமும், சமூகப் புறக்கணிப்பைத் தடுக்கும் வழிகளும்!
Dr. Abdul Kalam's birthday

ஏவுகணை நாயகரே விண்வெளியின் விடிவெள்ளியே…

பாதுகாப்பு விஞ்ஞான ஆராய்ச்சி செய்த செயல் வடிவமே…

இளைஞர்களின் எழுச்சி நாயகரே…

இறந்தும் அனைவர் மனதிலும் நிறைவாய் நிறைந்தவரே…

ஐந்தாண்டுகள் குடியரசுத் தலைவராய் பதவி வகித்த பத்தரைமாற்றுத் தங்கமே…

பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா விருது வாங்கிய விஞ்ஞான வித்தகரே…

வாழும் மனித தெய்வ மகனாரே, உங்கள் காலடி மண் தொட்டு வணங்குகிறோம்.  வாழ்நாளில் உங்களின் கொள்கைப் பிடிப்போடு தங்களை வணங்கி மகிழ்கிறோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com