
பொதுவாக, மழலைச் செல்வங்களே இல்லங்களுக்கான மகிழ்ச்சி. அதிலும் குழந்தை பிறப்பு, வளா்ப்பு என்பது ஒரு தாயாாின் அர்ப்பணிப்பாகும். கருவுற்றிருக்கும் நிலையில் பலரது கனவு பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதாகும். சில குடும்பங்களில் முதலில் பெண் குழந்தைதான் பிறக்கவேண்டும் என நினைப்பாா்கள். சிலரோ ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இரண்டும் ஒன்றுதான் என நினைப்பதும் நடைமுறை.
பெண் என்பவள் பராசக்தியின் அவதாரம். அவள் போற்றப்பட வேண்டியவள். அப்படிப்பட்ட பெண் குழந்தைகளின் எதிா்காலம், வளர்ப்பு முறை, அவர்கள் எதிா்கொள்ள வேண்டிய சவால்கள், அவர்களுக்கான உாிமைகளை கிடைக்கச் செய்தல், அவர்களுக்கான உாிமையைப் பெறும் நிலையில் உரிய வழிகாட்டுதல்களில் இந்த சமுதாயம் எந்த அளவுக்கு பாடுபடுகிறது என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுகளை உருவாக்குவது தொடர்பாக வருடம் தோறும் அக்டோபர் 11ம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை முதன் முதலில் 2012ல் நடைமுறைக்கு வந்தது. பொதுவாகவே, பெண் குழந்தைகள் பல வகையிலும் துன்பப்படுத்தப்படும் நிலைதான் உள்ளது. அதேபோல, வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்புவதும், பெரும்பாலும் வெளியில் தொியாமல் நடக்கிறது. அதைவிட கொடுமையான விஷயம், பாலியல் தொல்லை, பாலியல் கொடுமையானது தீா்வு கிடைக்க இயலாத நிலையில் உள்ளது. அந்த நிலைப்பாடு தொடர்வதும் வாடிக்கையாகவே இந்த சமூகத்தில் இருந்து வருகிறது!
பெண் குழந்தைகள் விஷயத்தில் நாம் அதிக பொறுப்பு எடுத்துக்கொள்ளாததும் மனதிற்கு பெரும் உறுத்தலாகவே உள்ளது. ‘பெண்கள் இந்நாட்டின் கண்கள்’ என மேடையில் முழங்கினாலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் தர வேண்டும். அதுதானே நல்லது.
ஆக, எந்தத் தருணத்திலும் பெண் குழந்தைகள் நலனிலும், அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுப்பதிலும் நமக்கு முழு பொறுப்பு உள்ளது. ‘பெண் சுதந்திரம்’ என்று மூச்சுக்கு மூச்சு பேசினாலும், நாம் அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்கிறோமா என்பது கேள்விக்குறிதான். அந்த நிலைபாட்டில் நாம் எப்போதும் பின்தங்கக் கூடாது.
சமுதாயத்தில் பெண் குழந்தைகள் சுதந்திரமாக எந்த செயலிலும் ஈடுபடுவதற்குாிய அங்கீகாரத்தை வழங்குவது நமது கடமை. பெண் குழந்தைகள் நலனில் அதிக பொறுப்புடன் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் நல்ல செயலாகும்.
இந்த தினத்தில் பெண் குழந்தைகள் நலனில் நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்புகளை மேலும் அதிகமாக்கிக்கொள்வோம். அனைத்து குழந்தைகளும் நம்முடைய சொத்துக்கள்தான் என நினைப்பதே சிறப்பு.