
உலக பென்குயின் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பென்குயின் வாழ்விடத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பென்குயின்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகள் மூலம் கொண்டாடப்படுகிறது. 18 வகையான பென்குயின்கள் உள்ளன. அவற்றின் அனைத்து இயற்கை வாழ்வு இடங்களாக தெற்கு அரைகோளத்தில் உள்ளன.
அற்புதமான கருப்பு வெள்ளை இறகுகள் என அமைதியாக காட்சி தரும் உயிரினம். இந்த பென்குயின் பறவைகள்.
ஆனால் குள்ள உருவில் இறக்கை இருப்பதால் இதனால் பறக்க இயலாது.
உலகின் மிகச் சிறிய பென்குயின் நியூசிலாந்தில் ஆட்டே ரோவாவில் வாழ்கிறது. இது சுமார் 25 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்டது. இது உலகில் உள்ள பெங்குவின்களில் மிகச் சிறியது. இதுவே அவற்றின் உடலின் மேற்புறத்தில் உள்ள தனித்துவமான நீல இறகு நிறங்கள் 'லிட்டில் ப்ளூ பென்குயின்' என அழைக்கப்படுகின்றன.
இறக்கையை விரித்தபடி சிறிய அடியெடுத்து தலையை அசைத்தபடி நடக்கும் போது அழகாக இருக்கும்.
துருவ பிரதேசத்தில் அதிகம் இருக்கும்.
தங்கள் வாழ்நாளில் பாதியை நிலத்திலும் மற்ற பாதியை கடலிலும் செலவிடுகின்றன.
அதிகம் குளிருள்ள பூமியின் துருவப் பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது.
உலகம் முழுவதும் 19 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவின் தெற்கில் மித வெப்ப மண்டல பகுதியிலும் வசிக்கிறது.
பென்குயின் பறவை நீந்துவது, வானில் பறப்பது போன்றே காட்சி அளிக்கும்.
மனிதன் எளிதில் அண்ட முடியாத துருவப் பகுதிகளில் பெண்குயின்கள் வசிக்கிற போதும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
வேகமாக நீந்தும்.
உடல் அமைப்பால் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும்திறன் உடையது.
இந்தப் பறக்கமுடியாத பறவைகள் உலகத் தரம் வாய்ந்த நீச்சல் வீரர்கள் என சொல்லலாம்.
நீருக்கு அடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கும் திறன் பெற்றுள்ளது. கடல் உயிரினமான திமிங்கலம் போல் அடியை கொழுப்பு சூழ்ந்திருக்கும். ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் இணைந்து வெப்பநிலையை சமன் செய்து கொள்ளும்.
குட்டிக்கரணம் அடிக்கும் இயல்புடையது பென்குயின். அலைகள் மீது மிதக்கவும் செய்யும்.
மேலும் பென்குயின்கள் பனிக்கட்டியில் விரைவாக கடக்க வயிற்றால் சறுக்கிச் செல்ல விரும்புகின்றன.
முதுமையான எதிரி சீல் என்ற கடல் நாய்.
பெண்பறவை பாதுகாப்பான இடத்தை முட்டையிட தேர்வு செய்யும். பின் ஆண் துணையைத் தேடி சேர்ந்து வாழும். பல ஆண்டுகள் நீடித்து சேர்ந்துஇருக்கும். பொதுவாக இரண்டு முட்டைகள் இட்ட பின் பெண் பறவை இரை தேட சென்று விடும்.
ஆண் பறவை தான் முட்டையை அடைகாக்கும் முட்டை பொரிந்து குஞ்சுகள் வளர்ந்ததும் கடலில் உணவு தேடச் செல்லும்.
பென்குவின் கடல் நீரை மட்டுமே குடிக்கும். உடலில் உள்ள ஒரு வகை சுரப்பியால் குடிக்கும் நீரில் உள்ள உப்பை பிரித்து வெளியேற்றி விடும்.
இதை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலகப் பென்குயின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன்படி இந்த உயிரினத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.