உலகின் தலைசிறந்த 6 மருத்துவமனைகள்!

 Hospitals
Hospitals
Published on

சுகாதாரத்தை பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள சில மருத்துவமனைகள் அவற்றின் விதிவிலக்கான சேவைகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான நோயாளி பராமரிப்பு போன்ற அணுகுமுறைகளில் தனித்து நிற்கின்றன. அப்படி, உலகின் தலைசிறந்த மருத்துவமனைகள் மற்றும் அவற்றை சிறப்பின் உச்சத்தில் இருக்கும் தனித்துவமான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

மயோ கிளினிக் (Mayo Clinic), அமெரிக்கா:

மினசோட்டாவில்(Minnesota) ரோசெஸ்டரில்(Rochester) உள்ள மயோ கிளினிக், உலகின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகத் தொடர்ந்து தரவரிசையில் முன்னிலையில் உள்ளது. சிறப்பான பராமரிப்பு மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு பெயர் பெற்ற மாயோ கிளினிக் புற்றுநோயியல், இருதயவியல் மற்றும் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றன. அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் முழுமையான கவனிப்பை செலுத்துகின்றனர். கூடுதலாக, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேயோ கிளினிக்கின் முழு செலவினம், மருத்துவ துறையில் அதனை முன்னணியில் இருப்பதை உறுதி செய்கிறது.

கிளீவ்லேண்ட் கிளினிக் (Cleveland Clinic), அமெரிக்கா:

ஓஹியோவில்(Ohio) உள்ள க்ளீவ்லேண்ட் கிளினிக் கார்டியாலஜி மற்றும் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவை. குறிப்பாக மருத்துவ துறையில் புதுமைகளை புகுத்துவதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக குறைந்தபட்ச செலவில் செய்யக்கூடிய ரோபோடிக் அறுவை சிகிச்சை நுட்பங்கள்.

மருத்துவமனையின் தனித்துவமான நோயாளியின் கவனிப்பு மற்றும் அவர்களிடம் இருந்து பெறப்படும் விமர்சனங்கள் மூலம், கிளீவ்லேண்ட் கிளினிக் கடுமையான தரவு பகுப்பாய்வு (data analysis) மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (quality control measures) மூலம் இந்த நிலையை அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மருத்துவமனைக்கு விசிட் - நச்சரிக்காதீங்க!
 Hospitals

டொராண்டோ பொது மருத்துவமனை (Toronto General Hospital), கனடா:

பல்கலைக்கழக ஹெல்த் நெட்வொர்க்கின் (University Health Network) ஒரு பகுதியான டொராண்டோ ஜெனரல் ஹாஸ்பிடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதயப் பராமரிப்பு ஆகியவற்றில் செய்துகொண்டிருக்கும் சிறப்பான பணிக்காக அறியப்பட்ட ஒரு உயர்மட்ட நிறுவனமாகும். இதனால் அவர்களால் அதிநவீன சிகிச்சைகளை வழங்க அனுமதிக்கிறது மற்றும் கல்வி நிறுவனங்களுடனான மருத்துவமனையின் கூட்டமைப்பு புதிய விஷயங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களை கால்பதிக்கச் செய்கிறது.

Charité – Universitätsmedizin பெர்லின், ஜெர்மனி:

பெர்லினில் உள்ள Charité ஐரோப்பாவின் மிகப்பெரிய பல்கலைக்கழக மருத்துவமனைகளில் ஒன்றாகும். இது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக தொற்று நோய்கள், நோயெதிர்ப்பு(immunology) மற்றும் புற்றுநோயியல்(oncology) ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. Charité ஐ மற்ற மருத்துவமனையிடம் இருந்து வேறுபடுத்தும் தனித்துவமான விஷயம், அதன் ஆராய்ச்சி மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு முதலீடுகள் ஆகும். பின் மருத்துவமனையின் விரிவான ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்பு மற்றும் உலகளாவிய சுகாதார நிறுவனங்களுடனான கூட்டு அதன் திறன்களை மேலும் மேம்படுத்துகிறது.

ஷெபா மருத்துவ மையம் (Sheba Medical Center), இஸ்ரேல்

ரமத் கானில்(Ramat Gan) அமைந்துள்ள ஷெபா மருத்துவ மையம், இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இது மரபியல்(genetics), புற்றுநோயியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்(regenerative medicine) ஆகியவற்றில் அதன் மேம்பட்ட ஆராய்ச்சிக்காக அறியப்படுகிறது. ஷெபா மருத்துவ மையத்தின் தனித்துவமான அடையாளம் அதன் டிஜிட்டல் ஹெல்த்(Digital Health) மற்றும் டெலிமெடிசின்(Telemedicine) ஆகும்.

இதையும் படியுங்கள்:
இந்த வண்டியை சாதாரணமா நினைக்காதீங்க! இது ஒரு நடமாடும் மருத்துவமனை!
 Hospitals

சிங்கப்பூர் பொது மருத்துவமனை (Singapore General Hospital), சிங்கப்பூர்

சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) சிங்கப்பூரின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவமனையாகும். மருத்துவ பராமரிப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. SGH இன், மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்வியுடன் ஒருங்கிணைக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அதன் தனித்துவங்களாகும். இதோடு தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாட்டில்( development) மருத்துவமனை செலுத்தும் கவனம், அதனை மருத்துவ துறையின் உச்சத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com