ஆற்றல் மேலாண்மை: ஒவ்வொரு இந்தியரின் கடமை!

டிசம்பர் 14 - தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்!
National Energy Conservation Day
National Energy Conservation Day
Published on

மனித வாழ்க்கையில் சாப்பிட உணவு, தேவையான குடிநீா், உடுத்த உடை, தங்குவதற்கு சுமாரான வீடு, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தாலும் மிகமுக்கியமான தேவையாக எரிபொருள் (எாிசக்தி) இல்லாமல் எதுவும் நிகழாது என்ற நிலை.

அதன் தேவை மிகவும் அத்யாவசியமானது. அதை நன்கு பயன்படுத்தி சிக்கனமாக கையாள்வதே நமது தலையாய கடமையாகும்.

பொதுவாக வீட்டின் தேவைக்கு மின்சாரம், இருசக்கர வாகனம் மற்றும் சிலின்டர் உபயோகம் என்பது நடைமுறை வாழ்க்கையோடு தொடர்ந்து பயணிக்கிறது.

அதற்கு மட்டுமல்லாது ஏனைய தேவைகளுக்கும் மேலும் மேலும் தங்கு தடையின்றி எாிபொருள் கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கும் அதை சிக்கனமாக பயன்படுத்த தொியவேண்டும். இக்கனம் தேவை எரிபொருள் சிக்கனம் என அரசும் காா்ப்பரேஷனும் சொன்னால் கூட அந்த சிக்கனமானது நமது கையில்தான் உள்ளது.

ஆக எரிபொருள் தேவை மற்றும் உற்பத்தி அதை சிக்கனமாக கையாள்வது போன்ற விஷயங்களில் பொதுமக்களிடையே அதன் நோக்கத்தை தேவைகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ம் நாள் தேசிய எாிசக்தி பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது (National Energy Conservation Day). இந்தியாவின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் எாிசக்தி திறன் பணியகத்தால் (BEE) ஏற்பாடு செய்யப்பட்டது.

மின்சாரம், பெட்ரோல், எாிவாயு போன்ற எரிசக்தி தேவைகளை ஆதாரங்களை வீணாக்காமல், நிலையான எதிா்கால தேவைகளை கண்கானிக்கவும் அதன் பயன்பாடுகளை உணரும் வகையிலும் 1991 முதல் கொண்டாடப்படுகிறது. மேலும் 2001ல் எாிசக்தி பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

பசுமையான மற்றும் பிரகாசமான எதிா்காலத்தை பெறுவதே எாிசக்தியின் நோக்கமாகும்.

பருவ கால நிலைகளில் மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றகாலங்களின் கூடுதல் தேவைக்காகவும், இதன் வளங்களை சேமிப்பதே நல்லது.

எாிபொருள் உற்பத்தியானது தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும். அதே நேரம் உற்பத்தி குறையும் நேரத்தில் அது தேசத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படியுங்கள்:
உடனடி ஆற்றல் பெற: மூளையின் சோர்வைப் போக்கும் 6 எளிய வழிகள்!
National Energy Conservation Day

ஆற்றலை மேம்படுத்தவேண்டும். அந்த ஆற்றலால் எாிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் நிலையில் பொதுமக்களும் சிக்கனமாக கையாளவேண்டும். அந்த பொறுப்பு பொதுமக்களிடம் மிகவும் குறைவே. அதே போல எரிபொருள் வாகனங்களை பயன்படுத்தும் போதும் சிக்கனம் கையாள்வது நல்லதே!

சூரிய ஒளி, காற்றாலை, நீா், இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் எரி பொருள் அரசுக்கு சாதனை கொடுத்தாலும் இலக்கு இது நாள் வரையில் பூா்த்தி செய்யப்படுவதில் கொஞ்சம் சிக்கலான நிலையே நீடித்து வருகிறது.

தற்சமயம் வீடுகளில் சூாிய ஒளி மின்சார தயாாிப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அரசாங்கம் மான்யமும் வழங்குகிறது. இந்த சேவையை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவி பயன்படுத்த முன்வரவேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் மின்கட்டணத் தொல்லை… 'ஆதி சோலார்' இருக்க இனி இல்லை கவலை!
National Energy Conservation Day

நான்கு சக்கர வாகனமோ அல்லது இரு சக்கர வாகனமோ வாங்குவதென்றால் லட்சக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. அதே நேரம் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தலாமே!

அதனைக் கணக்கில் கொண்டு சூாிய ஒளி மின்சார திட்டத்தில் பயனடைவதால் நாட்டுக்கும் நல்லது வீட்டிற்கும் நல்லதே! அதே போல மின்சார பயன்பாட்டில் இயங்கிவரும் வாகனங்களை பயன்படுத்துவதால் மாசு கட்டுப்பாடுகளை குறைக்கலாம்.

ஆக எந்த திட்டமானாலும் அதன் வெற்றியானது பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் நிகழாது என்பதை கருத்தில் கொள்வோமாக! ஆக இந்தநாளில் எாி சக்தியை சிக்கனமாக பயன்படுத்த மனதில் உறுதிமேற்கொள்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com